நாளை சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு: 12.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2019

நாளை சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு: 12.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்


சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.  இந்தத் தேர்வை 12.87 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.

நிகழ் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் பிப்ரவரி 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடைகிறது.  அனைத்துத் தேர்வுகளும் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடையும்.நாடு முழுவதும் 21,400 பள்ளிகளைச் சேர்ந்த  12 லட்சத்து 87ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் தேர்வெழுதவுள்ளனர்.  இதற்காக 4,974 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள் திருத்துதல், தேர்வு மையக் கண்காணிப்பாளர்கள்,  பறக்கும் படையினர்,  மேற்பார்வையாளர்கள் உள்பட பொதுத் தேர்வுப் பணிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தபடவுள்ளனர். வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளைத் தடுக்க நிகழாண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  பொதுத்தேர்வு குறித்து சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது காவல் துறையில் புகார் அளிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே தேர்வு முடிவு:

மேலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் ஒரு வாரம் முன்னதாகவே வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி