ஜே.இ.இ., நுழைவு தேர்வு மார்ச், 7 வரை அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2019

ஜே.இ.இ., நுழைவு தேர்வு மார்ச், 7 வரை அவகாசம்


உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மார்ச்,7 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

என்.டி.ஏ.,பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில், இன்ஜி., படிக்க, ஜே.இ.இ., என்ற, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருங்கிணைந்த நுழைவு தேர்வான, ஜே.இ.இ.,யை, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., நடத்துகிறது.இந்த ஆண்டு முதல், இரண்டு முறை தேர்வு நடத்தப்படுகிறது. ஜனவரியில் முதல் கட்ட, ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. இரண்டாவது தேர்வு, ஏப்., 7 முதல், 20ம் தேதிக்குள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கானஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்ரவரி, 8ல் துவங்கியுள்ளது.

இணையதளம்இதுகுறித்து, அனைத்து பள்ளிகளிலும் படிக்கும், பிளஸ் 2 மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, என்.டி.ஏ., அறிவுறுத்திஉள்ளது. மார்ச், 7க்குள் ஆன்லைனில் விண்ணப்ப பதிவை முடிக்க வேண்டும் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விபரங்களை, www.nta.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி