பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை : உயர்நீதிமன்றம் திட்டவட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2019

பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது அரசின் வேலை : உயர்நீதிமன்றம் திட்டவட்டம்


பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது, அது அரசின் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு அனுமதி கோரிய மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.

ஆசிரியர்கள் 4வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த  வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பணிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று அரசு தெரிவித்தது. இருப்பினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வதால், உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.

நீதிமன்றம் உத்தரவையும் மீறி ஆசிரியர்கள் போராட்டம்

இதனிடையே ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை கோரி கோகுல் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக மாணவர் கோகுல் செய்த மனுவை 2 நீதிபதிகள்  அமர்வு விசாரித்தது. அப்போது, ஜனவரி 25-ம் தேதிக்குள் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருப்பினும் ஆசிரியர்கள் 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்தனர்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது : நீதிமன்றம்

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கு அனுமதி வேண்டி மனுதாரர் கோரிக்கை விடுத்தார். அப்போது பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பணிக்கு திரும்ப வேண்டும் என்கிற உத்தரவை மீறிய ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் வேலை என்று தெரிவித்த நீதிபதி, பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த நோட்டீசிற்கு தடைவிதிக்கப்படவில்லை எனறும் தெரிவித்தார். 

16 comments:

  1. இப்போது அரசு ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதை கொச்சைப்படுத்தும் புண்ணியவான்கள் கொஞ்சம் கவனியுங்கள். அரசு மத்திய அரசின் அறிவுரைப்படி பணியிடங்களை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதி தான் எல்.கே.ஜி -க்கு மாற்றுவது. பல்வேறு அலுவலகத்துக்கும் சென்று பாருங்கள். எல்லா இடங்களிலும் தற்காலிகமா பணியாற்றும் ஊழியர்கள். பகுதி நேர ஆசிரியர்கள் நர்ஸ் போலீஸ் மருத்துவமனை பணியாளர்கள் என எங்கும் தனியாரை விட கொத்தடிமை நிலைக்கு சம்பளம் கொடுத்து வருடக்கணக்கில் வைத்துள்ளார்கள். இந்த நிலை மாறினால் மட்டுமே சொத்தை விற்று படித்த நமக்கெல்லாம் வேலை. இல்லை என்றால்? எம்.பி , எம்.எல்.ஏ எல்லாம் பென்ஷன் வாங்கலாம். அரசு ஊழியர்கள் வாங்கக்கூடாது. இந்த கோரிக்கைகளுக்காகவே போராடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள். டெட் பாஸ் பண்ணவங்கள போஸ்டிங் போடாமல் உள்ளார்களே அதற்காக நாம் போராடினோமா? புரிந்துகொள்ளுங்கள். நிதி இல்லை. ஜி எஸ் டீ வரி பெட்ரோல் வரி என எல்லா பொருட்களுக்கும் காட்டும் வரி எங்கே.

    ReplyDelete
    Replies
    1. Hello velayae illathavanga erallom

      Delete
    2. Private ill work panni parunga app theriyum. Ippo teachers 40000 to 100000 salary vankiravangalai anuppalam. Vellill

      Delete
    3. Tet pass pannavangalukaka poraduringala... Comedy pannathinga.. old pension system govt ethukichuna kammunu poradama poiduvinga matha korikai govt parisikuren sollirukunu oru petiya koduthutu poratam vilaki kollapadum nu velaiku poiduvinga... Evlo pathurukom

      Delete
  2. Appa salary kammiya vanguranga pension koduthanga.. ipothan salary naraya vanguringa savings pannikonga pension ethuku.. d grade employee Ku vena pension kodukalam

    ReplyDelete
    Replies
    1. Private ill work panni parrunga app theriyum.

      Delete
    2. 4000 salary iku morning 9.00 to evening 9.00 varaikum work pannanum. Ithu theriyuma 40000 ikum Mela salary vankiravangalauku.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Mr.Unknown I too worked for 4000 in 2014 then raised into 6000, 8000 and 15000 in 2017 in a private school, eventhough I attended and succeeded an interview finally for 20000 in an another private school but never joined bcz at the time call for came for PG and got it. Look....I too passed tet in 2013 with secured 101 marks in English but didn't get opportunity there by poor weightage system.... Can u come and combat with me??? Now am successfully working in govt school as a pg assit.😎😎😎😎😎. Don't reason and blame other but search and fetch ur target...

      Delete
    5. Mrs. Unknown, we don't know where is our cps amount! You will feel if your salary exploited by others!!

      Delete
  3. Ippa iruka people fool illa.. ninga MLA MP pesurathum avunga govt money illenu... Ana MLA MP goventment employees ninga thana nalla vazhuringa.. illathavan sapatuku kasta padran private vela pakuravan 12hrs velapathu job security illama heart attack vanthu Saguran ... Private athigama salary vanguravan govt tax katti oru benefit illama saguran... Mothathula ninga rendu group enga tax nalla valuringa. Keta nangalum tax katrom.. tax la salary vangitu konjam tax katuna thappula..

    ReplyDelete
  4. 60 years cross panna ellarukum pension kodunu poraduna ninga nalavanganu unga poratathaku support panuvom... Un kudumbam than kudumbama??? Enga tax vangitu service pandra ungaluku pension venumna tax katra engalukum pension venama.. athukum sethu poratam pannuga

    ReplyDelete
  5. Tax katra ellarum enaku tharamana ilavasa kalvi illa maruthuvam illa, sugatharam illenu kekanum.. tax kattitu private school padikavaikurom private hospital porom.. matram eppo varum than therila

    ReplyDelete
  6. Teachers yarum avangalukaga mattum poradavillai future la namalum gov't job pona intha thittam namakum use agum so pls co operate

    ReplyDelete
  7. Elarum private jobla irunthu gov't job poirupanga so purinchukanga terrorist kuda kattikudukamatan bt nama teachers nama support pannalana epdinga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி