Flash News : ரத்து செய்யப்பட்டது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2019

Flash News : ரத்து செய்யப்பட்டது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு


திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான கலைஞர் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கலைஞர் மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் முறையீடு செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 10 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி வருகிற ஜனவரி 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது, பல்வேறு அரசியல் கட்சிகளும் கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Nallavana Vala vida matinga pola.... Engal urimai alikapadukirathu

    ReplyDelete
  2. இந்திய நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது மக்களின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது.காரணம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியாக இருப்பின் அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டே சொத்த காரணங்களை காட்டி தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட 18 தொகுதி உறுப்பினர்கள் பதவியை பறித்து அதன் தீர்ப்பு கொடுக்க நீதிமன்றம்
    1 1/2 ஆண்டுகள் எடுத்துகவண்டது.தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஓராண்டு எடுத்துக் கொண்டது.சுமார் இரண்டு ஆண்டுகளாய் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமலும் உள்ளாட்சி உறுப்பினர்கள் அத்தொகுதியில் மக்களின் வாழ்க்கை படும் மோசமான நிலையில் உள்ளது.இத்தொகுதிகளில் சாலை வசதிகள் இல்லை குடிநீர் வசதி மற்றும் இதர சுகாதார சீர்கேடு இன்னும் பல யாரிடம் முறையிடுவது என்று தெரியவில்லை. ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு வக்கில்லை எனில் தேர்தல் நடத்தும் வரை கிரிமினல் குற்றம்(சிறை தண்டனை)இல்லாத பழைய சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை செயல்படவைக்க வேண்டும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி