முதலமைச்சருடன் ஆலோசனைக்குப்பின் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2019

முதலமைச்சருடன் ஆலோசனைக்குப்பின் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


சென்னை மெரினாவில் சாரண, சாரணியர் அணிவகுப்பை ஏற்று மேடையில் உரையாற்றிய பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன், எதிர்கால நீர்த்தேவையை கருத்தில் கொண்டு மரம் நடும் மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை பரிசீலித்து வருவதாககூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பினரிடம் சிலர் தவறான தகவல்களை பரப்புவதைநிறுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது.

ஏழை, எளிய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப கேட்டுக்கொண்டார். குடியரசு தினத்தன்றும், பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, பொறுத்திருத்து பாருங்கள் என்று அமைச்சர் பதிலளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.

ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறதுஅரசு தரப்பிலிருந்து போராட்டம் குறித்து இன்றுமுக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 comments:

  1. ஏழை மாணவர், கஜா புயல் இந்த ரெண்டு பிட் போட்டு.. இன்னும் எத்தனை பத்திரிக்கையாளர் சந்திப்பை சமாளிப்பீர்கள்??? என்னவோ இந்த அரசு ஏழைகளின் வளர்ச்சி, கஜாப் புயல் நிவாரணம் இரண்டிலும் சீரும் சிறப்புமாக செயல்படுவது போலவும்.. அரசு ஊழியர் தான் தடையாய் இருப்பது போலவும்..

    ReplyDelete
    Replies
    1. கஜா புயலை வைத்து ஒவ்வொரு அரசியல்வாதியும் எவ்வளவு கொள்ளையடித்தீர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும்.. முதலமைச்சரே..

      Delete
  2. நாங்களே நூற்ண்டு விழாவுக்கு கடனாக உள்ளதே என்று குறைவாக செய்தோம்.கடனில் தவிப்பதால் அமைச்சர்கள் சொத்து மதிப்பு உயரவில்லை. உள்ளூர் அரசியல் வாதிகள் முதற்கொண்டு கடனில் தத்தளிக்கிறார்கள்... ஏழைகள் படித்த்துவிட்டு போஸ்டிங் போடுவார்கள் என்று வருடக்கணக்கில் டெட் பாஸ் பண்ணிவிட்டு உக்கார்ந்துள்ளோம். ஆனால் பாவம் எல்லோரும் கடனில் இருக்கும்போது 5000 7000 ரூ மட்டுமே சம்பளம் கொடுக்கும் நிலையில் அரசு உள்ளது. நீதி மன்றம் மட்டுமே அனைவரையும் கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் தமிழகம்.

    ReplyDelete
  3. Tai unknown peppuundai unakku ennada therium kotha unnai nerula pakkuren

    ReplyDelete
    Replies
    1. உங்கள் போன்ற ஆசிரியர்கள் .தான் தமிழகத்திற்கு தேவை.

      Delete
    2. நல்லாசிரியரே.....

      Delete
  4. குடியரசுத் தினத்தன்று வேலைக்கு செல்லாத ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை பற்றி அமைச்சர் பதில் : விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்..

    ReplyDelete
    Replies
    1. Same dialogue. பாரபட்சமே இல்லாமல். எதற்க்கெடுத்தாலும் விரைவில்

      Delete
  5. kaja puyal uku onum sensamathri ila..apuram yen atha pathi peasanum..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி