Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்


அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடுப்பில் சென்றனர்.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இருக்கும் 2,382 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.,-யூ.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்படுகின்றன.

இதனை ஜன., 21 ல் முதல்வர் துவக்கி வைக்கிறார். எல்.கே.ஜி.,-யு.கே.ஜி., வகுப்புகளை நடத்த உபரி பெண் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணிநிரவல் செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்படி ஒன்றியம் வாரியாக உபரி பெண் ஆசிரியர்களை கணக்கெடுத்து, பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டன.அதில், 'ஜன.,18 ல் (நேற்று) பணியில் சேர வேண்டும்' தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஆசிரியர்கள் பணியில் சேராமல் விடுப்பில் சென்றனர். சிலர் உத்தரவை வாங்க மறுத்தனர்.

ஆசிரியர்கள் கூறியதாவது:

 எல்.கே.ஜி.,-யு.கேஜி., குழந்தைகளுக்கு கற்பிக்க மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அவர்களுக்கு வாய்ப்புத் தராமல் இடைநிலை ஆசிரியர்களை தகுதி இறக்கம் செய்து அங்கன்வாடி மையங்களில் நியமிப்பது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்த்து சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. விரைவில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அதுவரை பணியில் சேரமாட்டோம், என்றனர்.

14 comments

 1. ஆசிரியப்பணி அறப்பணி என்பர்'இதில் தகுதி இறக்கம் என்ற பேச்சிற்கே இடமில்லை PG Teachers 7,8 ,9 classes handle செய்யவில்லையா?

  ReplyDelete
 2. Ungaluku puriavillaya sis.சத்துணவை மூடிவிட்டு lkg ukg ya.saapatukahave ethanayo children schoolku varanga..Tamilnadu seekiram Hindi naada maruvatharku ithuthan first stone..

  ReplyDelete
 3. avunga avunga qualified experience ku related a
  Class kuduthathan pani sirakum..quality a konduvaramudium..chemistry teacher maths edukamudiuma..? maths teacher chemistry edukamudiuma..? Tamil natula enamo nadakuthu.. kadaisila students than paathipadaivanga.. bsc msc classes edukira university, college professors a inimel inga ukg Lkg classes eduka sonalum aachariyapada onum ila..

  ReplyDelete
 4. Posting kitacha teachers eppadi than students ah mathikirathu kidaiyathu. Apuram epti government schools la students padikka varuvanga. Coming soon all government school closed.

  ReplyDelete
 5. Exam vaikkumpothu 1 to 5 th handle panrathukku sollittu intha basisla appoint panna appuram illa neenga anganvadikku poganum sonna enna niyayam.ithe vera departmentla ithupola nadathirundha athuppangala.

  ReplyDelete
 6. Todays govt teachers are main cause to lagging admission in govt schools.In future automatically govt schools and govt teachers will disappear

  ReplyDelete
 7. Amicherkali thiya soll solla vandam because neengal avargal nelamaiyel erunthu parthal pruyum.

  ReplyDelete
 8. அப்போ டெட் தேர்வு எப்போது

  ReplyDelete
 9. AIDED SCHOOL VACANT FOR BT TEACHER IN CHENNAI FOR
  1.SCIENCE GENERAL
  2.SOCIAL SCIENCE GENERAL (MALE/FEMALE)
  9884845679
  7010425341

  ReplyDelete
 10. மாணவர்களை 35 mark எடுக்க வைக்க முடியாமல் m.phil படித்து என்ன பயன்.

  ReplyDelete
 11. நாற்காலியில் மகாராஜா மகாராணி போல் தோரணையாக அமர்ந்து குழந்தைகளை புத்தகத்தை வாசிக்கச் சொல்லி பாடத்தை முடித்து ஏதோ சாதித்தார் போல பல்லைக் காட்டும் நாட்டாமைகள் & பண்ணையாரம்மாக்கள் இருக்கும் வரை 35 என்ன, 3க்கே முக்கணும் நம் பிள்ளைகள்.

  ReplyDelete
 12. Replies
  1. Pass pannavangalukke innum posting podala. Ithula puthusa exam venuma Ungalukku

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives