கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2019

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு


கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ. 1500 வீதம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ.50,000 வரை வழங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதலை யுஜிசிதிங்கள்கிழமை வெளியிட்டது.

இதை அனைத்து மாநில உயர்கல்விச் செயலாளர்களுக்கும், அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ள யுஜிசி, இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் உயர்த்தப்பட்டிருக்கும் இந்த புதிய மதிப்பூதியத்துக்கு, தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி-யின் 537 ஆவது குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கான மதிப்பூதியம் ரூ. 1500 ஆக உயர்த்தப்படுவதாகவும், அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை மதிப்பூதியம் உயர்த்தப்படுகிறது.

கல்லூரிகளில் ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றபோதும், பல்கலைக்கழகங்களில் மட்டும் ஒப்பளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் அதிபட்சம் 20 சதவீத இடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ளலாம்.யுஜிசி-யின் உதவிப் பேராசிரியர் நியமன வழிகாட்டுதலின்படியே கௌரவ விரிவுரையாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, உதவிப் பேராசிரியருக்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களையே தேர்வு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன.

9 comments:

  1. Permanent staff vela seiyama 1 lakh vanguran

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீர்கள் கெளரவ விரிவுரையாளர்களை கொண்டே இப்போதைய அரசு கலை கல்லூரிகளில் பாடம் நடத்தப் படுகிறது அனைத்து தகுதிகளும் பெற்று அடிமைத்தனமாகத் தான் ஆசிரியர்கள் பாடம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் இவர்களுக்கு குறைந்த பட்சம் ₹ 30,000 வழங்கப்பட வேண்டும்

      Delete
  2. ஜனவரி மாதம் முதல் தொகுப்பூதியம் 15,000 த்திலிருந்து 25,000 வரை மாற வாய்ப்பு உண்டு

    ReplyDelete
  3. ஜனவரி மாதம் முதல் தொகுப்பூதியம் 15,000 த்திலிருந்து 25,000 வரை மாற வாய்ப்பு உண்டு

    ReplyDelete
  4. ஜனவரி மாதம் முதல் தொகுப்பூதியம் 15,000 த்திலிருந்து 25,000 வரை மாற வாய்ப்பு உண்டு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி