வந்தாச்சு பயோ மெட்ரிக் - காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 16, 2019

வந்தாச்சு பயோ மெட்ரிக் - காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்



மதுரை மாவட்டத்தில் ஜன., 21 முதல் 113 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவு துவங்கவுள்ளது.

மாநில அளவில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் இம்முறை அமல்படுத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் முதற்கட்டமாக 261 பயோ மெட்ரிக் வருகை பதிவு கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு பள்ளிக்கு 2 வீதம் 113 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தவிர முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம், மதுரை, திருமங்கலம், மேலுார், உசிலம்பட்டி என நான்கு கல்வி மாவட்ட அலுவலகங்கள், 15 வட்டார கல்வி அலுவலகங்கள், 15 வட்டார வள மையங்களில் இக்கருவிகள் பொருத்தும் பணிகள் நடக்கின்றன.ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் எண்கள் மற்றும் எட்டு 'டிஜிட்' கோடு எண் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர் அல்லது அலுவலர்கள் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு வைக்கும் போது 'கோடு எண்கள்' மட்டுமே ஸ்கிரீனில் தெரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிரத்யேக பயிற்சி பெற்ற 10 கணினி பயிற்றுனர்கள் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளனர். பள்ளிகளில் காலை 8:45 முதல் 9:15 மணிக்குள், பகல் 1:00 முதல் 1:15 மணிக்குள்ளும் ஆசிரியர் வருகை பதிவு செய்ய வேண்டும்.கல்வி அலுவலகங்களில் காலை 10:00 மணிக்குள் அதிகாரிகள், அலுவலர்கள் விரல் ரேகை பதிவு செய்யவேண்டும். இனி, ஆசிரியர், அலுவலர் தாமதமாக பணிக்கு வந்ததை ஏதாவது காரணத்தை கூறி 'சமாளிக்க'முடியாது என்றார்.

15 comments:

  1. இவனுங்களையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. இப்படி 16000 குடும்பத்தையும் நோகடிக்கவே இப்படி போஸ்டிங் போட்ட அந்த அம்மாவையும் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல. எல்லாருமே வயது அதிகமானவர்கள் அப்படின்னு தெரிஞ்சும் பிள்ளை குட்டிகள் அவர்களுக்கும் உண்டுன்னு தெரிஞ்சும் இப்படி 7700 ருபாய் மட்டும் கொடுத்து பகுதி நேரம் மட்டுமே வேலைன்னு சொல்லி முழு நேரம் மட்டுமல்லாது வீட்லயும் வேலை செய்ய சொல்லி இந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் அந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக முடித்து டிஜிட்டல் இந்தியாவாக மாற்ற நினைக்கிற கல்வித்துறை அதிகாரிகள் , முதன்மை கல்வி அதிகாரிகள் , மாவட்ட கல்வி அதிகாரிகள் , தலைமை ஆசிரியர்கள் என இவர்களுக்கும் எங்கள் கஷ்டம் தெரிவதில்லை. வேலையை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க மட்டுமல்லாது எங்களை 11 12 வகுப்பிற்கு பாடம் நடத்த மற்ற பள்ளிகளுக்கும் டெபுடேஷன் போடும்போது கண்களுக்கு தெரியும். மற்ற நேரங்களில் நாங்கள் திட்ட வேலை பணியாளர்கள். அப்படி என்னடா திட்டம்? எங்களுக்கு வயிறு உண்டுன்னு தெரிஞ்சும் எங்க வயித்துல அடிக்காதீங்க. பதினாறாயிரம் குடும்பங்களும் இதை நம்பி பட்டினி கெடக்குறோம். மனசாட்சி யோட எண்ணி பாருங்க. தனியாரை சொல்றேன்ங்க குறைந்த பட்ச ஊதியம் இவ்வளவு கொடுங்கன்னு. அதை விட நீங்க நர்ஸ் போலீஸ் என எல்லா போஸ்டிங் இப்படி போட்டு மொத்த பணத்தையும் வரின்னு பிடுங்கி.... அப்படியும் நிதி பற்றாக்குறை. அப்புறம் இத்தனை கோடி அங்க பிடிபட்டது இத்தனை கோடி இங்க பிடிபட்டது ன்னு செய்தி மட்டும் போடுறீங்க. இதெல்லாம் எப்புடி?

    ReplyDelete
    Replies
    1. Exam pass panni job ku poguravanala kena payana?

      Delete
  2. அதிகாலை 9.15 மணிக்கா???????
    Oh my god!!!!!!!!!! So sad!!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. போச்சா... சோனமுத்தா...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Thirudanai kandu pidithuvidugila.... pongada mutta govt....

    ReplyDelete
  7. மனசாட்சிக்கு பயப்படாத நாட்டாமை மிஷினுக்கு பயப்படுவதை பார்க்க ஆவல்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி