தமிழக அரசுக்கு மேலும் சிக்கல்; ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2019

தமிழக அரசுக்கு மேலும் சிக்கல்; ஜாக்டோ - ஜியோவுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள்


ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன.

தினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க தமிழக  அரசு பல்வேறு வழிகளில் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மிரட்டியது. அடுத்ததாக போராடும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்று அரசு அதிரடி காட்டியது.

ஆனாலும் போராட்டம் தீவிரமடைந்ததால், மறியல் செய்து கைதானவர்களில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை மட்டும் சிறையில் போலீசார் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களை கோரிக்கைகளை ஏற்று அவர்களை உடனடியாக பணிக்கு திரும்ப வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

உளுந்தூர்பேட்டையில் ஆர்பாட்டம்

உளுந்தூர்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பள்ளி மாணவர்கள் ஆர்பாட்டம்

ஜக்டோ - ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் பள்ளி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை செங்குன்றம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி