இரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வில் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2019

இரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆய்வில் தகவல்


இரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல், எட்டாம் வகுப்பு மாணவர்கள் உள்ளதாக, தனியார் நிறுவனம்நடத்திய, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டில்லியில் இயங்கும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பின் சார்பில், வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம், நாடு முழுவதும், 596 மாவட்டங்களில், 17 ஆயிரத்து, 730 கிராமங்களில் ஆய்வு நடத்தியுள்ளது. 3 - 6 வயது குழந்தைகள், 5.46 லட்சம் பேரிடம், வாசிப்பு திறன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள், அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டுள்ளன.இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரியவந்திருப்பதாவது:தமிழகம், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகியவற்றில், தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் வருகை, 85 சதவீதம் பதிவாகியுள்ளது. பீஹார், உ.பி., மேற்கு வங்கம், மணிப்பூர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 60 சதவீதத்துக்கு குறைவாகவே, மாணவர்கள் வருகை உள்ளது.தமிழகத்தில், பெரும்பாலான பெண் குழந்தைகள், எட்டாம் வகுப்பு வரை, பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை, 2014க்கு பின் உயரவில்லை. எல்.கே.ஜி., - யு.கே.ஜி.,யில், பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில்சேர்கின்றனர்.ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இரண்டாம் வகுப்பு பாடம், தமிழில் வாசிக்க வழங்கப்பட்டுள்ளது. அதில், எட்டாம் வகுப்பில், 27 சதவீத மாணவர்கள், வாசிக்க தெரியாமல் இருந்துள்ளனர். ஒன்று முதல், 99 வரையான எண்கள் தெரியாமல், எட்டாம் வகுப்பில், 22 சதவீத மாணவர்கள்திணறியுள்ளனர்.

மேலும், அரசு பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு மாணவர்களை மட்டும்,வகுப்பறையில் ஆய்வு செய்ததில், 66 சதவீதம் பேர், வேறு வகுப்புகளில் ஒன்றாக அமர வைக்கப்பட்டுள்ளனர். மாணவியருக்கு, 86 சதவீத பள்ளிகளில், தனி கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. 16 சதவீத பள்ளிகளில், நுாலக வசதி இல்லை. 29 சதவீத பள்ளி களில், உடற்கல்விக்குஆசிரியரே இல்லை; 6 சதவீத பள்ளிகளில் மட்டுமே, தனியாக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

3 comments:

  1. ₹ 85000 சம்பளம் வாங்குபவர்கள் கொஞ்சம் இந்த செய்தியை படியுங்கள்.

    ReplyDelete
  2. ஐயாசெல்வம் கல்வியாண்டில்ஒரு நாள் பள்ளி வந்தாலே அவன் எட்டாம்வகுப்பு வரைதேர்ச்சி செ ய்யப்படவேண்டும் உங்க கல்விதிட்டம் அப்படி உள்ளது இவ்வளவுதான் முடியும் நீங்க அரசு ஆசிரியரா வாங்க அப்பதான் நிலை மை புரியும்

    ReplyDelete
    Replies
    1. 35 மார்க் வாங்க இயலாமல் எந்த பிள்ளைகளும் பிறப்பதில்லை.படிக்கும் பிள்ளைகளுக்கு வழிகாட்டிகள் தேவை இல்லை.நாங்களும் தேர்வு எழுதி பணிக்கு வந்தவர்கள் தான்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி