தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2019

தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது


தமிழகத்தில் 2018-19 ஆம் நிதியாண்டில் பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,519 ஆக குறைந்துள்ளது என்று பட்ஜெட் உரையில்துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இது குறித்து பட்ஜெட் உரையில் கூறப்பட்டிருப்பதாவது:  பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நலத் திட்டங்களும், முயற்சிகளும் அண்மைக்காலமாக சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதன் விளைவாக,  கற்றல் திறன் மேம்பட்டுள்ளதுடன் தொடக்க நிலை வகுப்புகளில் நிகர சேர்க்கை விகிதம் 99.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 2011-2012-ஆம் நிதியாண்டில் 63,178 ஆக இருந்த தொடக்கப் பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 2018-2019-ஆம் ஆண்டில் 33,519 ஆக குறைந்துள்ளது.

 கடந்த 2018-ஆம் ஆண்டு கல்வி நிலை அறிக்கையின்படி (அநஉத) அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் ஒட்டுமொத்தமாக முன்னேறியுள்ளது என்பதுடன் தனியார் பள்ளி மாணவ, மாணவியருடன் ஒப்பிடும்போது, அரசுப்பள்ளி மாணவர்கள் கூடுதல் வேகத்தில் முன்னேறி வருகின்றனர்.விலையில்லா பொருள்கள்:  புத்தகப் பைகள்,  நோட்டுப் புத்தகங்கள், வடிவியல் பெட்டிகள் உள்படமாணவர்களுக்கு விலையில்லாமல் வழங்கும் நலத் திட்டங்களுக்காக 2019-2020-ஆம் நிதியாண்டில் ரூ.1,656.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று அரசுப் பள்ளிகளுக்கு போதுமான உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் கடனுதவியுடன் ரூ.381.31 கோடி செலவில்வகுப்பறைகள் கட்டுதல்,  ஆய்வகங்கள்,  கழிப்பறைகள்,பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி