ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து !



அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த மாதம் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது.

இதன் காரணமாக 1500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பின்னர் 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 ஆயிரத்து 512 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஆயிரத்து 656 பேர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும், 4 ஆயிரத்து 871 பேர் நீதிமன்றங்கள் முன்பு ஆஜர்படுத்திய போது, நீதிமன்றங்களால் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். வேலை நிறுத்தம் கைவிடப்பட்டவுடன், நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்ட ஆயிரத்து 656 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கைக்கு உள்ளான 1100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.

2 comments:


  1. அன்பான ஆசிரிய பெருமக்களே!

    நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை....உங்களை அடக்கவே ஆணவம் கொண்ட அரசு டிஸ்மிஸ் செய்தது......இப்போது தேர்தல் நேரம் என்பதால் உங்களுக்கு கருணை காட்டுவது போல் நடிக்கிறது.....நம்ப வேண்டாம்.....இன்னும் நாடகம் இருக்கிறது......உங்களிடம் இருந்து பறிபோன சம்பளம் எங்கே?
    எத்துனைபேர் EMI கட்ட முடியாமல் திணறி இருப்பீர்கள்......

    இந்த அரசுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.ஊடகங்களில் ஆசிரியகளை எப்படி கேவலமாக விளம்பர படுத்தினார்கள்......அரசின் வருவாயில் 75% சம்பளமாக போகிறது என்று சொல்லி மக்களை திசை திருப்பி ஆசிரியர்களின் மேல் அபாண்ட மாக கூறினார்கள்.....


    இவைகளை மறக்காதீர்கள்.....மன்னிக்கவும் செய்யாதீர்கள்......


    தேர்தலின்போது உங்கள் பலத்தை காட்டுங்கள்......பலகீனமான ஆட்சியாளர்கள் பலி ஆகட்டும்....இதுவே மறைந்த முதல்வர் அம்மாவுக்கு நாம் செய்யும் பரிகாரம்......
    பழி....பாவங்களை அநியாயமாக சுமக்கவைத்த அரசுக்கு உண்டான தண்டனையை இறைவன் நிச்சயம் வழங்குவார்.......இது சத்தியம்!

    ReplyDelete
  2. Good Teachers Habit [Taking revenge]. oh god kindly help poor students from these devils [Government & Teachers] pls.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி