புள்ளியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2019

புள்ளியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு


இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனமான, ஐ.எஸ்.ஐ., கொல்கட்டாவில் செயல்படுகிறது.

 இதற்கு, டில்லி, சென்னை, கர்நாடகாவின் பெங்களூரு, அசாமின் தேஜ்பூர் உள்ளிட்ட இடங்களில், கல்வி மையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனம், பார்லிமென்ட் சட்டத்தின் படி, தேசிய முக்கியத்துவ அந்தஸ்து பெற்றது.ஐ.எஸ்.ஐ., கல்வி நிறுவனத்தின் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில், புள்ளியியல் மற்றும் கணித படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும், 11க்கும் மேற்பட்ட முதுநிலை டிப்ளமா மற்றும் முதுநிலை படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த கல்வி நிறுவன படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் பதிவுகள், பிப்., 5ல் துவங்குகின்றன; மார்ச், 12 வரை பதிவு செய்யலாம். மாணவர் சேர்க்கைக்கான நுழைவு தேர்வு, மே, 12ல் நடக்கும். மேலும் விபரங்களை,www.isine.ac.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி