வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2019

வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்


வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளைக் களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும் 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போராட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அப்போது, நீதிபதிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடப்படுவதாக அறிவித்தனர். அதன் பின்னர், அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காததை அடுத்து, இன்று முதல் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார் செங்கோட்டையன். 

6 comments:

  1. Ok deivame tomorrow we return to school ... you are equal to God.. we never disobey your words... kalvi pidamagan vazhka..

    ReplyDelete
  2. தெய்வமே ஆசிரியர்களுக்கும் எதிர் காலம் உண்டு அத கவனிங்க

    ReplyDelete
  3. Neeng அரசு ஊழியர்களின் எதிர்காலம் அறிந்து பென்ஷன் திட்டத்தை அமல்படிதலாமே

    ReplyDelete
  4. நீங்க ஒத்துழைத்து போகமாடிங்க, அரசு ஊழியர்கள் மட்டும் போகணுமா, உங்க அப்பன் வீட்டு பணத்தைய கொடுகிறிங்க, எங்க வரிப்பணம்

    ReplyDelete
  5. ஆட்சி மாற்றம் அதுவே சரியான தீர்ப்பு, dmk வும் இதுதான் பண்ணும், ஒரு புது கொள்கை உள்ளவர்கள் வந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு விடிவு பிறக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி