அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இடைக்கால உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2019

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இடைக்கால உத்தரவிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை


அரசின் நிதிநிலைமை தொடர்பான விவகாரங்களில் தலையிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. அரசு ஊழியர் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கால உத்தரவு போடமுடியாது எனவும் அரசு ஊழியர் போராட்டம் பற்றிய பொதுநல வழக்கில் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபடாமல் வழக்கு தொடுத்து இருந்தால் அரசிடம் கேட்டு முடிவெடுத்திருக்கலாம்.

சட்டரீதியாக போராடாமல் ஏன் தெருவில் இறங்கி போராடுகிறீர்கள்? என ஜாக்டோ-ஜியோ அமைப்புக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கோரிக்கைகள் குறித்து அரசும் - ஊழியர்களும் தான் பேசி பிரச்னையை தீர்க்கவேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் போராட்டத்தினால் தீர்வு ஏற்படாது என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

முன்னதாக தமிழக அரசு மீது ஜாக்டோ ஜியோ தரப்பினர் நீதிபதியிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர். அதில் போராட்டம் நடத்தும் அரசு ஊழியர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக தமிழக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்த கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் புது பிரச்சனையை அரசு உருவாக்குகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். அரசு ஊழியர் போராட்டம் குறித்து லோகநாதன் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை பிப்.18-ம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி