பழைய ஓய்வூதியத்தை தாருங்கள்!!உடனே பணிக்கு திரும்புகிறோம்!!! ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2019

பழைய ஓய்வூதியத்தை தாருங்கள்!!உடனே பணிக்கு திரும்புகிறோம்!!! ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு


பழைய ஓய்வூதியத்தை தருவதாகக் கூறினால் உடனே பணிக்கு திரும்பத் தயார் என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலும் அது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.எனவே இதை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தது.ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்றது. பின்னர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்வது தவறான முன்னுதாரணம்.28-ம் தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும். உயர்நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்றும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி