Flash News : கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2019

Flash News : கள்ளக்குறிச்சி மாவட்டமாக அறிவிப்பு!!


கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக செயல்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பால் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி 33-வது மாவட்டமாக உருவாகிறது. நிர்வாக ரீதியாக பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய மாவட்டத்தில் அடங்கும் என தெரிவித்தார்.

புதிதாக உருவாக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தனி அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிந்ததன் மூலம் பெரிய மாவட்டம் என்ற அந்தஸ்தை விழுப்புரம் இழந்துள்ளது. 7,194 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட விழுப்புரத்தில் 11 பேரவை தொகுதி, 13 வருவாய் வட்டங்கள் உள்ளன. 

5 comments:

  1. கெங்கவல்லி கள்ளகுறிச்சியில் இணைய வாய்ப்பு உள்ளதா?

    ReplyDelete
  2. கெங்கவல்லி சட்டமன்றம் கள்ளக்குறிச்சியில் இணைந்தால் சிறப்பானது.

    ஏன் என்றால் கெங்கவல்லி சட்டமன்றதுக்குட்பட்ட மக்கள் சேலம் செல்வதென்றால் 120 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது

    ReplyDelete
  3. விழுப்புரத்தில் இணைந்தால், 120கிமீ பயணம் அதிகமாகிவிடுமா?!!!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி