கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2019

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டம்


கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும், கட்டாய இலவச கல்வியை, பிளஸ்2 வகுப்பு வரை நீட்டிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பிளஸ் 2 வரை... இலவசம்: ஏழை மாணவர்களுக்கு உதவ அரசு அதிரடிபள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியிலேயே நிறுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்படஉள்ளதாக, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், கல்வி உரிமை சட்டம்,௨௦௧௦ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் படி, 9 முதல், 14 வயதுக்குட்பட்டோருக்கு, 8ம் வகுப்பு வரை, இலவச கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, சுயநிதி தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்கள்,ஏழை மாணவ - மாணவியருக்கு ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.குழந்தை தொழிலாளர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொருளாதார வசதி இல்லாததால் கல்வி கற்க முடியாமல் போவதை தடுக்கவும், கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால், இந்த சட்டம், எதிர்பார்த்த பலனை தரவில்லை.

குறையவில்லை

பள்ளிகளில், 8ம் வகுப்புக்கு பின், படிப்பை கைவிடும், மாணவ - மாணவியர் எண்ணிக்கைகுறையவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில் மட்டும், 2014 - 15ல், 8.66 லட்சம் மாணவ - மாணவியர், பள்ளி படிப்பை பாதியில் அரசுக்கு கோரிக்கைகைவிட்டது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்த நிலை பல மாநிலங்களில் தொடர்கிறது. எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ்,பிளஸ் 2 வரை, இலவச கல்வியை கட்டாயமாக்க வேண்டும்' என, பல மாநில அரசுகள், மத்திய விடுத்துள்ளன.

இது பற்றி, டில்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், அகில இந்திய பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான,அசோக் அகர்வால் கூறியதாவது:கல்வி உரிமை சட்டப்படி, அரசு உதவி பெறாத, தனியார் பள்ளிகள், ஏழை மாணவ - மாணவியருக்காக, ௨௫ சதவீத இடம் ஒதுக்க வேண்டும்; அவர்களிடம், கட்டணம் வசூலிக்க கூடாது. இலவச கல்வி இல்லாததால், 8ம் வகுப்புக்கு பின், தனியார் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவ - மாணவியர், அரசு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது.அப்போது, பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பலர், 8ம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.எனவே, 'கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும்' என, ௨௦௧௭ல் இருந்தே, பெற்றோர் - ஆசிரியர் சங்கம் கோரி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிலையில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக, மத்திய மனிதவளமேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரிசீலனை :

அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல்வேறு மாநிலங்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கங்கள், சமூக நல அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று, பிளஸ் 2 வரை, கட்டாய இலவச கல்வியை நீட்டிக்கபரிசீலிக்கப்பட்டு வருகிறது. விரைவில், இது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.பள்ளி படிப்பை, ஏழை மாணவ - மாணவியர், பாதியில் நிறுத்துவதை தடுக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்படஉள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்காலம் இல்லை :

'ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்பு வரை மட்டும் இலவச கல்வி அளிப்பதால் பயன் இல்லை' என, பிரபல கல்வியாளரும், டில்லி, 'ஜாமியா மிலியா இஸ்லாமியா' பல்கலை பேராசிரியருமான, ஜானகி ராஜன் கூறினார்.

இது பற்றி அவர் கூறியதாவது:ஏழை மாணவ - மாணவியருக்கு, 8ம் வகுப்புக்கு பின், கட்டணம் செலுத்தி படிப்பது, மிகவும் கஷ்டம்.

இதனால் பலர், 8ம் வகுப்புடன் கல்வியை நிறுத்தி விடுகின்றனர். 8ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு, வேலை கிடைப்பது சிரமம். சாதாரண வேலைக்கு கூட, ௧௦ம் வகுப்பு வரையாவது படித்திருக்க வேண்டும்.எனவே, கட்டாய இலவச கல்வியை, பிளஸ் 2 வரை நீட்டிக்க வேண்டும். பிளஸ்2 வரை படித்தவர்களுக்கு, மேற்படிப்பு பற்றி சிறந்த புரிதல் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

2 comments:

  1. தனியார் பள்ளிகளை ஊக்குவித்து ,,,,,அரசு பள்ளிகளை மூட இத்திட்டம் உதவும் ......அரசு ஆசிரியர்கள் இந்த திட்டத்தை கைவிட அரசாங்கத்திற்கு மனு அளிக்க வேண்டும் .....இல்லை என்றால் எதிர் காலத்தில் அரசு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு விடும் .............

    ReplyDelete
  2. 2 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற வைத்த கேரள அரசு!
    "அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் என முன் மாதிரியானபள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது."


    ``கடந்த இரண்டு வருடங்களில் கேரளாவில், 2,50,000 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார்கள்.இதில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியவர்கள்" நம் அண்டை மாநிலமான கேரளாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் குறிப்பிடப்பட்ட இந்தச் செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து ஆச்சர்யப்பட வைத்தது. ஏனெனில், அரசுப் பள்ளியிலிருந்து பலரும் தங்கள் பிள்ளைகளை, தனியார் பள்ளியில் சேர்க்கும் இந்தச் சூழலில், கேரள அரசின் இந்தச் சாதனை மகத்தானது. 170 கோடி ரூபாயைக் கல்வி மேம்பாட்டுக்காக கேரள அரசு ஒதுக்கியுள்ளது.

    அதில், 45,000 வகுப்பறைகளைத் தரம் உயர்த்தவும், லேப் வசதிகளை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது கேரள அரசு. இது எப்படிச் சாத்தியமானது என்பதை, கேரளாவில் 30 ஆண்டுகள் ஆசிரியராகவும், பாடக் குழுவிலும் பணியாற்றியவரான ராஜேந்திரன் தாமரபுரா அவர்களிடம் பேசினேன். ``அரசுப் பள்ளியை நோக்கிப் பெற்றோர்களை வரவழைத்த கேரள அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. கோழிக்கோடு அருகில் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளியை கேரளா அரசு உருவாக்கியது. அது தொடங்கும்போதே வெளியிட்ட அறிவிப்பில், `அர்ப்பணிப்போடு பணியாற்றுபவர்களே அந்தப் பள்ளியில் வாய்ப்பு' என்று தெரிவித்திருந்தது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்கள் மட்டுமல்ல, கட்டட வசதி, மாணவர்கள் நலனைப் பாதுகாத்தல் எனமுன் மாதிரியான பள்ளியாக அது அமைந்திருந்தது. அதிலுள்ள வசதிகளுக்கு அருகில்கூட தனியார் பள்ளிகளால் வர முடியாது. அந்தளவுக்குச் சிறப்புகள் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக, 5 முதல் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தனிக் கவனம் கொள்ளப்பட்டது. அந்தப் பள்ளி, தனியார் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர்களின்மன நிலையை அசைத்துவிட்டது. இந்த முன்மாதிரி பள்ளியின் செயல்பாட்டை மாநிலம் முழுக்கப் பரப்புவதற்கு அரசு நினைக்கிறது.


    பெற்றோர்களின் மன மாற்றத்திற்கு முன் மாதிரிபள்ளியை விடவும் முக்கியமானது `படனோள்சவம்'. அதாவது, பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படும் அல்லவா? அதுபோலத்தான். ஆனால், வெறுமனே கொண்டாட்ட விழாவாக மட்டுமல்லாமல், ஒரு மாணவன்அந்த ஆண்டு கற்றதை, செய்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமான கல்விக் கண்காட்சியாக `படனோள்சவம்' விழாக்கள் அமைந்திருக்கும். இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்குக் காரணம், கேரள மாநில அரசுப் பள்ளி ஆசிரியர்களிடையே உள்ள புரிதல். கற்பிக்கும் தன்மையை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் குணம். பெற்றோர்களுக்குக் கல்வி குறித்து ஏற்படும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள உதவும் வகையில் ஏற்பாடுகளை அரசு செய்துவருகிறது.



    இதற்கு அடுத்து, கேரள அரசின் கல்வி அமைச்சர், ஆசிரியராகப் பணியாற்றியவர். அதனால், பாடத் திட்டம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட கல்வி சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் அறிந்தவர். அதற்கான தீர்வுகளைக் காண முனைப்போடு செயல்படுபவர். எல்லோரும் தொடர்புகொள்ளும் வகையில் எளிமையானவர். ஒரு சிறுமி அவரை நேர்காணல் எடுத்த வீடியோ கேரள மக்கள் அனைவராலும் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டது. நான் அங்கு பணிபுரியும் காலத்தில், அவரோடு நிறைய உரையாடியிருக்கிறேன். மாணவர்கள் நலன் சார்ந்த மிக நல்ல மாற்றங்கள் கேரளாவில் நிகழ்ந்துவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதன் தொடக்கப் பணிகளில் நானும் பங்கேற்றிருக்கிறேன் என்பது கூடுதல் மகிழ்ச்சி." என்கிறார் ராஜேந்திரன் தாமரபுரா.(ராஜேந்திரன் தாமரபுரா, 30 ஆண்டுகளுக்கு மேல், கேரளா பாடத்திட்டக் குழுவில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றியவர். மிக ஆரோக்கியமான பல முயற்சிகளை முன்னெடுத்தவர். தற்போது நீள் கதை பாடத்திட்டம் எனும் கற்பித்தல் முறைமையை ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துவருகிறார்.)

    அரசுப் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் செல்லும் சூழலை கேரள அரசு உருவாக்கியதைப் போல தமிழக அரசும் ஏற்படுத்துமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி