15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2019

15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்


மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

பிளஸ் 2 வகுப்பில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகளை ஓராண்டுக்கு முன்பாக பிளஸ் 1 வகுப்பிலேயே வழங்கிட தமிழக அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், பிளஸ் 1 படிக்கும் 5.12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மடிக்கணினி பெறாத பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், அரசு-அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளி பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் என மொத்தம் 15.18 லட்சம் பேருக்கு விலையில்லாத மடிக்கணினிகள் வரும் கல்வியாண்டில் அளிக்கப்படஉள்ளது.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக ஏழு பேருக்கு மடிக்கணினிகளை முதல்வர் பழனிசாமிவழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

3 comments:

  1. Loosu last +2 paticha students ke innum laptop kudukala ethula ethu vera pooongada loose

    ReplyDelete
  2. Last year students laptop enga panni 2017-2018 student OK loose

    ReplyDelete
  3. 2017 - 2018 batch +2 students ku loosu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி