உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி தமிழக உயர்கல்வி செயலர் மன்னிப்பு கோரினார்: கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 9, 2019

உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி தமிழக உயர்கல்வி செயலர் மன்னிப்பு கோரினார்: கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாததால், கைது செய்ய உத்தரவிடப்பட்ட தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்.

உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை மீறி பாரதியார் பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மையங்களை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஆஜ ராக உத்தரவிட்டும், உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா நேரில் ஆஜராகவில்லை.இதையடுத்து, அவருக்கு பிணையில் வரக்கூடிய பிடியாணை பிறப்பித்து, அவரை கைது செய்து ஆஜர்படுத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் முன்பாக மங்கத்ராம் சர்மா சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, இந்த கைது உத்தரவை திரும்பப் பெறுமாறு கோரி, மனுதாக்கல் செய்தார்.

அதன்படி, நீதிபதி என்.கிருபாகரன் முன்பு உயர்கல்வித் துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா நேற்று மதியம் ஆஜராகி, நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி னார். இதையடுத்து, அவருக்குஎதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி யாணை உத்தரவுதிரும்பப் பெறப் பட்டது.அப்போது நீதிபதி, ‘‘யுஜிசி விதிமுறைகளுக்குப் புறம்பாக பல்கலைக்கழகங்கள் செயல் படக் கூடாது. சிறந்த கல்வியாளர் களைக் கொண்ட சிண்டிகேட்தவறான முடிவை எடுக்கக் கூடாது. ஆண்டுதோறும் பொறியியல் பட்டதாரிகளைத்தான் உருவாக்கு கிறோமே தவிர,சிறந்த பொறி யாளர்களை அல்ல. மாணவர் களுக்கு தரமான கல்வி வழங்கப் பட வேண்டும் என்பதில் எள் அளவும் சமரசம் கிடையாது’’ என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடையை மீறி தொலை தூரக் கல்வி மையங்கள் தொடங்க அனுமதி அளித்து சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றியது குறித்து விரிவான அறிக்கை தாக் கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி என்.கிருபாகரன், விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி