ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து - உயர்கல்வித்துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து - உயர்கல்வித்துறை அறிவிப்பு!


வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு பணியிடை நீக்க உத்தரவுக்கு  ஆளான 28 பேராசிரியர்கள் மீதான நடவடிக்கையை உயர்கல்வித்துறை ரத்து செய்துள்ளது.

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பாக கடந்த மாதம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அரசு கல்லூரி பேராசிரியர்கள் 28 பேரை பணி இடைநீக்கம் செய்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அவர்கள் மீதான பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் சங்க நிர்வாகிகளாக இருக்கக்கூடிய 17 பேராசிரியர்களை பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

1 comment:

  1. அதிகாரம், ஆணவம் தழைத்தோங்குக....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி