ஜாக்டோ-ஜியோ போராட்டமும் ஆசிரியரின் குமறலும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2019

ஜாக்டோ-ஜியோ போராட்டமும் ஆசிரியரின் குமறலும்!

*ஆசிரியரின் குமறல்*

நான் ஒரு ஆசிரியர் ஆம் 25/01/2019 வரை இப்படித்தான் கர்வத்திலிருந்தேன் என் கர்வத்தை அடக்கி என்னை அசிங்கப்படுத்தி நாயினும் இழிந்தவன் உன் ஆசிரியன் என்று மாணவர்கள் வேலைதேடும் பட்டதாரிகள் பொதுமக்கள் நெஞ்சினில் பதியவைத்த ஆற்றல் மிக்க தமிழக முதல்வருக்கும் ஆசிரியனிடம்  படிக்காமலே பேரறிவு பெற்ற அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றிகள் குறிப்பாக ஒரு முகசவரத்திற்கு 80 ரூபாய் வாங்குகின்ற சவரத்தொழிலாளரோடு ஒப்பிட்டு என்னை பெருமைபடுத்திய பொதுமக்களுக்கும் மேலான நன்றிகள் அப்படி என்ன கேட்டுவிட்டேன் நான்? தமிழகமே என்னை காரித்துப்புகிறதே  பாவம் வாழ வழியில்லாத மிகக்குறைந்த ஊதியம் மட்டுமே பெறுகின்ற  I A S , I P S, நீதியரசர்கள் அமைச்சர் பெருமக்கள் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் முன்தேதியிட்டு ஊதியம் மற்றும் 21 மாத நிலுவைத்தொகை வழங்கினீர்களே அதை எனக்கும் தந்தால் நானும் என் குடும்பமும் மகிழ்ச்சியடைவோமே என்று கேட்டதுதான் பாவமா? இல்லை பணியில் சேர்ந்து 8 ஆண்டுகள் கழித்து 7 வது ஊதியக்குழு வந்தபிறகு ஊதியமாக 32000/ ரூபாய் (அதுவும் பிடித்தம் போக 27000/ ரூபாய்) பெறுகின்ற நான் இந்த 21மாத நிலுவைத்தொகையால் கோடீஸ்வரனாகி சுவிஸ் வங்கியில் பதுக்கி விடுவேன் என்ற பயமா? இல்லையென்றால் என்னைவிட ஒரு நாள் முன்பு பணியில் சேர்ந்தவருக்கும் எனக்கும் சுமார் 15000/ ரூபாய் வித்தியாசம் இருப்பதை தயவுசெய்து சரி செய்து தாருங்கள் என்று கெஞ்சி பார்த்து முடியாது என்று கைவிரித்த போது சென்னை நகர் வீதியிலே சேப்பாக்கம் மைதானத்திலே  D P I வளாகத்திலே விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டம் நடத்தி 4 நாட்கள் 6 நாட்கள் 8 நாட்கள் என உண்ணாநோன்பிருந்து மாணவர் நலன் பாதிக்காவண்ணம் கண்ணியம் காத்தோமே அதுதான் கிரிமினல் குற்றமா? C P S ல் நான் கட்டிய பணம் எங்கே? அரசின் பங்களிப்பு எங்கே என்று கேட்டதுதான் என்னை தீவிரவாதியாக சித்தரித்து விட்டதோ? பணி ஓய்வு பெற்றவர்களுக்கு  C P S பலன் இன்றுவரை முறையாகக் கிடைக்கவில்லை ஓய்வின்பின் இறந்துவிட்ட சுமார் 3600 பேர்க்கு தொகை கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை நாளை எனக்கும் இதுதான் கதியா ? என் குடும்பமும் நடுத்தெருவில் தானா? என்று கலங்கி கண்ணீர் விட்டதுதான் நான் செய்த பாவமா? 30 ஆண்டுகள் பள்ளியில் பணியாற்றி  இப்போது தான் சுமார் 50000/ ஊதியம் பெறும் ஆசிரியனை பார்த்து அரசு செலவில் படித்து பட்டம் பெற்று வெளிநாட்டில் இலட்சக்கணக்கில் ஊதியம் பெறும் என் மாணவனே என்னை பார்த்து உனக்கேன் இவ்வளவு ஊதியம் என்று கேட்கும் அற்புதக் காட்சி என்னை பரவசப்படுத்துகிறது தாயாக தந்தையாக இருந்து உங்கள் குழந்தைகளை வழிநடத்தி முதலெழுத்து துவங்கி முன்னேறும் வழிவகை காட்டி ஓய்ந்து போன என்னைப்பார்த்து பெற்றோர்களே கல்லெறிந்து மகிழ்வது தான் ஏனென்று  பரியவில்லை எனக்கு ஒருவேளை அவர்கள் அனைவரும் சொல்வதுபோல் நான் முட்டாள்தானோ? என் மாணவர் என்னைவிட அறிவாளியானபோது நான் மகிழ்ந்தது தவறா? தேர்வு பயத்திலே அவன் நடுங்கியபோது நான் தேற்றியது தவறா? எனக்கு உயர் அதிகாரியாக அவன் வந்த போது கண்ணீர் வழிந்தோட கட்டியணைத்து தவறா? தவறான புரிதல்களோடு தடுமாறி நின்றவனை கரம் பிடித்து நேர் வழி கொண்டு வந்தது தவறா? காலை 7 மணிக்கு சிறப்பு வகுப்பு நடத்தி மாலை 7 மணிவரை உடனிருந்து கற்றுக்கொடுத்தேனே அதுதான் தவறோ? அவன் தளர்ந்து போன ஒவ்வொரு கட்டத்திலும் உடனிருந்து தேற்றி தெம்பூட்டி  வெற்றியாளனாக மாற்றியது தான் பெருந்தவறோ? 2 மாத கோடை விடுமுறை 1 மாதமாக சுருங்கிற்று சனிக்கிழமை எல்லாம வேலைநாளாயிற்று காலாண்டு அரையாண்டு பண்டிகை காலமெல்லாம் சிறப்பு வகுப்புகள் ஆயிற்று அரசின் 14 வகை மாணவர் நலன் திட்டங்கள் நடத்தி தர உதவுவதும் என் வேலையாச்சு மாணவர்கள் வரும் போது போகும் போது சாலையில் நிற்கும் காவல்காரன் பணியும் நானே அலுவலகம் கேட்கும் அனைத்து தகவல்களையும் கொண்டு சேர்க்கும் தபால் காரனும் நானே பாம்பு வந்தாலும்பல்லி வந்தாலும் நாய் வந்தாலும் நோய் வந்தாலும் பதறுவது என்னவோ நான்தான் கற்றறிந்த வன் நான் அங்கன்வாடி ஆயாவாக என்னை மாற்றாதே என்றால் உங்களுக்கேற்ற கோபம் வருகிறது இதனால் மாண்டிசோரி பட்டம் பெற்றவர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறதே என்று நான் போராடினால் அவர்களே வைக்கிறார்கள் என் வேலைக்கு ஆப்பு 10000 ரூபாய் அரசுப்பணி என்றதும் 1000 ரூபாய்க்கு ஓடிய ரேசன் கடை கூட்டம் போல் படித்தவர் கூட்டம் ஓடுகிறது இந்த இழிநிலைக்கு உன்னை ஆளாக்கியது ஆசிரியர் அல்ல அரசுகள் தான் என்பது கூட புரியவில்லை உனக்கு நான் ஓய்வு பெற்ற பின்னர் அந்த இடத்தில் நீ வருவாய் இன்று எனக்கு ஏற்பட்ட இழிநிலை நாளை உனக்கும் வந்துவிடக்கூடாதே என்று நான் போராடினால் நீ என்னையே எதிரியாககப் பார்க்கிறாய் 3500 சத்துணவு மையங்களை மூடாதே 7000 பேரின் வேலைவாய்ப்பு பறிபோகிறதே என்று நான் போராடினால் என்னையே நீ எரிக்கப்பார்க்கிறாய் பள்ளிகளை இணைக்காதீர் புதிய வேலை வாய்ப்பு கள்ளக்குறிச்சி அடிபட்டு போகும் என நான் வடிக்கும் கண்ணீர் உனக்காகத்தான் என்பது கூட தெரியாமல் என் கன்னத்தில் அறைய நீயே கையை ஓங்குகிறாய் தென்னை மரம் ஏறும் தொழிலாளி பனைமரத்தொழிலாளி இளநீர் விற்பவர் c  காய்கறிக் கடைக்காரர் மண் வெட்டுபவர் முகச்சவரம் செய்பவர  ஊருக்கெல்லாம் சோறிடும் விவசாயி இவர்களெல்லாம் ஓயவூதியமா கேட்கிறார்கள் நீ மட்டும் கேட்கிறாயே என்று என்னை வசைபாடும் நல்ல உள்ளங்களே இதே கேள்வியை  I A S  I P S  உயர் அதிகாரிகளிடம் கேட்கத்தோன்றவில்லையே பாவம் அவர்கள் மரம் ஏழைககளல்லவா கவுன்சிலர் M L A, M P  மற்றும்  அமைச்சர்களிடம் உங்களுக்கு ஏன் ஓய்வூதியம் என்று கேட்கவில்லை பாவம் அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்  என்பதால் விட்டு விட்டீர்களா? 22 வயதில் ஆசிரியர் பயிற்சி முடித்து 13 ஆண்டுகள் பள்ளியில் நியாயமாகப் பணியாற்றி அரசின் அலட்சியத்தால் ஒரு ரூபாய் கூட ஊதியமாகப் பெறமுடியாமல் ஏமாந்து வாழ்விழந்து இறுதியில் 44 வயதில் அரசு பணி பெற்று மீண்டும் ஏமாந்து விடக்கூடாது என்று எனக்குரியதை முறையாகத் தாருங்கள் என்று நான் போராடினால் என்னை நீங்கள் செருப்பால் அடிக்க வருகிறீர்கள்  இன்று நான் போராடாவிட்டால் 50 வயதிலாவது உனக்கு அரசு பணி கிடைக்குமா என்ற தெரியவில்லை தமிழக அரசும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் மாறிவிட்டதை அறிவாயா நீ பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருவோரை வெளியேற்றிவிட்டு குறைந்த ஊதியத்தில் புதிய ஆட்களை பணியமர்த்தி கொள்ளை இலாபம் ஈட்டும் நயவஞ்சகம் அறிவாயா நீ 7000/ ரூபாய்க்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் பெற்ற போது அங்கே பறிபோனது உங்கள் நிரந்தரப்பணியிடம் வாய்ப்பு என்பது கூட புரியவில்லை உனக்கு அரசுகளைப்பிரித்து நம்மை அடிமைபடுத்திய வெள்ளையரைப்போன்று மக்களைப் பிரித்து ஓட்டுவேட்டையாடும் கட்சிகளைப்போல் உழைப்பவனுக்கு எதிராக உழைக்க துடிப்பவனை தூண்டி விடும் அரசின் அக்ற்புதத் திருவிளையாடல் புரியவில்லையா உனக்கு மாதா பிதா குரு தெய்வம் என்று வரிசைப்படுத்தி எனக்கு மகுடம் சூட்டிய முன்னோர்களின் நெஞ்சினில் எட்டி உதைத்து அவன் இவன் என்று ஏக வசனத்தில் பொது மேடையில் என்னை அசிங்கப்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வரின் கண்ணியத்திற்கு தலைவணங்குகிறேன் பாவம் அவரும் என்னைப் போன்ற பேராசைப் பிடித்த மோசமான ஆசிரியரால் பாதிக்கப்பட்டிருப்பாரோ எனக்கென்னவோ உன் கோபம் நியாயமாகத்தான் தோன்றுகிறது ஒருவேளை இன்றே நாங்களெல்லாம் இறந்துவிட்டால் நாளையே உனக்கு அரசு பணி கிடைக்குமா என்று தெரியவில்லை ஒருவேளை அதுவும் 10000 ரூபாய் ஒப்பந்த பணியாகிவிட்டால் ? உன் வாழ்க்கை வீணாகிப் போய் விடும் என்றுதான் நான் சாக மறுத்து போராடுகிறேன் மத்திய அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு சமமாக என்னையும் நடத்து என்று நான் கேட்பது எனக்காக  மட்டுமல்ல என்னை கொன்றுவிட்டு என் இடத்தில் நாளையே வரத்துடிக்கும் உனக்கும் சேர்த்துதான் மெட்ரிக் பள்ளிகளோடு அரசுப் பள்ளிகளை ஒப்பிட்டு பார்க்கிறாயே எம் மாணவர்களின் குடும்பச் சூழலைப் பார்த்திருக்கிறாயா? பெற்றோர்களின் வேறு பாட்டை அறிந்திருக்கிறாயா? உள்கட்டமைப்பை மதிப்பிட்டிருக்கிறாயா? 10 மற்றும் வகுப்பிலேயே 200 மதிப்பெண்கள் பெற்றதால் தனியார் பள்ளிகளிலிருந்து வெளியே தள்ளப்பட்ட குழநந்தைகளின் புகலிடம் அரசு பள்ளிதான் என்பது தெரியுமா உங்களுக்கு பணம் கட்ட வழியில்லாத குழந்தை களுக்கு நாங்கள்தான் ஆறுதல் என்பது தெரியுமா உங்களுக்கு? பாவம் நீங்கள்தான் 24000/ ரூபாய் ஊதியம் வாங்கும் கோடீஸ்வர இடைநிலை ஆசிரியரின மன்னிக்கவும் ஆசிரியனின் ஊதியத்தில் மலைத்துப் போய் நிற்கிறீர்களே பள்ளி வளாகத்தில் நான் வைத்த பூச்செடி கூட என்னை ஏளனம் செய்கிறது நீங்கள் செய்ய மாட்டீர்களா என்ன? மாணவன் என்னை வெறுக்கிறார் அவர் பெற்றோரும் என்னை வெறுக்கின்றனர் தனியார் நிறுவன ஊழியர் கூட வெறுக்கிறார் கூலி வேலை செய்து வரும் பாமரரும் என்னை வெறுக்கிறார் அரசும் ஆட்சியும் என்னை வெறுக்கிறது சக ஆசிரியரும் ஏன் என் வீடும் கூட என்னை வெறுக்கிறது வக்கற்ற வன் நானென்று எங்கே என்னை நானே வெறுத்து விடுவேனோ என்று எனக்கு பயமாக இருக்கிறது தற்கொலை கோழைத்தனம் என்று உனக்கு சொன்னது நான்தான் அந்த கோழைத்தனம் என்னிடம் வந்து விட்டதோ என்று எனக்கு பயமாக இருக்கிறது ஒருவேளை நான் செத்துப் போய்விட்டால் அந்த இடத்தில் நீ வருவாயா என்றும் எனக்கு தெரியவில்லை காரணம் உபரிப்பணியிடம் என்ற பூதம் உன் வாய்ப்பை தட்டிப்பறித்திடுமோ என்ற கவலை எனக்கு இதையெல்லாம் நான் ஏன் எழுதுகிறேன் யாருக்காக எழுதுகிறேன் ஒரே குழப்பமாக இருக்கிறது ஒருவேளை என் புத்தி பேதலித்து விட்டதோ என்னவோ உன்னிடம் கத்தி குத்து வாங்கி செத்துப் போனால் குழப்பம் தீருமோ உன் பெற்றோரை அழைத்து வந்து கட்டிவைத்து உதைத்தால் சரியாகிவிடுமோ பாலியல புகாரிலே மாட்டிவிட்டால் முடக்கி விடலாமோ அல்லது அரசு மூலம் சஸ்பென்ட் செய்து கிரிமினல்கள் முத்திரை குத்தினால் மாறிடுவேனோ ஆனால் எத்தனை பேரை மாற்றமுடியும் செவிலியர்கள் போராடுகிறார்கள் மருத்துவர்கள் போராடுகிறார்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் போராடுகிறார்கள் வனத்துறை வருவாய் துறை நீதித்துறை ஏன் தலைமைச் செயலகமும் களத்தில் தான் அப்படி என்றால் தவறு எங்கே இருக்கிறது உங்களுக்கு புரியும் படி நான் சொல்லியிருக்கிறேனா ஏதாவது புரிகிறதா என்று நான் கேட்க உங்களுக்கு மன உழைச்சல் ஏற்படுத்தியதாக வழக்கு பதிந்தால்? அரசுக்கு ஒரு எளிய கேள்வி மாணவர் நலன் என்னை சார்ந்தது என்றால் ஆசிரியர் நலன் யாரைச் சார்ந்தது கல்வி அமைச்சருக்கோ முதல் அமைச்சருக்கோ என்னோடு பேசுவது கௌரவக் குறைவான அல்லது நான் தீண்டத்தகாதவனா ஊதியம் மட்டுமே கூடயிருக்கிறதா ? காய் கனி முதல் கணினி வரை மற்ற பொருட்களின் விலை விலை யெல்லாம் 30 ஆண்டுகளாக  மாறாமல் அப்படியே இருக்கிறதா ? இன்னும் ஒரே ஒரு கேள்வி தவறாக நினைக்க வேண்டாம் தமிழக மக்களின் நலனுக்காக நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு தன் சொத்தை யெல்லாம் இழந்து மரம் ஏழையாகிவிட்ட தமிழகத்தின் அன்னை தெரசா நடிகை கஸ்தூரி அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள் முதல் திரைப்படத்தில் வாங்கிய அதே தொகையைத் தான் இறுதிவரை வாங்கினாரா? 6 வந்து ஊதியக்குழு வந்தபிறகு 25000/ பெற்ற நான் 7 வது ஊதியக்குழு வந்தபிறகு ஊதியமாக 32000/ பெறுவதில் எத்தனை கோடி வித்தியாசம்  இருக்கிறது என்பதை சொல்ல முடியுமா? இலட்சத்திற்கு மேல் ஊதியம் மட்டுமே பெறும் உயர் அதிகாரிகளை கைநீட்ட யாருக்கும் மனமில்லை என் போன்ற ஏமாளிகள் தான் அரசின் இலக்கா? ஐயா மீண்டும் ஒரு கோரிக்கை இவ்வளவு கேவலமான ஈனப்பிறவிகளான ( உங்கள் கூற்றுப்படி) ஆசிரியனுக்கு மாநில தேசிய நல்லாசிரியர் விருது கொடுக்கலாமா? அது அந்த விருதுக்கே அவமானமல்லவா? தயவுசெய்து வரும் ஆண்டுகளில் யாருக்கும் கொடுத்து விடாதீர்கள் உங்களின் நிதி நிலைமையை சீராக்க அற்புத யோசனை  ஒன்று தமிழ்நாட்டில் ஏறத்தாழ 12,5 இலட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொறுப்பை கொடுத்து பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் அரசு ஒப்பந்தத்தாரர்கள் மூலமாக எங்கள் அனைவருக்கும் ஆளுக்கொரு துளி விஷம் தந்து கொன்று விடுங்கள் 71/ விழுக்காடு பணம் மிச்சமாகும் எங்களை விதைத்த இடத்தில் 7000 ரூபாய் ஒப்பந்த தொழிலாளர்களை நியமித்து விடுங்கள் இல்லையெனில் ஆசிரியர்களே இல்லையென்று கணக்கு காட்டி அரசு பள்ளிகள் அனைத்தையும் மூடிவிடுங்கள் மிச்சமாகும் பணத்தில் சிலைகள் மணிமணடபஙகள்  நூற்றாண்டு வளைவுகள்  சாதனை விளக்க பொது கூட்டங்கள்  என் பயன்படுத்தலாம் ஆனால் தயவு செய்து பணம் இல்லையென்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த தவறவேண்டாம் முடிநந்தால் எங்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரே ஒரு நினைவுத்தூண் நட்டு வையுங்கள் அதில் அரசுப்பணியாளன் இங்கே அரசால் அடங்கிக் கிடக்கிறான் என்ற வாசகத்தையும பொறித்து வையுங்கள் நன்றியுடன் நாட்டைக் கெடுத்த ஆசிரியன் பின் குறிப்பு மொத்தமாக நாங்கள் இறப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பணி ஓய்வு பெற்ற அன்றே என்னை கொன்று விடுங்கள் ஓய்வூதியம் இல்லாமல் பிச்சை எடுத்து வாழ்வதை விட கௌரவமாய் இறப்பது நலம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி