ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி - அமைச்சர் ஜெயக்குமார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2019

ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி - அமைச்சர் ஜெயக்குமார்


ஜாக்டோ-ஜியோவினர் பிடிவாதம் பிடித்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், போராட்டத்தை கைவிட்டு அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை ஆசிரியர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசு வருவாயில் 71 சதவீத பணம் அரசு ஊழியர்களின் சம்பளம், மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளுக்கு செலவாகிறது என்று தெரிவித்த அவர், 29 சதவீத தொகை தான் மக்கள் நல திட்டங்களுக்கு செலவிடப்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அச்சுறுத்த நாங்கள் என்ன பங்கரவாதிகளா? என்று கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், போராடும் அரசு ஊழியர்களை அரசு அச்சுறுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

7 comments:

  1. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க சார்!?

    ReplyDelete
  2. மீன்வளத்துறை அமைச்சரே உங்களுக்கும் பள்ளிக்கும் என்ன தொடர்பு

    ReplyDelete
    Replies
    1. அந்த 71%த்தில் 32%MLA&CM க்கு செலவு.

      Delete
  3. போடா சொட்டைத்தலையா கல்வித்துறை மற்றும் ஆசிரியர்களைப்பற்றி உனக்கு என்ன தெரியும்.....

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் சொல்ல கூடாது இந்த படிக்காத மேதாவியை. டைசன் மாமா.

      Delete
  4. அவரு அவரு department poi pakka soll unga angaiyum prachani

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி