அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2019

அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு


தமிழகத்தில் அரசு  கலை, அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும்என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில்  91 அரசு கலை அறிவியல்  கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 50 கல்லூரிகள் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன.

தற்போது இக் கல்லூரிகளில்  2,500 விரிவுரையாளர் பணியிடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015-இல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை. மேலும், கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்ட 3,544 பேரில் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்த கல்வித் தகுதிகளை 1,330 விரிவுரையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.முறையான கல்வித்தகுதி இல்லாதவர்களால், மாணவர்களுக்கு சரியான கல்வியை கற்றுக்கொடுக்க முடியாது. கடந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரிகளில் 264 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 இதனால் விரிவுரையாளர்கள் பணி இடங்களும் அதிகரித்துள்ளன.   எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை, யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

 மனுவை விசாரித்தநீதிபதிகள், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களைநிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

7 comments:

  1. Government should take immediate action and to fill 2500 post before MP ELECTION.

    ReplyDelete
  2. நீதிபதிக்கு மயக்கம் வராமாதிரி ஒரு அறிக்கை கொடுக்கும் அரசு......படிச்சி காத்து இருப்பவர்களுக்கு ......BP....sugar....தைராய்டு.....இன்ன பிற வியாதிகள் அதிகமாகும்.......அடுத்த சட்டமன்ற தேர்தல் வரும்போது ஆள் எடுப்பதாக சொல்வார்கள்......


    நம்பாதீர்கள்........எல்லாம் நாடகம்....பேப்பரில் புள்ளி விவரங்கள் கொடுத்தால் நீதிமன்றம் ஏற்கும்.......

    நீதிக்கு நியாயம்....தர்மம் தெரியாது.....

    ReplyDelete
  3. next assemly election very long may kula ivangala veetuku anupunathan elarukum nalathu..rembavea paduthi eduthutanga..very worst govt..

    ReplyDelete
  4. Even exam will be conducted, post will not be filled

    ReplyDelete
  5. Government should be immediate action. But I can't belive this announced. its possible way all guest faculties are benefit.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி