அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 8, 2019

அதிரடி மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது தமிழகக் கல்வித்துறை!


அடுத்தது என்ன கல்வித்துறையில்? ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி பாடம் நடத்தாமல் இருக்க முடியாது? இனி என்ன என்ன மாற்றங்கள் வர இருக்கிறது.—ஓர் எச்சரிக்கை மற்றும் முன் தயாரிப்பு செய்துகொள்ள ஆலோசனை கட்டுரை

ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியாக வருவது இல்லை.
வந்தாலும் பாடம் நடத்துவது இல்லை.

பள்ளிக்கு லேட்டாக வந்து முடியும் முன்னரே சென்று விடுகின்றனர்.

 ஈராசிரியர் பள்ளியில் முறை வைத்து பள்ளிக்கு விடுப்பு எடுத்துக்கொள்கின்றனர்.

தலைமை ஆசிரியர்கள் அந்த வேலை,இந்த வேலை என ஆன் டியூட்டி போட்டுவிட்டு சொந்தவேலை செய்கின்றனர்.

இவைபோன்று பல புகார்கள் கல்வித்துறைக்கு வந்ததை அடுத்து கல்வித்துறை பல நடவடிக்கைகள் எடுத்து இவற்றிற்கெல்லாம் நவீன ஸ்மார்ட் போன் உதவியுடன்   முடிவு கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ள
தாக தெரிகிறது.

EMIS
தற்போது பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் EMIS என்னும் தொகுப்பில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது EMIS வலைதளம் மிக வேகமாக செயல்பாட்டில் உள்ளதை கவனித்தீர்களா..!!

ஏன் தெரியுமா ? EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டு விட்டது .இனி EMIS வலைதளம் எப்போதுமே அதிவேகத்திலேயே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை
EMIS சர்வர் தற்போது CLOUD என்னும் அதிவேக சர்வருடன் இணைக்கப்பட்டதன் மூலம் இனி அதனைப்பயன்படுத்தும் பல ஆன்ட்ராய்டு ஆப்ஸ்கள் உருவாக்கப்பட உள்ளது.
அதற்குண்டான தரவுகள் அனைத்தும் இனிமெயின் சர்வருடன் பங்கிட்டுக் கொள்ளப்படும்.

அதற்கு உதாரணம் தான் சென்ற ஆண்டு மாணவர்களுக்கான அடையாள அட்டை ஆப்ஸ் ஆகும்.
நாம் அதைப்பயன்படுத்தியே மாணவர்களின் போட்டோக்களை அப்லோடு செய்தோம் அல்லவா..??

அதுபோலவே தற்போது TN ATTENDANCE எனும் ஆப்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.இதனைக்கொண்டு மாணவர் வருகைப்பதிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.
சரி இதனால் என்ன பயம்.
ஆம் பயமொன்றும் இல்லை.ஆனால் கட்டுப்பாடுகள் வர இருக்கின்றன.
அதாவது...
பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் இதனை பதிவிறக்க வேண்டும். தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் அவரவர்  கைபேசி கொண்டு வருகை பதிவிட வேண்டும்.

விடுப்பு எடுக்கும் ஆசிரியரின் வகுப்பிற்கு மட்டும் நாளில்தான்  அடுத்த ஆசிரியர்  பிற ஆசிரியர் வகுப்பிற்கு வருகை பதிவிட வேண்டும்.

முன்னரே...
 அதாவது...
 ஒவ்வோரு கைபேசி எண்ணும் அதற்குண்டான ஆசிரியர் பெயருடன் இணைத்து தரவுகள் சேகரிக்கப்படும்.

அதனைக்கொண்டு பள்ளிக்கு வராமலேயே.. அடுத்த ஆசிரியர்
போன் மூலம் யார் யார் வருகை பதிவு மேற்கொண்டனர் என வகைப்படுத்தப்படும்.

 இதன் மூலம் அவரவர் வகுப்பிற்கு அவரவரே கைபேசி மூலம் வருகைப்பதிவு செய்தால் தான் ஆசிரியர் பள்ளிக்கு வந்துள்ளார் என அர்த்தம் இல்லையேல் அவர் வரவில்லை என கணக்கெடுக்கப்படும்.

அதாவது அவரது வருகை போலி என கணக்கிடப்படும். இதன்மூலம் இரு ஆசிரியர் எந்த எந்த வகுப்பிற்கு அன்றைய தினம் கையாண்டு உள்ளார் என அறியலாம்

QR  கோடுகள் ஸ்கேன் செய்ய பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஆசிரியர்கள் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும்.

ஆசிரியர்களின் கைபேசி எண்கள் ஏற்கனவே மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் அவர் போதிக்கும் போது பயன்படுத்திய QR  கோடுகள் மூலம் அவர் என்ன என்ன பாடங்கள் போதித்தார் என.. தானகவே பதிவு செய்யப்பட்டு அத்தகவல் மெயின் சர்வருடன் இணைத்து  கண்காணிக்கப்படும்.

 அவர் QR  கோடு ஸ்கேன் செய்யவில்லை எனில் பாடம் போதிக்க வில்லை சும்மா இருந்ததாக கணக்கிடப்படுமாம்.

பாடம் சம்மந்தப்பட்ட QR  கோடுகள் ஸ்கேன் செய்ய அரசு சார்பில் புதியதாக வெளியிடப்படும் QR  கோடு ஸ்கேனர் மூலம் தான் ஸ்கேன் செய்து பாடம் நடத்தவேண்டும் என அறிவிக்கப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கான வருகைப்பதிவு
ஏற்கனவே ஆசிரியர் விவரங்கள் TEACHER PROFILE என்ற முறையில் தகவல்கள் திரட்டப்பட்டு தயாராக உள்ளன.இதனை EMIS,DISE தரவுகளுடன்  இணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஈரிரு வாரங்களில் இப்பணி முடிவடைந்ததும் ஆசிரியரின் வருகைப்பதிவிற்கு என தனி ஆண்ட்ராய்டு ஆப் வெளியிடப்பட உள்ளது.

  இந்த ஆப்பில் ஆசிரியர் தன் கைரேகையை காலை 9.00-9.15 க்குள்ளும்  பள்ளியை விட்டு வெளியே செல்லும் போதும் பதிய வேண்டும்.

இதில் என்ன வென்றால் பள்ளியின் அமைவிடம் குறித்த அட்ச , தீர்க்க ரேகை விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் கைரேகை பதிவிடும் போது அவர் இருக்கும் இடத்தின் அட்ச தீர்க ரேகையுடன் பதிவாகும் வகையில் இந்த ஆப் தயாரிக்கப்பட உள்ளதால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அமைவிடத்துடன் ஒப்பிட்டு வருகையை உறுதிப்படுத்தும் வகையில் இது செயல்பட உள்ளதாம்.100 மீட்டர் வேறுபாடு இருப்பின் ஏற்றுக்கொள்ளும் வகையில் இது நிறுவப்பட்டுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் விடுப்பு விவரங்கள் பதிவிட வேண்டும்.

அத்தரவுகள் உடனுக்குடன் தொகுத்து உயரதிகாரிகளின் பார்வைக்கு ஆட்டோமேட்டிக்காக  தினமும் காலை மாலை  என  விவரங்கள் (இதற்கென தனியாக அதிகாரிகளுக்கென உருவாக்கப்பட்ட தனி ஆப்ஸ்-ல் )தகவல்கள் பரிமாறப்படும்.

ஆசிரியரின் வருகை வாராந்திர ,மாதாந்திர அறிக்கைகள் பள்ளியின் DISE எண்ணை தெரிவு செய்தால் போதும் கிடைத்துவிடும்.அதேபோல் அவர் கையாண்ட வகுப்பு, நடத்திய பாடங்கள் என்ன? போன்ற விவரங்களும் கிடைத்துவிடும்.

இனி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆன்ராய்டு போன் தான் உண்மை விளம்பி மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு ஸ்பை.

 நம்மை கேட்காமலேயே நம் செயல்பாட்டை  கண்காணிக்க நமது போன் தான் அதிகாரிகளுக்கு தரவுதரும் கருவியாகிறது.

 உண்மையாக உழைக்கும் ஆசிரியருக்கு பாதிப்பேதும் இல்லை..

 ஆனால் உழைக்கத்தயங்குவோர் உழைத்திட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.

இவை எல்லாம் மாணவர் நலன் நோக்கியே..

வரவேற்போம்.. மாற்றத்தை...

இன்னும் பல புதிய தகவல்கள் வரவிருக்கிறது..

தகவலுக்காக...
அன்புடன்..
அ.முத்துக்குமார் த.ஆ

24 comments:

  1. நல்லது வரவேற்கிறோம் சரியாக பணியை செய்பவருக்கு கவலையில்லை, இப்படித்தான் அனைத்து பிஎட் கல்லூரிகளிலும் மாணவர்கள் பயோ மெட்ரிக் வைத்து காலை 10 மணிக்குள் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை கழகத்திற்கு அனுப்ப சொன்னார்கள் அடடே என்ன ஆச்சரியம் ஒரு irregular காலேஜ் கூட இல்லை super

    ReplyDelete
  2. புதிய ரூபாய் நோட்டில் சிப்பு வைத்த கதை போன்று உள்ளது

    ReplyDelete
  3. புதிய ரூபாய் நோட்டில் சிப்பு வைத்த கதை போன்று உள்ளது

    ReplyDelete
  4. சரி நான் போட்டு, absentees list வாங்கி, என்னுடைய போன் மூலம் பதிவிட்டால் எப்படி கண்டுபிடிப்பீர்கள்?? இது மாதிரி ஆசிரியர்களை கிரிமினல் குற்றவாளி போன்று கண்காணிப்பது கொஞ்சம் சரியில்லை

    ReplyDelete
  5. அரசு பணிகளை மேற்கொள்ள அரசேmobile phone வாங்கித்ததரலாமே!

    ReplyDelete
    Replies
    1. வாங்கி மந்தால் மட்டுமே இத்தகைய வேலைகளை செய்யவே தொடங்குவோம்...

      இல்லையேல் செய்ய மாட்டோம்

      Delete
  6. அதல்லாம் இருக்கட்டும்... கக்கூஸ் கட்டி தருவிங்களா மாட்டிங்களா..

    ReplyDelete
  7. MLA அனைவருக்கும் தினமும் அவரவர் தொகுதி அட்ச ரேகை தீர்க்க ரேகைக்குள் வருகையைப் பதிவு செய்ய ஏதேனும் மொபைல் ஆப் உருவாக்கலாமே.

    ReplyDelete
  8. அனைவரும் கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றுகின்றனர் இது போல மாற்றம் வரின் எவரும் அவரவர் வேலையை செய்ய மாட்டார்கள்.கேடு கெட்ட அரசு.

    ReplyDelete
  9. Part time teachers ku 300 salary increment Pani 8000 kudga sir because avagala neraya sambadhikaraga panatha selavum pana theriyala so 8000 podhum avagaluku

    ReplyDelete
  10. Ama on duty potu yega Poraga oru letter ah morning 10 maniku anupitu 2 maniku reply keta on-duty la dha varuvaga

    ReplyDelete
  11. Ada loosegala modhala kakusa katuga pavam girls students napkins matha kuda place illa

    ReplyDelete
  12. School irukaradhu salem La deo office sankari la Pota on dutyladha varamudiyum

    ReplyDelete
  13. Dai posting epada podaringa....

    ReplyDelete
  14. வளர்ந்து வரும் டெக்னாலஜிஐ எதுஎதுக்கெல்லாம் பயன்படுத்தி அரசுப்பள்ளிகளை முன்னேற்றலாம் என்று நினைப்பதில் தவறு இல்லை...
    ஆனா
    நீங்கள் டெக்னாலஜி ஐ பயன்படுத்துகிற இடம் தான் தவறு..

    வெறும் வருகைப்பதிவேட்டிற்கு செலவிடுவதை விடுத்து,
    ஒவ்வொறு பள்ளியிலும் அலுவலகவேலையாட்களை நியமித்து ஆசிரியர்களின் வருகை,அரசின் செயல்திட்டங்களின் கணக்குகளை சமர்ப்பிப்பது,மற்றும்
    அரசிற்கும் பள்ளிகளுக்கும் எளிய முறையில் தொடர்ப்பை ஏற்படுத்தி
    ஆசிரியர்களின் வேலைப்பளுவைகுறைக்கலாம்....

    வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சி க்கு ஏற்ப அரசு ப் பள்ளிகளை முன்னேற்ற நினைத்தால்,
    சரியான முறையில் தொடர்ந்து பராமரிக்கப்பட்ட ஆய்வகங்கள்,நூலகங்கள் அமைத்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்துங்கள்...

    இதில் குறிப்பாக
    அரசு ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் சேர்த்து,
    முறையான முறையில் பராமரிக்க ப்பட்ட
    குடிநீர் வசதி, கழிப்பிடவசதி செய்து தரவேண்டும்...


    ReplyDelete
  15. Naangalum ungala athiradiya maatha ready aayitom, election mattum vai pothum, mathatha nasnga pasrthukirom

    ReplyDelete
  16. Amount illa athanala ungaluku pension koduka ,pos posting poda mudialanu soldra, ithula unaku marubadium ottu pottu jeika vacha ithe thaana solluva, so unaku Nan ottu pottu marubadium intha bathil than Varun, athanala ethuku Nan unaku ottu podanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி