போராட்டத்தின்போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

போராட்டத்தின்போது பள்ளிக்கு வராத ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!


ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விபரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 22 முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று, பள்ளிக்கு வராமல் இருந்த ஆசிரியர்களின் விபரங்களை பள்ளிக்கல்வி துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டு என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வேலைநிறுத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் விவரங்கள், எத்தனை நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட வேண்டுமென பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

4 comments:

  1. வெளிப்படைத்தன்மை

    ReplyDelete
  2. oolal paninanavanga name ium ipadi seithal remba nalathu..

    ReplyDelete
  3. அடுத்த அரசு வந்தால்........இந்த அதிகாரியே காணாமல் போவார்.....

    யாப்பா உங்க பணி....இம் ......சிறப்பு......

    ReplyDelete
  4. Poramaiyin ucha kattam. Govt servants are always government servants. Government comes and goes but govt servants stays to see that.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி