TNPSC - டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில்ரூ.1.13 லட்சம் சம்பளத்தில் வேலை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2019

TNPSC - டிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில்ரூ.1.13 லட்சம் சம்பளத்தில் வேலை!


தமிழக அரசின் மீன்வளத் துறையில் காலியாக உள்ள துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

 இதற்கு தகுதியான எஸ்சி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sub-Inspector of Fisheries  in Fisheries Department

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.35,900 - 1,13,500 (Level 13)

வயதுவரம்பு: உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.

தகுதி: 01.07.2019ன் படி மீன்வள அறிவியல் துறையில் டெக்னாலஜி, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் மீன்வள அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள், விலங்கள் பாடங்களுடன் கூடிய அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதார்களுக்கு தமிழ்மொழி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலமும் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ள எஸ்சி பிரிவைச் சேர்ந்தவர்கள் http://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம்ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்​ தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_04_notyfn_SubInspector_Fisheries.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.02.2019

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி