5-வது நாளாக தொடரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் : 529 பேர் கைது... 422 பேர் சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2019

5-வது நாளாக தொடரும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் : 529 பேர் கைது... 422 பேர் சஸ்பெண்ட்


 5-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 422 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு வழங்கினார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5வது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களாக பல்வேறு இடங்களில் பள்ளிகள் செயல்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆலோசனையைத் தொடா்ந்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தற்போதைய சூழலில் அரசு ஊழியா்களின் கோாிக்கையை ஏற்க இயலாது. போராட்டக்காரா்களின் கோாிக்கையை ஏற்றால் அது அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை தான் ஏற்படும் என்று அரசு சாா்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

5வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 529 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 110 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 54 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றன.

ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 422 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு வழங்கினார். புதுக்கோட்டையில் ஜாக்டோ - ஜியோ அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் 14பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு வழங்கினார். பூவண்ணன், செல்லதுரை, தாமரைச்செல்வன், யோகராஜா, சாலைசெந்தில்குமார், முத்துச்சாமி,சோமசுந்தரம்,கோலாச்சி,  உட்பட 14பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் திருச்சி மாவட்டத்தில் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நீலகண்டன், தியாகராஜன், சக்திவேல், தென்னிலைஸ்வரன், வெங்கடேசன், சந்திரசேகர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

6 comments:

  1. தனியார் பள்ளி ஆசிரியர்கள்/ வேலையை எதிர்பார்க்கும் ா ஆசிரியர்கள் அனைவரும் மிகுந்த கோபத்தோடு உண்மையை உணராமல் கருத்துகளை பதிவிடுகிறீர்கள்
    இந்த போராட்டம் பணத்திற்காக அல்ல ,உரிமைக்காக
    இதை முழுவதும் தெரிந்துகொள்ள போராடும் நபரிடம் 5 நிமிடம் பேசுங்கள் ,அதன் பின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்

    ReplyDelete
  2. போராடும் நாங்களும் தனியார் பள்ளி ஆசிரியர்களாக இருந்தவர்கள்தான்

    ReplyDelete
  3. தேர்வு வரும் நேரம்

    ReplyDelete
  4. ஜாக்டோ ஜியோவில் 529 பேர் தானா?

    ReplyDelete
  5. Dear teacher don't spoil students life if good teacher please go to school.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி