ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு


ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த தலைமைச் செயலக சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 28, 29ம் தேதிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனித சங்கிலி ஊர்வலம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6 comments:

  1. Don't worry jactto geo members government temporary techers potu students education ku help pandraga so neega students pathi kavala padama poratam continue panalam 😂😂😂😂

    ReplyDelete
  2. Comment பண்ற லூசுப் பசங்களா..

    இந்தப் போராட்டத்தின் உண்மைத்தன்மை.. பயின்று வந்த நிலை எல்லாம் சரியாகப் புரந்துக் கொண்டு comment போடுங்கடா..

    நீங்க கொந்தளிக்க வேண்டியது அரசை நோக்கி.. இவர்களை நோக்கி அல்ல..

    இந்த அரசு கல்வித்துறையில் ஒரு வேலையும் செய்யவில்லை என்பதற்கு 2017, 2018 annual planner தான் சாட்சி

    ReplyDelete
  3. முட்டாள் பய மாதிரி யாரோ ஒரு unknown negative message போடுது. Teachers strike is absolutely right.

    ReplyDelete
  4. *புரிதலற்ற பதிவுகளால் அரசு ஊழியர் போராட்டத்தை கொச்சைப் படுத்துபவர்களுக்கு*

    தமிழனைப் பொறுத்தவரை திடீர் சம்பவ கொந்தளிப்பாளராகவே வாழ்கிறான்

    அரசு ஊழியன் என்பவன் பணியாளன் அவ்வளவே நாட்டில் நடக்குற அத்துணை அநீதிகளுக்கும் அவனே காரணமல்ல

    வரும்போது ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு?
    அவன தூக்குங்க ஆயிரம்பேரு இருக்கானு பொங்குறவன்
    ஒன்னு வேல கெடக்காதவனா இருப்பான்
    இல்ல
    வேலைக்கு லாயக்கு இல்லாதவனா இருப்பான்.
    இல்ல
    அடுத்தவன் ஆக்கி வச்ச சோற நோகாம திங்க வாய ரெடிபன்னி வச்சவனா இருப்பான்?

    இன்று அவர்கள் பெறுகிற 5 இலக்க ஊதியம்
    அப்பாயின்மெண்ட் ஆர்டர் அடிச்சதுமே வாங்குனது இல்ல

    பத்து பதினைந்து வருட உழைப்பின் பலன் so கொச்சயான வார்த்தைகள் வேணாம்.

    அதோடு நில்லாது அவர்களின் நியாயமான ஊதிய முரண் ஊதிய உயர்வு சம வேலை சம ஊதியம்
    இறுதியாக நாளதுவரை வாழ்வாதாரமாக நினைத்து வரும் ஓய்வூதியம்

    இதை முன் வைத்தே போராட்டம்

    இந்த கோரிக்கைகளோடு போராட்டம் தொடங்கியது 2017ல்
    இன்று 2019 செய்றேன் செய்றன்னு சொம்படிச்சி கரிபூசுன அரசின் ஏமாற்று வேலைக்கு அவர்கள் எடுத்துள்ள இறுதி ஆயுதம் இப்போராட்டம்.

    Cps எனும் திட்டத்தில் வசூல் செய்த 35000 கோடிக்கு அரசிடம் இதுவரை முறையான கணக்கில்லை

    சில சொட்டபஞ்சாயத்து போன்ற அமைப்புகளும் திடீர் ஞானோதய புரட்சியாளர்களும் அரசு ஊழியரை ஆசிரியரை கொச்சைப்படுத்துகின்றனர்.

    அரசு கல்வி மருத்துவம் இவைகளை இலவசமாக தரனும் தனியார்மயம் இருக்க கூடாதுனு வரிகட்ற பொதுஜனம் ஏன் இன்னுங்கூட சிந்திக்கல??
    தனியார்பள்ளிய மூட ஒன்றாக சேர்ந்து போராடலாமே?

    ஒரு எம்எல்ஏ எலெக்சன்ல நின்னார்.
    ரிடல்ட் வர்ரதுக்குள்ள அவருடைய உடல் நிலை பாதிக்கப்படுகிறது. ரிசல்ட்டு வருது அவரு ஜெய்க்கிறார். ஆனா அவர் உயிரோட இல்ல. ஆனா ஜெய்ச்ச ஒரே காரணத்துக்காக அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியம்...
    ஆனா 20 வருசம் வேலபாக்குற வாத்தியார் சாக்பீஸ் கரையோட கம்முனு போயிரனும் அதானே?

    நீதியரசர் எம்எல்ஏ னு எல்லாரும் 21 மாத ஊதிய நிலுவைய ரொக்கமா வாங்குனாங்க
    ஒத்த பைசா வாங்காம அதாவனு அவங்களுக்கு போட்ட பட்ட நாமத்த எதிர்த்து போராடுனா
    வரிபணம் வீண் ?
    என்னே ஒரு சிந்தை..

    களைகள் நிறைய இருக்கு அதை அறிவால் களையுங்கள் பொதுமக்களே

    லஞ்சம் வாங்குறவன செருப்பால அடி
    சட்டைய புடிச்சி உலுக்கு
    ஒருங்கா வேலபாக்குலனா படம்புடிச்சி உலகத்துக்கு காட்டு

    அத விட்டுட்டு அவன் வேலய நீ வாங்க ஆசப்படாத..

    போராட்டமின்றி விடுதலை கூட கிடைத்ததில்லை

    இதுவே உங்கள் அக்கறை மிகுந்த அய்யத்திற்கு விடை


    *வெல்வோம் இணைந்து*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  5. பொதுமக்களுக்கு ஜாக்டோ ஜியோ வின் அன்பான வேண்டுகோள்.
    தங்களுக்கு மகனோ, மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ இருந்தால் கட்டாயம் இதை முழுமையாக படியுங்கள்.

    தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சம்பள உயர்வுக்காக அல்ல எங்களின் 21 மாத சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்பதற்காக.

    நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து யாராவது குதிரை பந்தயத்தில் கட்டி(Share Market), வந்தால் லாபம் போனால் நட்டம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.

    எங்களுக்கு கோபம் வருகிறது அதனால்தான் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம்.

    உங்களின் மகனோ ,மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ படித்துக் கொண்டிருந்தால் அல்லது படித்து முடித்திருந்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டாமா?

    இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல நம் எதிர்காலச் சமுதாயத்தின் நலனுக்கான போராட்டம்.
    தற்பொழுது 3500 சத்துணவு மையங்களை இணைக்க உள்ளார்கள் இதனால் 7000 பணியிடம் காணாமல் போகும், 3000 தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் உடன் இணைக்க உள்ளார்கள் இதனால் 6000 பணியிடம் காணாமல் போகும், இதைப் போன்று ஒவ்வொரு துறைகளிலும் பணியிடங்களை இணைகிறார்கள் இதனால் லட்சக்கணக்கான பணியிடங்கள் காணாமல் போகும் பிறகு எப்படி உங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும்.

    நீங்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உங்கள் வாரிசுகளை படிக்க வைப்பது அவர்கள் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வேலையே இல்லாத போது அவர்கள் எப்படி அந்த வேலைக்கு செல்ல முடியும்?

    சிந்தியுங்கள் இனியும் நீங்கள் முட்டாளாக இருந்து விட்டால் நாளை அரசு பணியிடம் என்பதே இல்லாமல் போகும் உடனே ஜாக்டோ ஜியோ வின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள். நாங்கள் ஒன்றும் மந்திரிகள் அல்ல நாள்தோறும் ஒரு பொய்யைச் சொல்ல, நன்கு படித்த ஆசிரியப் பெருமக்கள்.

    உண்மையைச் சொல்லி விட்டோம் இனி ஆதரவு தருவதும் தராமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.

    ReplyDelete
  6. உண்மையிலேயே தமிழகக் கல்வித்துறைதான் உள்ளுக்குள் அரித்துப் போனதாக மாறியிருக்கிறது. வெளியில் மேக்கப் போட்டு ‘ஆஹா பிரமாதம்’ என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயெல்லாம் கமிஷன் அடிக்க முடியுமோ அந்தக் காரியங்களை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    கொஞ்சம் கவனித்து, இந்தப் போராட்டம் எதற்கானது என்று காது கொடுத்துக் கேட்டால் கல்வித்துறையின் அவலம், தமிழக அரசுத்துறைகளின் சிக்கல்கள் எல்லாம் வெளியில் தெரியும். எல்லாவற்றையும் மூடி மறைத்து ‘சம்பளத்துக்கான போராட்டம்’ என்று தயவு செய்து பூசணிக்காயை சோற்றில் புதைக்க வேண்டாம்.

    இன்றைக்கு தமிழகத்தின் கடன் எத்தனை லட்சம் கோடிகள்? கடந்த ஆகஸ்ட் மாதமே பத்து லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு வட்டி கட்டி கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம் என்ற புள்ளிவிவரம் யாருக்காவது தெரியுமா? உண்மையிலேயே அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது.

    தமிழத்தின் நிதி ஆதாரத்தை மீட்டெடுக்க இன்னமும் எவ்வளவு வருடங்கள் தேவைப்படும் என்று தெரியாது.

    கடன் மேல் கடனாக வாங்கி, தேவையற்ற திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கோடிகளைப் புதைத்து கமிஷன்களில் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    எதிர்காலத்தில் தமிழகத்தின் கஜானா என்னவாகப் போகிறது என்று எந்தக் கணிப்புமில்லை. Flying Blind என்பார்களே- குருட்டுவாக்கில் பறந்து கொண்டிருக்கிறது தமிழகத்தின் நிதி நிலைமை. இந்தப் போராட்டத்தின் வழியாக இதையெல்லாம் பற்றிக் கொஞ்சமேனும் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

    திண்டாடிக் கொண்டிருக்கும் தமிழகம் பற்றி நமக்கு மேம்போக்காகவேனும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத் தருணம் இது.
    💐

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி