அரசின் எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2019

அரசின் எச்சரிக்கையை மீறி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்


தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்  உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

2 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு கட்ட போராட்டங்களை ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்தினார்கள். இதை ஏற்று அரசு நியமித்துள்ள வல்லுனர் குழு அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கையை சமீபத்தில் தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பு அரசிடம் இருந்து வரும் என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரையில் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனையடுத்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வழக்கு தள்ளுபடி

ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மாணவர் கோகுல் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், உயர்நீதிமன்ற கிளையில் உள்ள வழக்குடன் இணைத்துக் கொள்வதாக கூறி மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து மனுவை வாபஸ் பெற அனுமதியளித்து உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

போராட்டத்தை கைவிடுங்கள் - அமைச்சர் வேண்டுகோள்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்வு நெருங்கும் நேரத்தில் தொடர் வேலைநிறுத்தம் கூடாது என்றும், முதல்வருடன் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும் வேலைநிறுத்தத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பள்ளிகளுக்கு  பூட்டு

திருப்பூர் குமார் நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, நாமக்கல் கூனவேலம்பட்டி தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகள் திறக்காததால் மாணவர்கள் அவதியுற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருவதால் பள்ளிகள் திறக்கவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாணவர்கள் போராட்டம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்துக்கு எதிராக ராசிபுரம் அருகே மாணவர்கள் போராட்டம் நடத்தினர். சுனவேலம்பட்டி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உளப்பட 6 ஆசிரியர் வரவில்லை. பள்ளிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

42 comments:

  1. அரசு பள்ளிகளை தனியார்மயம் ஆக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டில் யாரும் படிக்க முடியாது

      Delete
    2. எல்லாமே சரியாகிடும் சரி, எதெல்லாம் சரியாகும்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோம்

      Delete
  2. Ipa matum part time tecahers gov kannuku therivaga mathanaal la la part time tecahers pathi avaga kandukamataga

    ReplyDelete
    Replies
    1. Part time job yeen poringa. Ethavathu exam pass panniya Antha job ku poninga...

      Delete
    2. Exam pass pannittu wait pandrom antha posting mattum pottangala part time 8 years aka poguthu athuvum permanent illa nangala intha posting poda sonnom ellam enga thalai eluthu

      Delete
  3. அப்படியே தமிழ்நாட்டையும் வித்துடுங்டா இன்னும் நல்லாஇருக்கும்......

    ReplyDelete
  4. விக்கிறத்துக்கு காரணமே நீங்களாதான் இருப்பீங்க வருமாணம் இல்லாத துறைக்கு இவ்வளோ நிதி ஒதுக்கினா....

    ReplyDelete
    Replies
    1. Ama pa correct varumanamey illa so pasagaluku padipu soilitharama school la serthama tasmac la job ku serthu viduga varumanam neraya varum.

      Delete
    2. Factu directa tasmac la sethu vitrunga varumanam kottum.unga mathiri aalunga iruntha tamilnataye hindi karanuku eluthiruvanga

      Delete
    3. கல்வி இலவசமாக இல்லனா நாம கட்டுற GST எங்க போகுது

      Delete
    4. எல்லாமே வருமானம் வர துறையாவே இருந்தா எதுக்கு இவளோ வரி வசூல்

      Delete
  5. நண்பரே வருமானம் முக்கியமா எதிர்கால சந்ததியினர் உருவாக்குவது முக்கியமா?!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ethirkala santhathi epati uruvakuthu headmaster thanni atichutu class etukura kathaiyum natakuthu enbathai marakavendam

      Delete
  6. Patithavanuku velai illaye apparam y patika vaikuringa

    ReplyDelete
  7. அப்ப ஏன் அரசுப்பள்ளிய விட தனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்கை அதிகமாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. Veen gowravan.pahatuhaha povathuthan thaniyar palli

      Delete
  8. கல்வித் துறை வருமானத்துறை இல்லை சேவை

    ReplyDelete
  9. Naalaiya varumanathai theermanippathe kallvi thurai than

    ReplyDelete
  10. உனக்கு இதில் கண்ட் பண்ண எழுத்து அறிவித்தவர் ஆசிரியர் மறக்க வேண்டாம்

    ReplyDelete
  11. இரண்டு பேர் வாங்கிற சம்பளத்தை ஒருவரே வாங்கி கொண்டால் எதிர்கால சந்ததினருக்கு என்ன எதிர்காலம் இருக்கு

    ReplyDelete
  12. VIP களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. கல்வி கல்வி என்று விவசாய நிலங்களை அழித்ததுதான் மிச்சம்

    ReplyDelete
  13. சரிடா வாங்கு

    ReplyDelete
  14. போராட்டம் என்பது உரிமையை மீட்பதற்காக உரிமையை மீட்போம்

    ReplyDelete
  15. ஊதிய போராட்டம் அல்ல இது

    ReplyDelete
  16. மீடியாக்கள் வெளியிடும் செய்திகள் மேலோட்டமானது..

    ReplyDelete
  17. இதில் comment செய்யும் அனைவரும் தயவு செய்து, போராட்டத்தின் உண்மைத்தன்மையை உணருங்கள்.

    போக்குவரத்து ஊழியர் போராடினால்.. மக்கள் நலன் பார்க்க மாட்டார்கள் எனக் கூறுவது. ஆசிரியர் போராடினால், மாணவர் நலன் காக்க மாட்டீர்களா எனக் கேட்பது. இதுவே நம் தொழில். அவர்கள் தங்கள் உரிமைகளை மீட்கப் போராடுகிறார்கள்.

    Apolloல இட்லி சாப்பிட்டதுக்கு 74 கோடி செலவு. மணிமண்டபம் கட்ட செலவு, பேனர் வைக்க செலவு. நூற்றாண்டு விழாவிற்கு செலவு. ஐந்து ஆசிரியர் இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு ஆசிரியர் மட்டுமே. பொறியியல், பாலிடெக்னிக் 90% காலிப்பணியிடம்.. இப்படி எதையுமே கண்டுக்கொள்ளாமல் இந்த அரசு மெத்தனமாக இருந்தால் போராட்டம் மட்டுமே தீர்வு.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் போராட்டம்னா கேள்வி கேட்க line la nippanunga ஒரு இட்லி 75000 ம்னா கேட்க நாதி இல்ல.teachers poradi poradi than vaanga vendi iruku

      Delete
    2. 4கோடி இளைஞர்கள் சேர்ந்தால் நாடே நமதே..!

      Delete
    3. இவ்ளோ பேசுறீங்களே இன்னமும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களாக பலவருசமா வேலை பார்த்துகிட்டு சம்பளமும் கூட்டமா விலைவாசியோட போரடா முடியாம எத்தனை மக்கள் கஷ்டபற்றங்கன்னு தெரியுமா இந்த அரசாங்க வேலை பாகுறவன்களுக்கு எவ்ளோ கொடுத்தாலும் காணாது

      Delete
    4. Ji till now there are so many beggers in our country then what the hell politicans earn more than his generation ...do u have guts to ask them if u ask them we are answerable to you

      Delete
  18. 4கோடி இளைஞர்கள் சேர்ந்தால் நாடே நமதே..!

    ReplyDelete
  19. ஒரு நாள் போராட்டக் களத்திற்கு வாருங்கள் உண்மை புரியும்...

    ReplyDelete
  20. Ayyo pavam intha govt teachers morning to evening evvalavu kashtappattu teach pandranga .. salary also very low... please govt consider their requst😍😍😍

    ReplyDelete
    Replies
    1. Vimal Babu sir... U r really good in Ur perspective but in our perspective we feel ill so asking for the rights. If u know the meaning for the word "rights" then u won't talk sir....

      Delete
  21. Nakkala tholare. Sambalathukkana porattam illai ithu. Veliyil ninnu vedikkai parkkaravangaluku thappaga thirikkappatta thahavalkale varugirathu. Namakku vantga thane ratham, mathavangaluku vantga thakkali chutney tholare. Valthukkal. Ungal vayitrerichal valga.

    ReplyDelete
  22. geo members ku indha comments parpagala matagalanu theriyala sir part time teachers yarum ungaludha against anavagalam illa sir naga vagara salary 7700 adhula family ah run pandradhu kastam sir naga yelam temporary sir ungaluku salary matudha pidipaga yegala velaya vitey yeduthuruvaga adhuga matudha naga job porom idhula 7 years ku aparam velaya vitu yedutha again vera job poradhukula yevlo kastam Konjama Konjama sethutu irukom sir gov against ah yegala la yendha poratathulayum kaladhuka mudiyala.thondil la matina meen pola irukom sir pls understand part time teachers sir.naga against ah irukaradha nenachi korikaila kuda part time techers pathi nega pesaradhila pls support us sir

    ReplyDelete
  23. செங்கொட்டை த இருக்கற வரைக்கும் உருப்படாதூ

    ReplyDelete
  24. பரியாத ஆட்களிடம் வாதாடாதிங்க சார்

    ReplyDelete
  25. பரியாத ஆட்களிடம் வாதாடாதிங்க சார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி