அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2019

அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம்


அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.

அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் மென்திறன்மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல் போன்றவை தொடர்பாக, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, நேற்று முன்தினம், ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர், இ.பி.எஸ்., முன்னிலையில், உயர் கல்வித் துறை முதன்மை செயலர், மங்கத்ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர், ஜனகா புஷ்பநாதன் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ராஜு, அன்பழகன், உதயகுமார் பங்கேற்றனர்.

2 comments:

  1. முதலில் அமைச்சர்கள் , MLA தம்பிகள் அதுவும் அதிமுக குழந்தைகள் எப்படி பேச வேண்டும் என்பதற்கு பயிற்சி எடுங்கள்.....

    ReplyDelete
  2. Ithu illamathan innaikku niraya peroda life kelvi kuriyaga irukku atha pannunga muthalla

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி