தற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2019

தற்காலிக ஆசிரியர் பணிக்கு 90,000 பேர் விண்ணப்பம்!



'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தால், அரசு பள்ளிகளில் உடனடியாக, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடித்த, 90 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகள், இதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.

தற்காலிக ஆசிரியர் பணிக்கான சம்பளம், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவியத் துவங்கியுள்ளன.வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப, உயர்நீதிமன்றம் விதித்த கெடு, நேற்றுடன் முடிவடைந்ததால், பணிக்கு வராதோர் மீது, நடவடிக்கைபாயத் துவங்கியுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22ம் தேதி முதல், மாநிலம் முழுவதும், வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. ஆசிரியர்களின் பணி புறக்கணிப்பால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 15 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்,அதிக அளவில் உள்ளனர்; அவர்களில் பலர், சங்க நிர்வாகிகளாக உள்ளனர். எனவே, அவர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களால், போராட்டம் தீவிரமடைந்து வருவதும், பணிக்கு வர விரும்பும் ஆசிரியர்களை, அவர்கள் தடுப்பதும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.எனவே, சங்கங்களில் பொறுப்பில் உள்ள ஆசிரியர்களை ஓரங்கட்டும் வகையில், உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், அவசர கடிதம் அனுப்பியுள்ளனர்.அதில், பள்ளிகள் தடையின்றி இயங்கும் வகையில், தற்காலிக ஆசிரியர்களை உடனடியாகநியமிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், 'ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' மற்றும் முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால், தமிழகத்தில், டெட் முடித்த, 90ஆயிரம் பேர், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.சமீபத்தில், டெட் முடித்தவர்களில் பலர், ஆங்கிலம்மற்றும் தொழில்நுட்ப கல்வியிலும் புலமை பெற்றவர்களாக இருப்பதால், அவர்கள் வாயிலாக, அரசு பள்ளிகளின் தரத்தை, வருங்காலத்திலாவது உயர்த்தலாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கெடு முடிந்தது.

எனவே, மாவட்ட வாரியாக, புதிய ஆசிரியர்களிடம் விண்ணப்பம் வாங்கும் பணி துவங்கியுள்ளது.

மாவட்டகல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் குவிந்துவருகின்றன.இதற்கிடையில், வேலைநிறுத்தத்தை கைவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு, உயர் நீதிமன்றம் விடுத்த கெடு, நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, பணிக்குதொடர்ச்சி 4ம் பக்கம்வராதோரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'அனுப்பப்பட்டு வருகிறது.அரசின் நடவடிக்கை பாயத் துவங்கியதும், பல பள்ளிகளில், நேற்று முதல், ஆசிரியர்கள் பணிக்கு வர துவங்கினர். அரசு அலுவலகங்களிலும், வருகை எண்ணிக்கை கூடியது. பணிக்கு வராதோர் பட்டியல், நேற்று எடுக்கப்பட்டுள்ளது.

இதில், இரண்டு லட்சம் பேர் வரை, பணிக்கு வராதது கண்டறியப்பட்டுள்ளது.அவர்களுக்கு முதல் கட்டமாக, நோட்டீஸ் அனுப்பும் பணி, நேற்று மாலை துவங்கியது. நோட்டீசுக்கு, ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால், அரசு பணியாளர் நடத்தை விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

33 comments:

  1. TET pass panni vacant irunthum innum podala. Irukkura posting ellathaiyum kuraikkiraargal. Consolidate pay nnu kedukkureenga. Padichavangala nadutheruvil nikka vachittaanga. Itha ethirthu ketka thuppilla. Govt senja thappu ippadi part time job koduthathu. Atha kekkumpothu neenga ethukku Tension agureenga? Ithil 50 vayathai kadanthu pathi per irukkaanga. TET exam eluthi pass pannavangalum irukkaanga. Methaavigale purichukkonga.

    ReplyDelete
  2. அமெரிக்க மாப்பிள்ளைகளாக நடிப்பதற்கு 90,000 பேர் விண்ணப்பமா?

    ReplyDelete
  3. விரைவில் சட்ட நடவடிக்கை. விரைவில் ஒழுங்கு நடவடிக்கை. விரைவில் தொகுப்பூதியத்தில் தற்காலிக பணிநியமனம்.விரைவில் விரைவில்....

    ReplyDelete
    Replies
    1. விரைவில் என்பதற்கு மினிஸ்டர் அகராதியில் அர்த்தம் தெரியுமா

      Delete
    2. விரைவில் என்பதற்கு மினிஸ்டர் அகராதியில் அர்த்தம் தெரியுமா

      Delete
  4. 90,000 பேர் கௌரவத் தோற்றத்தில்...விரைவில்.

    ReplyDelete
  5. Applicant not issued in vridhachalam deo office

    ReplyDelete
  6. காலை வணக்கம் சார்.

    ReplyDelete
  7. Salem DEO office la application kuduthangala?

    ReplyDelete
  8. அனைத்து தகுதித்தேர்வு முடித்த ஆசிரியர்களே நன்றாக கவனியுங்கள், எல்லாரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரப்போரிங்களா

    ReplyDelete
    Replies
    1. thiramai ilathavan application poduvan jiiii

      Delete
    2. Avanga yepdium thirumba school ku varaporanga ...apram temporary teachers enna panna porinha yen intha vilayatu yepdiyo insult ah aanupavika porinha ok carry on

      Delete
  9. இப்போ ஜாக்டோ ஜியோ நாளைக்கு தற்கால ஆசிரியர்களுக்கும் இதே நிலைமைதான் ஒலுங்கா சம்பளம் தர மாட்டானுங்க 6 மாசத்துக்கு ஒரு மாத சம்பளம் தான் தருவார்கள் யார்ட கேட்பீங்க ... எப்போ வெளிய விரட்டுவாங்கனே தெரியாது..

    ReplyDelete
    Replies
    1. 10000ஆயிரம்


      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

      Delete
    2. Teachers ah inthalavuluku crush panranha application vangaravangalium serthu than solren enna panrathu ?

      Delete
  10. சோரு திங்கர எவனும் இந்த வேலைக்கு போகமாட்டான். . ...

    ReplyDelete
    Replies
    1. Correct soru illama pattini irukurathu nalathan porom vidunga pa pizza burger iruku... Ellathumea alternative iruku... Ni retirement pathi yosuchu porada avan avan daily vazhurathuku kasu illama poradan avanuku intha 10000rs perusu

      Delete
  11. ஒரு மாத்த்திற்கு தற்காலிக ஆசிரியர் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்...ஒரு மாத்த்திற்கு பின் மீண்டும் வேர வேலை தேட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்..போராட்டம் நீண்ட நாள் தொடர வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது...எனக்கு தெரிந்த AEO எனக்கு கூறிய அறிவுரை இது

    ReplyDelete
  12. உள்ளூரில் வேலை இல்லாமல் ....இருப்பவர்கள் வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்....வேறு ஏதேனும் வேலையில் ஒட்டிக்கொண்டு பிழைப்பை ஓட்டும் என் போன்ற ஆசிரியர் நண்பர்கள் இருக்கும் வேலையை இழந்து விட வேண்டாம்(கப்பல்ல வேலைன்னு சொல்லி யாரும் போய்டாதீங்க)

    ReplyDelete
  13. paper1 pass pannavangalum apply pannalama? pls sollunga

    ReplyDelete
  14. This is temporary job. Don't loose permanent job

    ReplyDelete
  15. Ponga 10 days KU apuram porattam mudinja return vanthiduvanga, earkanave posting podama eamathuranga ,idaiyile mudiki vidaporanga yosichi ponga

    ReplyDelete
  16. கேனப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி