ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டு பணியாற்றியவரை இடமாற்றம் செய்ய உத்தரவு: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 9, 2019

ஒரே இடத்தில் தொடர்ந்து 3 ஆண்டு பணியாற்றியவரை இடமாற்றம் செய்ய உத்தரவு: தலைமை தேர்தல் அதிகாரி கடிதம்


கடந்த 2015 ஜூன் முதல், 2017 மே மாதத்துக்கு இடைப்பட்ட காலத் தில் பணியமர்த்தப்பட்டு தற்போது வரை ஒரே சட்டப்பேரவை தொகுதி, மாவட்டத்தில் பணி யாற்றி வந்தால் அவர்களை வரும் 15-ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக டிஜிபி, மாவட்ட ஆட்சியர், முக்கிய துறைகளின் செயலர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹு உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்றம்நாடாளுமன்ற மக்களவைக் கான தேர்தல் விரைவில் அறிவிக் கப்பட உள்ளது.

வழக்கமான நடைமுறைப்படி, தேர்தல் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள், அலு வலர்கள் ஒரே பதவியில், பணியிடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினால் அவர்கள் பணியிட மாற்றம்செய்யப்பட வேண்டும். அதன்படி, காவல் துறை, வருவாய் மற்றும் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய, தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியிருந்தது.இதையொட்டி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப் பிரத சாஹுவும் அனைத்து துறை களின் உயர் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று தமிழக உள்துறை, ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை செயலர்கள், வருவாய் நிர்வாக ஆணையர், தமிழக டிஜிபி, அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.ஆணையத்துக்கு அறிக்கைஅக்கடிதத்தில், தேர்தல் ஆணை யத்தின் உத்தரவை குறிப்பிட்டுள்ளதுடன்.

கடந்த 7-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவின்படி, 2015-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 2017-ம் ஆண்டு மே 31-ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் பணியமர்த் தப்பட்டவர்கள், தற்போது வரை ஒரே சட்டப்பேரவை தொகுதியில் அல்லது ஒரே மாவட்டத்தில் பணியாற்றி வந்தால், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக வரும் 15-ம் தேதிக்குள் பணியிடமாற்றம் செய்து, பெயர், பதவியை குறிப் பிட்டு ஆணையத்துக்கு அறிக்கைஅளிக்க வேண்டும்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி