ஸ்டிரைக் ஊழியர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை - எஸ்மா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2019

ஸ்டிரைக் ஊழியர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை - எஸ்மா?


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக, பொது மக்களின் அத்தியாவசிய சேவை பாதிக்கப் பட்டுள்ளதால், போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, 'எஸ்மா' சட்டத்தில், நடவடிக்கை எடுக்க,தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், திடீர் மறியல் போராட்டம் நடத்திய, அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

 அதேநேரத்தில், பேச்சுநடத்த வருமாறும், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பு மாறும், அரசு தரப்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங் களின் கூட்டமைப்பான, ஜாக்டோ-ஜியோ சார் பில், ஜன., 22 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.'பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; இடைநிலைஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்த போராட்டம் நடக்கிறது. இதனால், அரசு நலத் திட்ட பணிகள், லோக்சபா தேர்தல் ஆயத்தப்பணிகள், 'கஜா' புயல் நிவாரணப் பணிகள், சுகாதார பணிகள், மத்திய அரசின் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.ஆசிரியர்கள் பணியை புறக்கணித்ததால், மாணவர் களுக்கான பொதுத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வுக்கான முன்னேற்பாடுகளும் முடங்கி உள்ளன.

கிராமப்புறங்களில், தொடக்க பள்ளிகளுக்கு பூட்டு போடப்பட்டு உள்ளதால்,மாணவர்கள், பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், புதிய ஆசிரியர்களை, தற்காலிகமாக நியமிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. ஆள் எடுப்பு பணிகளும், தீவிரம் அடைந்துள்ளன. இன்று, ஞாயிற்று கிழமையும், ஆள் எடுப்பு பணி நடக்கிறது.பள்ளிக் கல்வித் துறை, வருவாய் துறை அதிகாரி கள் நடத்திய விசாரணைகளில், போராட்டத் தின் பின்னணியில், சில அரசியல் கட்சிகள் ஆதரவில் செயல்படும், சங்க நிர்வாகிகள் உள்ளதை கண்டறிந்துஉள்ளனர். உளவு போலீசாரும், இதை உறுதிபடுத்தி உள்ளனர்.எனவே,போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது, பொது மக்களுக்கான இன்றியமையாத சேவைகள் பராமரிப்பு சட்ட மான, 'எஸ்மா' மற்றும் தமிழ்நாடு இன்றியமை யாதசேவைகள் பராமரிப்பு சட்டமான, 'டெஸ்மா' ஆகியவற்றின் கீழ், கடும் நடவடிக்கை எடுக்க, தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.அதற்கு முன்னதாக, உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, பணிக்கு வராத, 1 லட்சம் பேருக்கு, தமிழக அரசின் பணியாளர் நடத்தை விதிகள் படி, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்பும் பணி நடந்து வருகிறது. நாளைக்குள் பணிக்கு வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், ஜாக்டோ - ஜியோவின் போராட்டம் தொடர்பானவழக்கு, நாளை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வர உள்ளது.அதேபோல, ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம்,நாளை, மதுரையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் நிலையை பொறுத்து, போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து, இதில் இறுதி முடிவெடுக்கப் பட உள்ளது.போராட்டம் தீவிரமடைந்து வருவதால், போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

திடீர் மறியலில் ஈடு பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், முக்கிய நிர்வாகிகள், சிறையில் அடைக்கப் பட்டனர்; கைது நடவடிக்கை தொடர்கிறது.இது, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோரிடம் அதிர்ச்சியைஏற்படுத்தி உள்ளது.மாநிலம் முழுவதும், போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய, 500க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்க பட்டுள்ளனர்.அதேநேரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை, பேச்சு நடத்த வருமாறு, பள்ளிக் கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் தரப்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஆனால், முதல்வர் நேரடி யாக பேச்சு நடத்த வேண்டும் என, போராட்டக் காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந் நிலையில், 'அரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ள தால், கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது; போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோர் பணிக்கு திரும்ப வேண்டும்' என்று, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர், ஜெயகுமார்கூறியுள்ளார்

13 comments:

  1. Good morning sir.will you come to college tomorrow?

    ReplyDelete
  2. இதற்கு பதில் அனைத்து விதமான சங்கங்களை அரசு தடை செய்ய வேண்டும். அரசு தரும் சம்பளம் மட்டும் போதாது என்று லஞ்சம் வேறு வாங்குகிறார்கள். வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலையும் செய்வது இல்லை. இவங்க செய்யும் போராட்டம் காரணம் காட்டி அரசு நிரந்தர பணி நியமனம் செய்யாமால் அனைதையும் தற்காலிகமாக ஆக்கி கொண்டு வருகிறது. இன்று அரசு பணி இடங்கள் குறைய முழு காரணம் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றவர்கள் தான்

    ReplyDelete
    Replies
    1. ✍✍✍ராஜ்குமார் உங்களுக்காகவும் தான் ஜாக்டோ ஜியோ போராட்டம் ✍✍✍✍

      *👉நீங்கள் எந்த வகை பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறீர்கள்?*

      அரசுப்பள்ளி
      மெட்ரிக்
      சிபிஎஸ்இ
      ஐசிஎஸ்சி
      இன்டர்நேஷனல்

      👉 *எதற்காக படிக்க வைக்கிறீர்கள்?*

      அரசு அல்லது தனியார் வேலைக்கு செல்ல

      👉 *எந்தப் பணி சிறந்தது?*

      அரசுப்பணி

      👉 *ஏன்?*

      மாதம் சரியாக ஊதியம் கிடைக்கும்

      பிறகு ஓய்வூதியம் கிடைக்கும்

      பணிப்பாதுகாப்பு உண்டு.

      👉 *அரசு ஊழியர்கள் தற்போதைய நிலை தெரியுமா?*

      தெரியாது

      👉 *சொல்கிறேன்*

      ஓய்வூதியம் கிடையாது

      பணிப்பாதுகாப்பு கிடையாது.

      கத்திக்குத்து வேற.

      👉 *வேலை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?*

      குரூப் தேர்வுகள், வங்கி தேர்வுகள் எழுத வேண்டும்.

      இல்லை கோச்சிங் கிளாஸ் அனுப்ப வேண்டும்.

      👉 *தமிழகத்தில் உள்ள கோச்சிங் கிளாஸ் எவ்வளவு தெரியுமா?*

      தெரியாது

      *ஒரு சில தமிழக நிலவரம்.*

      4 1/2 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் இல்லை

      பெரும்பாலான அரசுப்பணிகளுக்கு தேர்வுகள் நடைபெறவில்லை.

      நடைபெற்ற போட்டித் தேர்வுகளுக்கு ரிசல்ட் வெளியிடவில்லை.

      வெறும் அறிவிப்பு மட்டுமே.

      👉32 மாவட்டத்திற்குட்பட்ட கோச்சிங் சென்டர்களில் பத்து லட்சம் பேர்களும், வீட்டில் குறைந்தது 20 லட்சம் பேர்களும் போட்டித் தேர்வுக்கு படிக்கிறார்கள்.

      👉பொதுமக்களே உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கிறீர்கள் வேலைக்கு செல்ல ஆனால் அரசாங்கம் வேலைகளை குறைத்து தமிழக இளைஞர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக உள்ளது.

      👉3500 சத்துணவு மையங்கள் மூடினால் பத்தாயிரம் பணியிடம் குறைக்கப்படும் பத்தாயிரம் உங்கள் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்காது.

      👉3000 பள்ளிகளை மூடினால் 6000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது.

      👉பல அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளனர். பணி நிரந்தரம் கிடையாது. அவர்கள் யார் உங்கள் பிள்ளைகள் தானே..

      👉அனைத்து அலுவலகங்களிலும் அதிரடியாக ஊழியர்களை குறைக்கிறார்கள்.

      👉தமிழகத்தின் வருங்கால சந்ததியினருக்கு படித்தாலும் வேலை இல்லை.

      👉பணியிடங்களை காப்பாற்றி படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றத்தான் இந்த போராட்டம்.

      👉அரசுப்பணி யில் உள்ளவர்கள் பணியினை காப்பாற்றத்தான் இந்த போராட்டம்.

      👉ஓய்வு பெற்ற பிறகு முதியோர்களுக்கு கிடைக்கும் OAP 1000 ரூபாய் கூட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு கிடையாது.

      👉தினம் ஒரு அறிக்கை.
      தினம் தினம் மனஉளைச்சல். செயலில் ஒன்றுமில்லை.

      👉அரசுப்பள்ளியில்
      கட்டிடங்கள் கட்டுங்கள்,
      கழிவறை வசதிகள் செய்யுங்கள்,
      அடிப்படை வசதிகளை செய்து கொடுங்கள்,
      ஆசிரியர்களுக்கு ஆசிரியர் வேலை மட்டும் கொடுங்கள்,
      பின்னர் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சட்டையை பிடித்து கேளுங்கள் மாணவர்கள் கல்வித்திறன் பற்றி..

      👉இதை செய்யாத அரசு, எதற்கு எடுத்தாலும் ஆசிரியர்களை குறை செல்லுவது எந்த வகையில் நியாயம்.

      👉பொதுமக்களே உங்களுக்காகவும் எங்களுக்காகவும் தான் இந்த போராட்டம்.
      உண்மையை உணர்ந்து ஆதரவு கொடுங்கள்.

      இவண்
      ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு

      Delete
    2. அவர்கள் கேட்பது சலுகை அல்ல...
      சமஉரிமை===>சமஊதியம்.
      நீங்கள் கூறியது போல கண்டிப்பாக லஞ்ச மற்ற அரசுத்துறை வேண்டும்...
      அதற்கு லஞசத்தை கொடுத்தாவது காரியம் நிறைவேறும் மனநிலையிலிருந்து மக்கள் மாற வேண்டும்..
      அடுத்து எங்கள் அரசுஅலுவலகத்தில் யாரும் லஞ்சம் கொடுத்து தங்களது வேலையை செய்ய வேண்டாம் என்று அரசு அலுவலகங்களில் வாக்கியத்தை எழுதி வைத்து அதன் படி செயல்படவும்

      Delete
  3. enda dai unakku veru idame illaya.add pannuvatharku

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Sengotaiyan a serupala adipen. Government oliga. No vote for AIADMK

    ReplyDelete
  6. காமெடி பன்னாத

    ReplyDelete
  7. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையும் ஆசிரியர்களின் போராட்டமும்...! என்ன செய்யப்போகிறது தமிழக அரசு..
    https://nxttamil.blogspot.com/2019/01/blog-post_79.html

    ReplyDelete
  8. எனது ஆசிரிய நண்பர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும். |

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி