Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

128 அரசு பள்ளிகளுக்கு விருது வழங்க குழு தேர்வு


கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படும், 128 அரசு பள்ளிகளுக்கு, 'புதுமை பள்ளி விருது' வழங்க, மாநில - மாவட்ட அளவில், குழு அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகள் இடையே, ஆரோக்கியமான கல்வி போட்டியை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகல்வி அமைச்சர் உத்தரவின்படி, புதுமை பள்ளி விருது வழங்கப்படுகிறது.

 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, 128 பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்கு, தலா, 1 லட்சம் ரூபாய்; உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இதற்காக, மாவட்ட அளவில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்று, ஆய்வு செய்து, சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வழியே பெறப்படும் பரிந்துரைகளை பரிசீலித்து, மதிப்பெண் அளிக்க வேண்டும்.

இவற்றில், அதிக மதிப்பெண் பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலா, மூன்று வீதம், 12 பள்ளிகளை, ஒவ்வொரு மாவட்ட குழுவும், மாநில குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும்.வரும், 28ம் தேதிக்குள், மாநில குழுவின் உறுப்பினர் செயலருக்கு கிடைக்கும் வகையில், மாவட்ட அளவிலான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், தொடக்க கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் ஆகியோர் அடங் கிய குழு பரிசீலித்து, 128 பள்ளிகளை தேர்வு செய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives