வட்டாரக் கல்வி அலுவலர்களாக இருப்போர் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2019

வட்டாரக் கல்வி அலுவலர்களாக இருப்போர் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.


வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முடிவுக்கு வருகிறது.

பள்ளி கல்வித்துறையில் 2017 மே மாதத்தில் இருந்து தொடர்ந்து பல சீர்த்திருத்தங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்கள் மூடப்பட்டன. நர்சரி முதல் மேல்நிலைப் பள்ளி வரை கவனிக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டன. இதற்காக கூடுதலாக மாவட்ட கல்வி அலுவலகங்கள் துவங்கப்பட்டன. தொடக்க கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டனர்.

தற்போது தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் பணி நடக்கிறது. தொடர்ந்துவட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன.

தற்போது தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களே வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிப்பதில் சிக்கல் உள்ளது. இதனால்வட்டாரக் கல்வி அலுவலர்களாக மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதன்மூலம் அவர்கள் அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்து வகை பள்ளிகளையும் ஆய்வு செய்யமுடியும். ஏற்கனவே வட்டாரக் கல்வி அலுவலர்களாக இருப்போர் பதவி உயர்வு மூலம் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதன்மூலம் தொடக்கக் கல்வித்துறை முழுமையாக பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்கப்படும்

1 comment:

  1. இதுவரை எந்த பட்டதாரி ஆசிரியரும் வட்டாரக்கல்வி அலுவலர்களாக நியமிக்கப்படவில்லை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர் .தங்கள் பதிவில் உண்மை இல்லை. வதந்திகனைத் தவிர்க்கலாமே...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி