JACTTO GEO போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களின் பேட்டி - முழு விபரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2019

JACTTO GEO போராட்டம் குறித்து முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களின் பேட்டி - முழு விபரம்



ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளதால், அரசு பள்ளிகள் குறிப்பாக தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வேலைநிறுத்தத்தில் தொடக்க கல்வி ஆசிரியர்கள் அதிக அளவில் பங்கேற்று உள்ளனர். பெரும்பாலான ஆரம்ப பள்ளிகளில் வெறும் 2 ஆசிரியர்களே இருந்தனர்.அவர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் பள்ளிகளை கடந்த சில நாட்களாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கலாம் என அரசு முடிவு செய்தது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. அதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.இளையதலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் நிதி இருந்தால் தான் அதிக ஊதியமும்,சலுகையும் வழங்க முடியும்.எதிர்க்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்.

புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் தான், அவர்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும். ஆசிரியர்களைகுறை சொல்வதாக நினைக்ககூடாது நிலையை எண்ணிப்பார்த்து ஒத்துழைப்பு தர வேண்டும்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற இருசக்கரமும்இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மேசையின் மீது ஏறி திமுகவினர் நாட்டியம் ஆடுகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டப்பேரவையில் திமுகவினரை சபாநாயகர் மன்னித்தது தான் அதிமுகவின் பெருந்தன்மை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

29 comments:

  1. முதலமைசர் ஐயா அவர்களே, நிதி நிலை சரி இல்லை என்றால் அதை சரி செய்ய வேண்டியது உங்களின் பொருப்பு இல்லைய அப்போ அரசு ஊழிர்கள் எவருக்கும் இனி ஓய்வு வூதியம் இல்லை என்று சொல்லிவிடுங்க அது எந்த்நிலை அதிகாரத்தில் உள்ளவராக இருந்தாலுழ் அது MLA,MP ஆக இருந்தாலும் கூட என சொல்லுங தமிழகத்தின் நிதி நிலை விரைவில் சீராகும் இல்லயா

    ReplyDelete
  2. TET pass panni vacant irunthum innum podala. Irukkura posting ellathaiyum kuraikkiraargal. Consolidate pay nnu kedukkureenga. Padichavangala nadutheruvil nikka vachittaanga. Itha ethirthu ketka thuppilla. Govt senja thappu ippadi part time job koduthathu. Atha kekkumpothu neenga ethukku Tension agureenga? Ithil 50 vayathai kadanthu pathi per irukkaanga. TET exam eluthi pass pannavangalum irukkaanga. Methaavigale purinchukkonga.

    ReplyDelete
  3. ஆசிரியர் பிரச்சனைகளை தீர்க்க நிதி பற்றாக்குறை என்று கூறும் அரசுக்கு MLA - வின் சம்பளத்தை மட்டும் எப்படி உயர்த்த முடிந்தது. கஜா புயல்ல மக்கள் நிவாரணம் கிடைக்காம சாகும் போது எப்படி பொங்கல் பரிசு 1000 ரூ கொடுக்க முடிந்தது.

    ReplyDelete
  4. ஆசிரியர் பிரச்சனைகளை சரிசெய்ய நிதியில்லை என்றால் MLA சம்பளத்தை உயர்த்தும் போது நிதியிருந்ததா?, கஜாபுயலில் நிவாரணம் கிடைக்காமல் மக்கள் தவிக்கையில் பொங்கல் பரிசு 1000 ரூ கொடுக்க நிதியிருந்ததா?, தற்காலிக ஆசிரியர்களை 10,000 ரூ பணிக்கு நியமிப்பது போன்று தற்காலிக சம்பளத்தில் விடுபட்ட MLA பணிக்கு எப்போது ஆள் எடுக்க போகிறீர்கள்?

    ReplyDelete
  5. MGR nuutrandu vizha ku nithi irunthathaaaa.

    ReplyDelete
  6. என்னைக்கு ஒரு ஆசிரியர் தன்னைஅரசியல்வாதியோட ஒப்பிட்டுபார்க்க ஆரம்பித்துவிட்டானோ இலவச கல்வி இனி கேள்வி குறிதான்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரி.முன்னாடிதான் கல்வி அர்ப்பணிப்பு உணர்வுடன் அளிக்கப்பட்டது ஆனால் இப்போது நல்ல சம்பளம் உள்ள துறையாக மாறி விட்டது. கல்வித்தரம் என்பது அரசு பள்ளிகளில் ?

      Delete
    2. Super ithavida arumaiyana bathil irukamudiyathu

      Delete
  7. இலவச கல்வி என்பது ஆசிரிய்ர் முடிவெடுப்பதல்ல அரசாங்கம் முடிபெடுப்பது அரசின் தவறுகளை சுட்டி காட்டுவதால் அரசியல்வாதியிடம் போட்டி போடுவது என்று பொருள் அல்ல மேலும் அரசின் குறைகளை சுட்டி காட்ட அவர் ஆசிரியராக இருக்க வேண்டிய அவசியமில்லை. போக்குவரத்து துறையோ, ஆசிரியர்களோ, அரசு ஊழியர்களோ, தொழில் நிறுவனமோ, மற்ற பிறதுறைளில் பணிபுரிபவராக இருந்தாலும் ஏன் இப்படி போராடுகிறார்கள் என்பதை வெளியில் இருந்து மேலோட்டமாக பார்க்காமல் எதற்காக போராடுகிறார்கள் என்பதை சிந்தியுங்கள் மற்றவரது போராட்டம் நம்மை ஏதாவது ஒரு விதத்தில் பாதித்தால் உடனே போராடுபவர்கள் எல்லாம் தவறானவர்கள் என்ற எண்ணத்தை மாற்றுங்கள் ஏனெனில் அவர்கள் போராடுவது இனிவரும் எதிர்கால சந்ததியினருக்கும் தான். அதில் நம் குழந்தைகளும் அடக்கம்.

    ReplyDelete
  8. பாடம் நடத்துங்கப்பா பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்கீங்க. அது சரி நீ போனாலும் போவாட்டியும் பையன் படிச்சுக்குவான்

    ReplyDelete
  9. நீயும் அப்படித்தான் படிச்சியா?

    அ..ஆ...இ...ஈ.... உங்கப்பன்கிட்டயா படிச்ச?

    ReplyDelete
    Replies
    1. Ippa you tube padikalam..ippalam teachers than padikanum intha science worldla... Pesama two years once teachers ellam update irukangalanu check panna exam vaiga

      Delete
  10. MLA salary decrease pannunka than 19 work panninal than ellam kidaikum but 5 years mla ku all free pension edhuku

    ReplyDelete
  11. Manavanukku ary muttai goduthu ary muttai therudum teacher erukum vari govt school aleyum.

    ReplyDelete
  12. அரசு பணிக்கு வந்து பார்
    அப்புறம் தெரியும்.

    ReplyDelete
  13. Camera fix in govt school follow private school

    ReplyDelete
  14. APPURAM AVANUM THAN NAN GOVT SERVANT THERINJO THERIYAMALO GOVT ENAKKU VELAI KUDUTHUDICHI INIMAE GOVTODADA THALAIVIDHI ENAKKU SAMBALAM KODUTHEY AGANUM NAN VELAI SEIVEN ILLAI SEYYAMATTEN APPADINU SOLLI JOTHIILA AYIKKIYAMAIDUVAN

    ReplyDelete
  15. GOVT SCHOOLKALAI KORAICHADHEY IVANGA VELAI SEIYURA AZAGUTHAN GOVT HOSPITTAL MIGA MIGA SUPERA IRUNDHA ENTHA MADAIYANAVADHU PRIVATE HOSPITTALKU PANAM SELAVAZHITHU POVANA ATHU POL THAN ARASU PALLIKALIL MANAVARGALA SERKKAMA PORATHU MATRAPADI ENGLISH MEDIUM KAGA ILLA INTHA GOVT TEACHERSKU AVAN PULLAI SUPERA IRUKKUDHU OORAMMOOTU EZAI PILLAITHANAE AVANKITTA PADIKKA VARUTHU ATHU PADICHA INNA PADIKKALA INNA AVANUKKU ORU RUBA SAMBALAM KORAIYA PODHA ILLAI KOODA POGUTHA

    ReplyDelete
  16. Comparison is life

    Oruthan. Mouthla sweet.
    Oduthavan mouthla salt why?

    Mla MPs can yarn 1000 cross within 5 years

    Mla MPs getting GPF
    Give the GPF for govt servent

    ReplyDelete
    Replies
    1. Appo tax katra enga mounth la enna. Poison na

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. நீயும் வரி கட்டுற. அரசு ஊழியரும் உன்னைவிட 10% அதிகமாக வரி கட்றான் எல்லாத்தையும் அரசியல்வாதி அடுச்சுட்டான்..அடிச்சுட்டு நேக்கா உங்களுக்குள் சண்டைய மூட்டிவிட்டு அவன் தப்பிக்கப் பாக்குறான் ..
      அம்புட்டுத்தான்.. மட்டு மட்டு..

      Delete
  17. Unga rendu group arasu arasu employee matum people tax vazhunga... Ninga rendu group evlo nalavanga

    ReplyDelete
  18. Comparison is life

    Oruthan. Mouthla sweet.
    Oduthavan mouthla salt why?

    Mla MPs can yarn 1000 cross within 5 years

    Mla MPs getting GPF
    Give the GPF for govt servent

    ReplyDelete
  19. Comparison is life

    Oruthan. Mouthla sweet.
    Oduthavan mouthla salt why?

    Mla MPs can yarn 1000 cross within 5 years

    Mla MPs getting GPF
    Give the GPF for govt servent

    ReplyDelete
  20. போராட்டம் திசை திருப்ப வேண்டாம் cps Amount கொடுங்க அது போதும் அது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி