பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! அதுவும் இந்த ஆண்டு முதலே... மாணவர்கள்..? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2019

பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! அதுவும் இந்த ஆண்டு முதலே... மாணவர்கள்..?


செங்கோட்டையன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக தற்போது அரசு பள்ளிகளிலேயே தனியார் பள்ளிகளுக்கு இணையாக எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன மாணவர்களின் பயோமெட்ரிக் வருகை பதிவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்கிடையில் சமீபத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதுவும் இந்த வருடமே கட்டாயம் 5 மற்றும் எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது. இதனால் மாணவர்கள் சற்று சிந்திக்க தொடங்கி உள்ளனர்

ஆனால் ஏன் இந்த பொது தேர்வு என்றால் மாணவர்கள் 10 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டும் என்றும் நீட் தேர்வு முதலான அனைத்து தேர்வுகளிலும் மாணவர்கள்  தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர்களை ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிலேயே ஆயத்தப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்து இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. 

18 comments:

  1. நான் பள்ளிகூடத்துல பத்தாவது 460 மார்க் எடுத்தேன், பன்னிரெண்டாவதுல 950 மார்க் எடுத்தேன், சரி அறிவியல் படிச்சு சாதிக்கலானு நெனச்சு BSC படிச்சேன், ஆனா என்கூடவே படிச்சு 700 கூட வாங்காதவன் BE/BTECH படிச்சான், இப்போ மாசம் ஒரு லட்சம் சம்பளத்துல நல்ல IT கம்பெனில வேலை பாக்குறான், நான்..... MSC B.Ed முடிச்சுட்டு 15000 சம்பளத்துக்கு மாசம் முழுக்க போராடிட்டு இருக்கேன், இதுல நான் பள்ளி கூடத்துல எடுத்த மார்க் வெச்சு நாக்கு கூட வழிக்க முடியல, மாணவர்களுக்கு எது வேணும் எது வேணாம்னு சொல்லி குடுக்கணும், இப்போ இருக்குற இந்த உலகத்துல பணம் இல்லாதவன் பிச்சை காரனுக்கு கூட சமமா இருக்க முடியாதுன்னு கத்து குடுங்க, அரசு பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் கணிதம் எல்லாமே ஆங்கில வழில சொல்லி குடுங்க, எப்படி வேலை வாங்கணுன்னு சொல்லி குடுங்க, எப்படி கத்துக்கனுனு சொல்லி குடுங்க, மார்க் மட்டும் வெச்சு ம*று கூட பு*ங்க முடியாதுன்னு நேராவே சொல்லி குடுங்க,,,,,,

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. :-( yes sir correct. Niraiya perin Solla mudiya Manakkumaral..

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. உண்மை. இதன் ஒரு பகுதி என் கதையும் கூட. மார்க்
      வாங்கி என்ன செய்யறது? உங்க கருத்து அனைவரையும் சென்றடைய வேண்டும்.

      Delete
  2. Replies
    1. உங்கள் ஆதங்கம் உண்மையே...
      ஆனால்,
      ஆங்கில வழி கல்வி மட்டுமே இதற்கு தீர்வு என்பது ஒரு போதும் சரியாகாது...

      ஒரு மனிதனின் வாழ்க்கைபோக்கு பொருளாதார சூழல், குடும்பச்சுழல் மற்றும் சமூகச்சூழலைப்பொருத்து இங்கே
      கட்டமைக்கப்படுகிறது என்பது ஓரளவுக்கு சரியாக இருந்தாலும்,
      முக்கிய முழுகாரணம்
      சுய சிந்தனை(குறிக்கோள்)வளர்தல்,
      விடமுயற்சியை பழக்கப்படுத்துதல்,
      பயிற்சியை கொடுத்தல்,
      மற்றும்
      கடைசியாக மிக மிக முக்கியமான தன்னம்பிக்கையை விதைத்தல்...

      இவைகளை வளர்ப்பதற்கு குடும்பசுழல்,
      பள்ளிச்சூழல்,
      சமூகச்சூழல் போன்ற அனைத்து சூழல்களும்
      வாழ்க்கையில்
      "கல்வி என்பது கற்று அதன் மூலம் மற்றவர்களுக்கு பயன்பெரும் விதத்தில் வாழ்வதுதான் வாழ்க்கை"
      என்பதை உணரும் வகையில்
      வாழக்கற்றுக்கொடுக்கவேண்டும்..

      இந்த பணம்சம்பாதிக்கும் பொது புத்தியிலிருந்து விழகி வந்தால்
      வருங்கால சந்ததிகள் பயன் பெருவதோடு
      சந்தோசசமூகமாக வாழும்...

      Delete
  3. சமூக அறிவியல் பாடம் முழுக்க தமிழிலும்

    அறிவியல் முழுக்க ஆங்கிலத்திலும், குறைந்த பட்சம் technical terms மட்டுமாவது ஆங்கிலத்தில் தெரியும் அளவுக்கு இருப்பது நன்மை..

    கணிதம் தமிழிலும் நடத்தினால்...


    இதை அனைவருக்கும் பொதுவாக்கினால் ஆங்கில வழி தமிழ்வழி பிரிவினை அகலும். அரசுப்பள்ளி தனியார் பள்ளி பிரிவினை ஒழியும்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அறிவியல் மற்றும் கணிதம் ஆங்கில வழில மட்டுமே சொல்லி குடுக்கணும்,

      Delete
  4. தாய்அறிவும்வேண்டும்

    ReplyDelete
  5. தாய்அறிவும்வேண்டும்

    ReplyDelete
  6. நாங்கள் சொல்வதைப் புரிந்துக் கொள்ளுங்கள்..

    இன்று நாம் படிக்கும் கணித எண்கள் Arabic numerals. அதை விடுத்து நாம் தமிழ் எண்களை மட்டும் வைத்து கணிதம் படிப்பதில்லை..

    பல்லுறுப்புக் கோவை/polynomial என்பது x^3 + x^2 + x +1=0 என்று தான் படிக்கிறோம்.. அ^3 + அ^2 +அ +1 =0 என்றோ..

    log base 10(x) என்பதற்கு மடக்கை அடி (10) என்று படிப்பதில்லை..

    தமிழில் பாடம் அமைய வேண்டும்.. ஆனால் technical terms ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு சேர கற்றுக் கொடுத்தல் நன்று..

    இல்லையென்றால், engineering, mbbs, doctrate எல்லாம் தமிழில் மாற்ற பாடுபட வேண்டும்.. இரண்டில் ஒன்றை நீங்கள் செய்யாவிட்டால்.. அரசுப்பள்ளி மாணவர்கள் முழுவதுமாக english mediumக்கு மாறிவிடுவார்கள்

    ReplyDelete
  7. உங்கள் ஆதங்கம் உண்மையே... 
    ஆனால்,
    ஆங்கில வழி கல்வி மட்டுமே இதற்கு தீர்வு என்பது ஒரு போதும் சரியாகாது...

    ஒரு மனிதனின் வாழ்க்கைபோக்கு பொருளாதார சூழல், குடும்பச்சுழல் மற்றும் சமூகச்சூழலைப்பொருத்து இங்கே 
    கட்டமைக்கப்படுகிறது என்பது ஓரளவுக்கு சரியாக இருந்தாலும்,
    முக்கிய முழுகாரணம் 
    சுய சிந்தனை(குறிக்கோள்)வளர்தல்,
    விடமுயற்சியை பழக்கப்படுத்துதல்,
    பயிற்சியை கொடுத்தல்,
    மற்றும்
    கடைசியாக மிக மிக முக்கியமான தன்னம்பிக்கையை விதைத்தல்...

    இவைகளை வளர்ப்பதற்கு குடும்பசுழல்,
    பள்ளிச்சூழல்,
    சமூகச்சூழல் போன்ற அனைத்து சூழல்களும்
    வாழ்க்கையில் 
    "கல்வி என்பது கற்று அதன் மூலம் மற்றவர்களுக்கு பயன்பெரும் விதத்தில் வாழ்வதுதான் வாழ்க்கை
    என்பதை உணரும் வகையில்
    வாழக்கற்றுக்கொடுக்கவேண்டும்..

    இந்த பணம்சம்பாதிக்கும் பொது புத்தியிலிருந்து விழகி வந்தால்
    வருங்கால சந்ததிகள் பயன் பெருவதோடு 
    சந்தோசசமூகமாக வாழும்...

    ReplyDelete
  8. முழுவதுமாக கல்வி அரசின் வசம் இருந்திருந்தால் 700 எடுத்தவன் BE படித்திருக்க முடியாது.950 எடுத்தவர்கள் BE படித்திருக்களாம்.அரசு கல்லூரிகள் மட்டும் இருந்திருந்தால் 700 எடுத்தவன் காசு கொடுத்து கல்வியை விலைக்கு வாங்கி இருக்க முடியாது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை....
      அரசு என்பது ஏற்றத்தாழ்வு அற்ற நிருவனமாக இருக்க வேண்டும்..

      வெறும்
      மருத்துவம், கணினி,பொறியியலில் படிப்பு களைமட்டும் கவனம் செலுத்தாமல்,
      விவசாயம்,மீன்வளத்துறை,வாணிபத்துறை,கலைத்துறை போன்ற மற்ற துறைகளிலும்
      அரசுப்பணிகளைஉருவாக்கி மாணவர்களின் திறமைக்கு ஏற்ப
      வருவாய் ஈட்டுவதற்கான சூழலை அமைக்க வேண்டும்...

      இவைகளை தனியார் மயமாக்குதலை விட
      அரசுத்துறையாக இருந்தால்
      பாதுகாப்பு உணர்வுடன் பயின்று
      அனைத்து மக்களுக்கு உதவும் விதமாக வாழும் சூழலை ஏற்படுத்தலாம்.....

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி