குரூப் - 1 தேர்ச்சி: பெண்கள் அபாரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2019

குரூப் - 1 தேர்ச்சி: பெண்கள் அபாரம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய,குரூப் - 1 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின.டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசுப் பணியாளர் தேர்வாணையம், 85 பணியிடங்களுக்காக நடத்திய, குரூப் - 1 முதல் நிலை தேர்வில், 4,500 பேர் தேர்ச்சி பெற்றனர்.

அவர்களுக்கு, 2017ல், முதன்மைத் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள்,2018 டிசம்பர், 31ல் வெளியிடப்பட்டன.இதில் தேர்ச்சி பெற்ற, 176 பேருக்கு, 21ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, நேர்முகத் தேர்வு நடந்தது. முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள், நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன.

அதில், இளவரசி என்பவர், 650.5 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சங்கீதா, 649 மதிப்பெண்கள் பெற்று, இரண்டாமிடம்; இலக்கியா, 642 மதிப் பெண்களுடன், மூன்றாம் இடம்; மந்தாகினி, 641 மதிப்பெண்களுடன், நான்காம் இடமும் பெற்றுள்ளனர்.அதேபோல், தேர்ச்சி பெற்றவர்களில், 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது

2 comments:

  1. Male(50):female(50)% தமிழக அரசே சரிசம இடஒதிக்கீட்டை கொடு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி