Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை மாநில அரசின் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு: மத்திய அரசு ஒப்புதல்


7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மாநில அரசுகளின் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், அரசு உதவி பெறும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நீட்டிப்பு செய்ய மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய ஊதியம் கடந்த 2016 ஜனவரி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும், இதனால், அரசுக்குக் கூடுதலாக ரூ.1,241.78 கோடி செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ''7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் மாநில அரசுகளின் ஆசிரியர்களுக்கும், உதவிபெறும் தொழிற்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நேரடியாக 29 ஆயிரத்து 264 ஆசிரியர்கள், கல்வி நிறுவனப் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். ஒட்டுமொத்தமாக 3.5 லட்சம் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்குக் கூடுதலாக ரூ.12,41 கோடி செலவாகும். 50 சதவீத நிலுவைத்தொகையை அரசு வழங்கும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் சாதி பிரிவினருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் அடுத்த கல்வி ஆண்டில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 900பல்கலை, 40 ஆயிரம் கல்லூரிகளில் மாணவர்களுக்கான இடங்கள் 25 சதவீதம் உயர்த்தப்படும்''. இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்

3 comments

  1. Sir ennathan ெசால்றாக

    ReplyDelete
  2. Part time teacher's ku nu yedhachum panuga sir

    ReplyDelete
  3. இவனுங்களையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இப்படி 16000 குடும்பத்தையும் நோகடிக்கவே இப்படி போஸ்டிங் போட்ட அந்த அம்மாவையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. எல்லாருமே வயது அதிகமானவர்கள் அப்படின்னு தெரிஞ்சும் பிள்ளை குட்டிகள் அவர்களுக்கும் உண்டுன்னு தெரிஞ்சும் இப்படி 7700 ருபாய் மட்டும் கொடுத்து பகுதி நேரம் மட்டுமே வேலைன்னு சொல்லி முழு நேரம் மட்டுமல்லாது வீட்லயும் வேலை செய்ய சொல்லி இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் அந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக முடித்து டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற நினைக்கிற கல்வித்துறை அதிகாரிகள் , முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட கல்வி அதிகாரிகள் , தலைமை ஆசிரியர்கள் என இவர்களுக்கும் எங்கள் கஷ்டம் தெரிவதில்லை. வேலையை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க மட்டுமல்லாது எங்களை 11 12 வகுப்பிற்கு பாடம் நடத்த மற்ற பள்ளிகளுக்கும் டெபுடேஷன் போடும்போது கண்களுக்கு தெரியும். மற்ற நேரங்களில் நாங்கள் திட்ட வேலை பணியாளர்கள். அப்படி என்னடா திட்டம்? எங்களுக்கு வயிறு உண்டுன்னு தெரிஞ்சும் எங்க வயித்துல அடிக்காதீங்க. பதினாறாயிரம் குடும்பங்களும் இதை நம்பி பட்டினி கெடக்குறோம். மனசாட்சி யோட எண்ணி பாருங்க. தனியாரை சொல்றேன்ங்க குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுங்கன்னு. அதை விட நீங்க நர்ஸ் போலீஸ் என எல்லா போஸ்டிங் இப்படி போட்டு மொத்த பணத்தையும் வரின்னு பிடுங்கி.... அப்படியும் நிதி பற்றாக்குறை. அப்புறம் இத்தனை கோடி அங்க பிடிபட்டது இத்தனை கோடி இங்க பிடிபட்டது ன்னு செய்தி மட்டும் போடுறீங்க. இதெல்லாம் எப்புடி?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives