ஜாக்டோ ஜியோ போராட்டம் - பேச்சு நடத்த அரசு திட்டம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம் - பேச்சு நடத்த அரசு திட்டம்!


ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்தை தவிர்க்க, சங்க நிர்வாகிகளுடன், அரசுதரப்பில் பேச்சு நடத்தப்பட உள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ ஜியோ சார்பில்,வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஆயத்தமாக, மாநிலம் முழுவதும், இன்று ஆர்ப்பாட்டம்நடத்தப்படுகிறது.இதையடுத்து, பணிகளை புறக்கணித்து, மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் மற்றும் பள்ளி பொது தேர்வு வருவதால், அவற்றிற்கான பணிகள், ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து, அரசு தரப்பில் பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல் கட்டமாக, துறை ரீதியாகவும், பின், அரசின் உயர் அதிகாரிகள் மட்டத்திலும், பேச்சு நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது

1 comment:

  1. போராட்டம் என்பது வெறும் விளம்பரத்திற்காக நடத்தப்படுவதில்லை மாறாக உரிமைகள் மறுக்கப்படுவது ஏற்புடையதல்ல. ஒரு முறை நீங்கள் மட்டும் நிறைவேற்றுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி