ஜாக்டோ ஜியோ போராட்டம்; மாணவர்கள் கல்விப் பயில விஜய் ரசிகர்களின் புதிய முயற்சி: பெற்றோர் பாராட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம்; மாணவர்கள் கல்விப் பயில விஜய் ரசிகர்களின் புதிய முயற்சி: பெற்றோர் பாராட்டு


ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு இடைநிலைப்பள்ளியில் மாணவர்கள் கல்விக்காக இரண்டு ஆசிரியர்களை நியமித்து பாடம் எடுக்க வைக்கும் விஜய் ரசிகர்களை பெற்றோர் பாராட்டியுள்ளனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். இதனால் அலுவலகப் பணிகளும், மாணவர்களுக்கு கற்பித்தலும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

போராட்டத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்களால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதற்கு அரசாங்கமும் காரணம் என்பதை ஏன் பார்க்க மறுக்கிறார்கள் போராட்டம் நடத்த எங்களுக்கு ஆசையா என போராடும் தரப்பு கேள்வியாக உள்ளது. ஆசிரியர்கள் போராட்டத்தால் மாநிலம் முழுவதும் பள்ளிகள் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் சின்னியகவுண்டன் புதூரில் உள்ள ஆரம்ப பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரையில் பயிலும் 94 மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் இல்லாததால், கல்வி பயில சிரமம் ஏற்பட்டதை கண்ட விஜய் ரசிகர்கள் ஒரு புதிய முயற்சியை எடுத்தனர்.தங்களுக்குள் பணம் வசூல் செய்து இரண்டு பயிற்சி ஆசிரியர்களை ஏற்பாடு செய்த அவர்கள்அவர்கள் மூலம் அந்தப்பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் கல்விப்பயில ஏற்பாடு செய்தனர்.

 இதனால் மாணவ மாணவியர்கள் தடையின்றி பள்ளிக்கு வந்தனர்.கட் அவுட்டுக்கு பாலூற்றும் வேலை மட்டுமல்லபெற்றோர் வயிற்றில் பால் வார்க்கும் நற்செயலையும் செய்வோம் என எடுத்துக்காட்டாக இருக்கும் திருப்பூர் விஜய் ரசிகர்கள் இணைந்து செய்யும் ஆக்க பூர்வ பணிகளை பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர்.

4 comments:

  1. நன்றி உங்களுக்கு தான் நாங்கள்
    போராடுகிறோம் இளைஞர்களே

    ReplyDelete
  2. Vijay rasigargal kuvathoor la mla yelam irudhapa makkal padhika Pattaga apo ooruku 2 mla appointment Pani sattasabai nadathalam la.

    ReplyDelete
  3. IPA strike nadakaradhey youngsters kagadhan nu purijikadha Vara ipadidha techers na kevalama nenaipiga ipa nadakara strike ungaloda velaivaippukumdha.jallikattu poratatha nambaluku mukiyam nu poradina ungaluku namba makkal varipanam arasaga thuraiku Payanpadama veenagudhey idhalam kekamatiga ketu naga strike pana nagalam ketavaga

    ReplyDelete
  4. Yes it's not techers strike it's government officers strike ye oru oru officekum oru naalu pera anupuga.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி