பிளாஸ்டிக் தடை - பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2019

பிளாஸ்டிக் தடை - பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்!



தமிழக அரசு, 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்துள்ளது. இதனையடுத்து, அரசுஅலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு துவக்கப்பள்ளிகளில், மாணவர்கள் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில், பிளாஸ்டிக் பைகள் பள்ளிக்கு கொண்டு வரக்கூடாது; பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்பதைமாணவர்களுக்கு எடுத்துரைக்குமாறு, பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொண்டாமுத்துார் வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீகலா கூறுகையில், ''மாணவர்கள் பள்ளிகளில் பிளாஸ்டிக் பை, வாட்டர் பாட்டில் போன்ற பொருட்களை, கொண்டு வரக்கூடாது என, தலைமையாசிரியர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில், காய்ச்சிய நீரை மாணவர்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.

2 comments:

  1. Ellam ok thaan. But poor govt. school children steel water bottle vikkara veleyila epadi vanga mudiyum. Itha yaar solrathu

    ReplyDelete
  2. 14 vagaiyana porutkalil water bottle illaya

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி