2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்.8-ம் தேதி தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2019

2019-20-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை பிப்.8-ம் தேதி தாக்கல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்


தமிழக அரசின் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்  மார்ச் 15-ம் தேதி காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் அல்லது இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த ஆண்டு ஆண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்நிலையில், வரும் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஏற்கெனவே அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 8-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவை செயலர் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வரி இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளதால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆண்டுதோறும் அரசின் கடன் அதிகரித்தபடி உள்ளது. கடனுக்கான வட்டியும் அதிகரித்து வருகிறது. இதனை சமாளித்து புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுமா என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி