Send Your Study Materials, TLM, Videos, Articles To Kalviseithi.net@gmail.com, Whatsapp No : 9965642731
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை!முதல்வர் முன்னிலையில் செயல் விளக்கம்


பள்ளி மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிக்க உருவாக்கப்பட்ட ரோபோவின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் பழனிசாமி முன்னிலையில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ரோபோக்களை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வி பயிற்சி அளிப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று இந்த ரோபோவை தயாரித்துள்ளது. செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற அணுகுமுறைகள் மூலம் மாணவர்களிடையே கற்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பவ்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தற்போது செயற்கை நுண்ணறிவு முறையில் கல்வி கற்கும் நடைமுறை விரைவில் அறிமுகமாகிறது. இந்த முறையில் வகுப்பறையில் மாணவர்கள் நுழையும்போதே அவர்களின் முகங்களை வைத்து வகுப்பறைக்கு வந்துள்ள மாணவர்கள் என்பதை ரோபோ பதிவு செய்து கொள்கிறது. பின்னர், பாடங்களில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து மாணவர்கள் ஏதேனும் கேள்வி கேட்க முற்பட்டால் அவர்களது பெயரை கூறி சந்தேகத்தை கூறுமாறு ரோபோ கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்னர் கேள்விக்குரிய பதிலை மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரிய பட விளக்கங்களுடன் ரோபோ விளக்கமளிக்கிறது.

உதாரணமாக அறிவியல் பாடத்தில் பால்வெளி அண்டம் பற்றி மாணவர்கள் கேள்வி எழுப்பினால் வகுப்பறை சுவற்றில் செவ்வாய், வியாழன் உள்ளிட்ட கிரகங்களைக் காண்பித்து அவற்றின் இயக்கங்கள், சிறப்பியல்புகள், உள்ளிட்டவை பற்றி விளக்கும் வகையில் தமிழில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜப்பான், அமெரிக்கா போன்ற தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் மட்டுமே இந்த ரோபோ கல்விமுறை நடைமுறையில் உள்ள நிலையில், தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அந்த ரோபோவை முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் இயக்கி செயல்விளக்கம் செய்து காட்டப்பட்டது. அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் ரோபோ தயாரித்த தனியார் நிறுவன அதிகாரிகள் உடன் இருந்தனர்.

12 comments

 1. Appa trb tet கால்பெர் varatha


  ReplyDelete
  Replies
  1. ரோபோவுக்கு மட்டும்தான் exam வேலைவாய்ப்பு நமக்கு
   இல்லை.

   Delete
 2. போகாத ஊருக்கு பஸ்சில் டிக்கெட் எடுப்பது போல் தெருகிறது

  ReplyDelete
 3. சிவகாமி ஜோசியம் ......................... இந்த திட்டம் மூலமாக எத்தனை கோடிகளை வீணடிக்கப்போகிறார்களோ .........................................

  கடவுளே தமிழ்நாட்டை இவங்ககிட்ட இருந்து காப்பாத்துங்க.

  கப்பலில் இருக்கும் ஓட்டையை அடைக்க கல்லுப்பை பயன்படுத்தும் மகா அறிவாளிகள் ...

  நடைமுறை சாத்தியக்கூறுகளை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் நாடு மிக சிறந்த மாநிலம் ஏனெனில் பள்ளிக்கல்வித்துறை மிக சிறப்பாக செயல்படுகிறது....

   ரோபோவை வாங்க எவளோ பணத்தை செலவழிக்க போரங்களோனு நெனைசதான் ரொம்ப கவலையா இருக்கு.....

   Delete
 4. 2012ல் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்று ஆசிரியர் பணியிலிருக்கும் நண்பர்கள் போட்டித்தேர்வு எழுதி வேறு துறைக்கு (அமைச்சுப்பணியாளர்) மாறிவிடுவது நல்லது. ஆட்குறைப்பு பதவியிறக்கம் ஒப்பந்தபணி தவிர்க்க முடியாதது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

  ReplyDelete
 5. சங்கர் படமாடா எடுக்க போறீங்க ......வகுப்பு பாடமடா.....



  என்னமோ.....

  ReplyDelete
 6. உயிரோட இருக்கிற மனிதர்களை நம்பாமல்
  ஏற்கனவே program செய்யப்பட்ட கணினி ஐ நம்பி இறங்குகின்றீர்கள்....
  இப்ப வளர்ந்து வரும் தலைமுறைகள் எளிதாக கணினிஐ இயக்கி reprogram செய்து உங்கள் கையில் கொடுத்தாலும்
  அதை வைத்து எப்படி அரசியல் செய்யலாம்
  அல்லது
  கொள்ளை(கை)முடிவு எடுக்க வைக்கலாம் என்று தானே
  அரசியல்வாதிகளால் சிந்திக்க முடியும்......
  காலக்கொடும கதிரவா!.....

  ReplyDelete
 7. Athemathri ungalukum robo va kondu varalamea..1,10,000 thenda salary michamakumea..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives