ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று (04.02.2019) முதல்வரை சந்திக்க தலைமைச்செயலகம் செல்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2019

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று (04.02.2019) முதல்வரை சந்திக்க தலைமைச்செயலகம் செல்வது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது !


ஜாக்டோ ஜியோ கடந்த ஜனவரி 22 ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை அறிவித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்கினங்கவும், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் தேர்வு நேரம் என்பதாலும் போராட்டத்தினை ஜனவரி 29 ம் தேதி மாலை தற்காலிகமாக ஒத்துவைப்பது என கூட்டத்தில்முடிவாற்றப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

ஜனவரி 30 ம் தேதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை தாங்கள் பணிபுரிந்த பள்ளியில் சேர விடாமல் பணி இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

ஜாக்டோ ஜியோ முழு முயற்சியின் காரணமாக பணி இடமாற்ற ஆணையினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இயக்குநர் அவர்கள் வாய்மொழி உத்தரவு பிரப்பித்துள்ளார்.

மேலும் போராட்டத்தில் சிறை சென்று பிணையில் வெளிவந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டுள்ளது

சிறை சென்று தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்கள் இடம் காலிப்பணியிடமாக அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட  ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் வாங்கிய நிலையிலும்5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணியில் சேர விடாமல் அலுவலர்கள் தடுப்பது, பணியிடமாற்றம் செய்யப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது, எனவே முதல்வர் அவர்கள் தலையிட்டு அனைவரையும் பணியில் சேர உத்தரவிட ஜாக்டோ ஜியோ முதல்வர் அவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டது.

இன்று காலை  (04.02.2019) ஜாக்டோ ஜியோ உயர்மட்டகுழு கூட்டம் ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் தோழர்.ச.மோசஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.**

கூட்டத்திற்கு பின் இன்று பிற்பகல் தலைமைச்செயலகம் சென்று தமிழக முதல்வர் அவர்களையும்,  தலைமைச் செயலாளர்அவர்களையும், கல்வித்துறை செயலாளர்அவர்களையும்மற்றும் அமைச்சர்களையும் (வாய்ப்பு கிடைக்கும் அனைவரையும்) சந்திப்பது என கூட்டத்தில் முடிவாற்றப்பட்டது.

அதன்படி ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தலைமைச்செயலகம் சென்றுள்ளார்கள்.

1 comment:

  1. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டதற்கினங்கவும், பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் தேர்வு நேரம் என்பதாலும் போராட்டத்தினை ஜனவரி 29 ம் தேதி மாலை தற்காலிகமாக ஒத்துவைப்பது என கூட்டத்தில்முடிவாற்றப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.

    Surly above statement is wrong...If you are a good teachers, you should not say like this because you were not listened Government & public request, mind it pls.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி