ஐகோர்ட் தீர்ப்பை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல் செய்க - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2019

ஐகோர்ட் தீர்ப்பை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல் செய்க


சமவேலை சமஊதியம் என்ற நீதிமன்ற உத்தரவை கல்வித்துறை தற்காலிக, ஒப்பந்த வேலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த கோரிக்கை.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு அதே பணியை செய்யும் நிரந்தர ஊழியர்களைப்போல சம்பளம் நிர்ணயம் செய்ய நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையிலான மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பிப்ரவரி 22க்குள் தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை மட்டும் இல்லாமல், பள்ளிக்கல்விதுறையிலும் தற்காலிக ஒப்பந்த முறையில் ஜெயலலிதா ஆட்சியில் 2012ல் 16ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் தற்போது 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களே பணிசெய்து வருகின்றனர்.
உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் பாடங்களில் சிறப்பாசிரியர்கள் நிரந்தர ஊதியத்தில் ஏற்கனவே பணிபுரிந்து வருகின்றனர். கணினி அறிவியல், தோட்டக்கலை பாடங்களில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் இதே பாடப்பிரிவுகளை சேர்ந்தவர்கள், பள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 8 கல்வி ஆண்டுகளாக அரசின் எந்தவித பணப்பலன்களையும் பெறமுடியாமல் ரூ.7ஆயிரத்து எழுநூறு மிகக்குறைந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஒருமுறைகூட போனஸ் கொடுத்ததில்லை. வருடாந்திர 10% ஊதியஉயர்வும் சரிவர கொடுக்கவில்லை.
P.F., E.S.I., கிடையாது. பணியில் சேர்ந்து பின்னர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிதி எதுவும் வழங்கவில்லை.
மகளிருக்கு மகப்பேறு விடுப்பு எதுவும் கிடையாது,  இதர விடுப்பு சலுகைகள் எதுவும் இல்லை.
பள்ளி முழுஆண்டு தேர்வி கோடைகால விடுமுறையான மே மாதத்திற்கு  சம்பளம் தருவதுமில்லை.
எனவே தற்போது ஐகோர்ட் தீர்ப்பினை பள்ளிக்கல்வித்துறையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட வேலையில் ஒப்பந்த முறையில் தற்காலிக பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கும் அமுல்செய்ய வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இவண்
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல்  : 9487257203

38 comments:

  1. இப்ப இவர்களின் கோரிக்கைக்கு பதில் என்ன? பாவம் இல்லையா தற்காலிக ஆசிரியருக்கு 10 ஆயிரம் 8 ஆண்டு பணி புரிபவருக்கு 7700 என்னங்கட உங்க சட்டம் ஞாயம்? பொங்குன பங்காளிகளே பதில் என்ன? UGC வரையரை செய்த 50000 ரூபாய்க்கு இன்று வரை 15000 ஆயிரம் மட்டும் தான் அரசு கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் கொளரவ விரிவுரையாளருக்கு இது உழைப்பு சுரண்டல் இல்லையா பெங்குன போராளிகளே? அனைத்து சங்கங்களும் நிரந்தர பணியாளர்களை நியமித்து தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஒழிக்க வேண்டும் என போராடுகிறது Go 56 படியுங்கள் உங்களுக்கு புரியும், மீசை வச்ச போலி இராணுவ போராளிகளே, அரசு வேலைக்கு 10000 மட்டும் போதும் என்றால் எந்த ஏழை தாய் தந்தை இனி படிக்க வைப்பான் அதை விட வருமானம் ஆடு மேய்ப்பதில் வருமே என நினைக்க மாட்டானா? வேலை இல்லா திண்டாட்டத்திற்கு யார் காரணம் அரசின் தவறான கொள்கை முடிவு 620 க்கு மேற்பட்ட பி.எட் கல்லூரியை திறந்து விட்டு, கல்லூரிக்கு செல்லாமலே பட்டம் வாங்க அனுமதித்து விட்டு எதுவும் தெரியாது போல் அரசு இருந்து விட்டு, ஏகப்பட்ட தனியார் பள்ளியை அனுமதிக்க விட்டு 9, 11 ஆம் வகுப்பு நடத்தாமலே பொது தேர்வு எழுத விட்டு பின்பு ஆசிரியரின் பிள்ளையை மட்டும் அரசு பள்ளியிலே சேர்க்க வேண்டும் என கூவுவது என்னங்கடா உங்க ஞாயம், எந்த தனியார் பள்ளி , கல்லூரி முறைகேட்டில் ஈடுபட்டது என்று அங்கீகாரத்தை ரத்து செய்ததுண்டா? எல்லாம் அரசியல்டா? அதற்கு நாங்கள் முதல் பலி நீங்கள் இரண்டாம் பலி, இந்த நாடும் நாட்டு மக்களும்........

    ReplyDelete
  2. அதிகம் சம்பளம் வாங்குபவர்களுக்கு அதிக பட்ச ஊதியமே 15000 கொடு எப்படி நடத்துவார்கள் என்று பார்ப்போம் குடும்பத்தை......!?அடுத்தவர்களை பற்றியும் சிந்திக்கனும்!?

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் சிந்தித்ததின் விளைவே GO 56 ஒழிக்க வேண்டும் என போராடுவது, சம வேலைக்கு சம ஊதியம் கொடு என்பது எங்கள் தரப்பு வாதம்,அதை செய்ய வேண்டியது அரசாங்கம்

      Delete
  3. பகுதி நேர ஊழியர்களுக்கு சம ஊதியம் கொடுப்பதற்கு பதிலாக ஒரு தேர்வு வைத்து நிரந்தர ஊழியர்களை கொண்டு வந்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விடும்.

    ReplyDelete
    Replies
    1. சரிதான் நாங்களும் அவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு நடத்துங்கள் என்று கூறுகிறோம்

      Delete
    2. தேர்வு என்றால் அனைவருக்கும் பொது.

      அனைவரும் தேர்வு எழுதுவார்கள்.

      அவர்ளுக்கு மட்டும் தேர்வு நடக்காது.

      தேர்ச்சி பெற்றால் மட்டும் பணி.

      Delete
  4. தேர்வில் வெற்றி பெற்று பணி வாங்க வேண்டும். PTA மூலம் பதவி க்கு சென்று இப்படி சம ஊதியம் கேட்பது தவறு.

    ReplyDelete
    Replies
    1. தற்காலிக பணியாளர்களாக 20 ஆண்டு வேலை செய்பவர் ளை அப்படியே வீட்டுக்கு அனுப்பி விடலாமா தோழரே

      Delete
    2. நான் அப்படி சொல்லவில்லை.

      நீங்கள் தேர்ச்சி பெற்று முழு ஊதியம் வாங்குங்கள்.

      Delete
    3. தேர்வு எழுதாமல் நிரந்தரப் பணியில் முழு ஊதியம் பெறுபவர்கள் ? அப்படியென்றால் நிரந்தரப் பணியிலிருக்கும் அனைவருக்கும் பொதுவாக ஒரு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பணி என்பதே சரியாக இருக்கும்.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. தேர்வு, தேர்வு என்று மீண்டும் மீண்டும் 
      நீங்கள் வழியுறுத்துவதன்மூலம் 
      இந்த மத்திய அரசின் நீட்தேர்விற்கான பிரச்சாரத்தில்
      கூறிய தரமான மாணவர்களைத்தேர்ந்தெடுக்க தான்,
      என்று கூறியது அதே நேரத்தில்
      CBSc யின் தரமற்ற செயல்பாடுகள் ஆன 
      கேள்வி தாளில் குளறுபடி,
      மாணவர்களுக்கு தேர்வு இடங்கள் ஒதுக்குவதில் குளறுபடிகள் என்று பலவற்றை 
      செய்து 
      தமிழக அரசின் மருத்துவ சீட்டுகளை பொதுவாக மொத்ததில் கொண்டுசென்று வைத்துக்கொண்டு
      தமிழகத்தில் உள்ள ஏழைஎளியமாணவர்களின் மருத்தவர் ஆகும் கனவை பரித்துவிட்டது...

      அது போல

      தமிழ்நாட்டில்
      தகுதி தேர்வு என்ற போர்வையில்
      Tet,trb, polytechnic, college professors,
      தகுதித்தேர்வில் 
      நடந்த குளறுபடிகள்,
      லஞ்சம் லாபன்மியம
      போன்ற
      கொடுமைகள் அரங்கேற்றம் ஆகிவருகிறது....

      படித்த பட்டதாரி ஆசிரியர்கள் அதிமாக
      இருக்கும் போது வாய்ப்புகளைப்பெருக்குவதற்கு என்ன செய்வது????????? என்று தான்
      ஒரு நல்ல அரசு முயற்ச்சிக்க வேண்டுமமே 
      தவிர
      அதை விட்டு
      போட்டித்தேர்வு என்ற போர்வையில்
      எப்படியெல்லாம் பணம்பரிக்கலாம் என்று யோசித்து செயல்பட கூடாது.

      தகுதி என்பது வாய்ப்புகளைக் உருவாக்கி கொடுத்து நிர்ணயிக்கனுமே
      தவிர
      குறைந்த வாய்ப்புகளைக் கொடுத்து சோதிப்பது அல்ல...

      தகுதி சூழ்நிலையில் தானாகவே உருவாக்கி கொள்ள முடியும்....

      Delete
    6. ஏதாவது கருத்து சொல்ல வேண்டுமெனில் உண்மைநிலை தெரிந்து சொல்ல வேண்டும் இல்லையெனில் பேசவேக் கூடாது தோழரே PTA என்கிறீர்களே மத்திய அரசின் SSA திட்டத்தில் போடப்பட்டதை மாற்றக் கூறி உங்கள் தரத்தைக் குறைத்துக் கொள்ளாதீர் நண்பரே....

      Delete
  5. PTA ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது இது தற்காலிகம் என்று கூறும்போது சம ஊதியம் எப்படி கொடுப்பார்கள்.

    சம ஊதியம் வேண்டுமென்றால் நீங்கள் பணிக்கு செல்ல வேண்டாம்.

    காலி பணியிடம் உருவானால் அரசு தேர்வு வைத்து பணி நிரப்பும்.

    தேர்வானவர்கள் பணிக்கு சென்று முழு ஊதியம் பெற்றுகொள்ள வேண்டும்.


    இப்படி குறுக்கு வழிகளை கையில் எடுக்க வேண்டாம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. TN முழுவதும் பகுதி நேர பணியாளர்களுக்கு பதிலாக ஒரு பொது தேர்வு நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர பணியாளர்களாக பணி அமத்த வேண்டும்.

    இதுவே நிரந்தர தீர்வு.

    No temporary job.....

    ReplyDelete
    Replies
    1. நிரந்தர பணியிடம் இனி இல்லை GO No 56

      Delete
  8. Constitution of Staff Rationalisation Committee – Appointment of Chairman and
    Terms of Reference – Orders – Issued.
    Finance (CMPC) Department
    G.O.Ms.No.56 Dated:19-02-2018,
    Hevilampi, Maasi-07,
    Thiruvalluvar Aandu, 2049.
    *******
    ORDER:
    The Official Committee, 2017 constituted to make necessary
    recommendations on revision of scales of pay and allowances for State Government
    Employees and Teachers including employees of Local Bodies has inter-alia
    recommended to constitute a Staff Rationalisation Committee to evaluate the staff
    structure in various Departments and identify non-essential posts so as to reduce the
    revenue expenditure and also identify the categories of posts which can be
    outsourced or appointed through contract appointment for an initial period as a
    measure to control expenditure.
    2. After careful consideration, the Government has decided to
    constitute a Staff Rationalisation Committee. Accordingly, Government constitutes a
    “Staff Rationalisation Committee” duly chaired by Thiru.S.Audiseshiah, IAS (Retd.),
    former Principal Secretary to Government of Tamil Nadu.
    3. Thiru.M.A.Siddique, I.A.S., Secretary (Expenditure), Finance Department
    shall be the Ex-officio Secretary to the Staff Rationalisation Committee. Orders in
    respect of the other supporting staff to the Committee shall be issued separately.
    TERMS OF REFERENCE:
    4. The following shall be the terms of reference for the Staff Rationalisation
    Committee:
    i) To evaluate the staff structure in various departments and identify
    non-essential posts, so as to reduce the revenue expenditure and also
    identify the categories of posts which can be outsourced or appointed
    through contract appointment for an initial period as a measure to control
    expenditure.
    ii) Consider any other relevant issue concerning administrative expenditure
    management in Government and Government agencies and make suitable
    recommendations.
    5. The tenure of the Committee shall be for a period of six months from the
    date of constitution. The Committee shall submit its report to Government within the
    above period.
    ..p.t.o..

    ReplyDelete
  9. AMMAA konduvanthu posting pottuviduvaargal ippadi arumaiyaaga vaazhavum mudiyaamal saagavum mudiyaamal.... Mahaththaana Thittam

    ReplyDelete
  10. பகுதி நேர சிறப்பாசிரியர் உங்க மனதுக்கு ஒரு கேள்வி நீங்க எந்த திறமை அடிப்படையில் நியமிக்கப்பட்டீர்க என்பதை தெரியபடுத்தவும் நானும் 2012 CV ல் கலந்துகொண்டவன்

    ReplyDelete
    Replies
    1. Sir yengaluku 3 round interview nadandhuchi

      Delete
    2. Yes yega district Salem la kuda 2 time interview nadandhuchi then education qualification ah Vida extra course subject based irukavagala matudha interview ku kupitaga my qualifications apo m.sc computer science b.ed and pgdca and dtp computer languages c, c++, java.completed.ipadidha select panaga.

      Delete
  11. தேர்வு வைத்து TRB CPEd/DPEd/BPE தகுதி உடையவர்களை தெரிவு பட்டியலில் இடம்பெறாமல் வைய்த்துள்ளது இந்த தகுதிவுடைய பகுதிநேர சிறப்பாசிரியர்களின் நிலை என்னவாகும் என்பதையும் கூறவேண்டும்

    ReplyDelete
  12. CPEd/DPEd முடித்தவர்கள் கவனத்திற்க்கு நீங்கள் விழித்துக்கொள்ளுங்கள் CASE போட்டுள்ளவர்களுக்கு நேயமான தீர்ப்பு வந்தால் மட்டுமே நீங்க Safe zone

    ReplyDelete
  13. தேர்வு, தேர்வு என்று மீண்டும் மீண்டும் 
    நீங்கள் வழியுறுத்த வருவது

    மத்திய அரசின் நீட்தேர்விற்கான பிரச்சாரத்தில்
    கூறிய,
    தரமான மாணவர்களைத்தேர்ந்தெடுக்க தான்,
    என்று கூறியதும்

    அதே நேரத்தில்,
    ஒரு புறம்
    CBSc யின் தரமற்ற செயல்பாடுகளான
    கேள்வி தாளில் குளறுபடி,
    மாணவர்களுக்கு தேர்வு இடங்கள் ஒதுக்குவதில் குளறுபடிகள்  
    செய்து மன ஊளைச்சளைக்கொடுத்துக்கொண்டு
    மறுபுறம்
    தமிழக அரசின்
    மருத்துவ சீட்டுகளை பொதுவாக மொத்ததில் கொண்டுசென்று வைத்துக்கொண்டு
    தமிழக ஏழைமாணவர்ளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தக்கூடிய மருத்துவ கனவை சிதைத்து கொண்டு இருக்கின்றீர்கள்....

    அது போல
    தமிழ்நாட்டில்
    ஒருபுறம்
    தகுதி தேர்வு என்ற போர்வையில்
    Tet,trb, polytechnic, college professors,
    தகுதித்தேர்வில் 
    குளறுபடிகள் மூலம்
    லஞ்சலாவன்யம் செய்து கொண்டு,
    மறுபுறம்
    நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள்
    முடிக்க முயற்சி செய்யாமல்,
    அரசின் கொள்ளை(கை)முடிவு என்று கூறி
    பல்லாயிரக்கணக்கான வேலையில்லாபட்டதாரிகளின் வாழ்க்கை யை கேள்வி க்குறியாக்கிக் கொண்டு இருக்கிறது....

    படித்த தேர்வகள் அதிமாக இருக்கும் போது வாய்ப்புகளைப்பெருக்குவதற்கு என்ன செய்வது??????????????? என்று தானே
    ஒரு நல்ல அரசு முயற்ச்சிக்க வேண்டும்.. 
    தவிர
    அதை விட்டு
    போட்டித்தேர்வு என்ற போர்வையில் எப்படியெல்லாம் பணம்பரிக்கலாம் என்று யோசித்து செயல்பட கூடாது.

    தகுதி என்பது வாய்ப்புகளைக் உருவாக்கி கொடுத்து நிர்ணயிக்கனுமே தவிர
    குறைந்த வாய்ப்புகள் கொண்டு சோதிப்பது அல்ல...
    தகுதி சூழ்நிலையில் தானாகவே உருவாக்கி கொள்ள முடியும்....

    ReplyDelete
  14. Idhula yegaluku posting podavenam nu soilara yelarayum onnu kekanu yegala job vitu yeduthuta ungaluku happy apadidhana yena andha 12000 posting ku again 7700 salary ku kupita ponum apadithana try pandriga sir indha strike la temporary posting ku yevlo per apply paniga yelarum atleast gov job nu ulla poita podhum nudhana try paniga nagalum apadi dha vandhom unmaya inga sevaidha seiyarom 7 varusama 7700 salary full-day work watchman to pg techer seiyara vela yelathayum seiyarom avlo kastam 8 year ku aparam yegala job vitu anupita avlo happy ungaluku yevlo per kastathula irukaga therijikoga then engala exam pass pana soilara silaruku soilikarom yegalayum CEO deo control la exam interview nu vachidha select panaga.

    ReplyDelete
  15. பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு (Bpe/c.ped/d.ped) நிரந்தரம் என்பது? ??ஏன்னெனில் அவர்கள் 1to5வரை உள்ளவகுப்புக்கு மட்டுமே தகுதியானவர்கள் என அரசு சொல்கிறது.மதுரை கோர்ட்டில் வழக்கு உள்ளது. தீர்ப்புஅரசுக்கு சாதகம் எனில்???சிலர் மட்டுமே வழக்கு போட்டுஉள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. M.sc b.ed mudichirukom computer techers Nagalum 5 th Class ku dha thagudhi Iruka sir apo 11 th 12 th ku Google CEO va appointment panuvagala sir

      Delete
  16. Private school la work panravanka enna panradu. Test pass panni job ku vanka.

    ReplyDelete
    Replies
    1. Private school la tet vaikaragala neyala yepadi teacher ana naga work education teachers tet for subject teacher adha oluga therijitu vandhu pesuga thaiyal teachers ku tet la yena question kepiga shirt ku thuni yendha size la cut pannaum nu kepigala

      Delete
  17. பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் கேட்டால் உங்களுக்கு ஏன் இப்படி கோபம் வருகிறது இந்தியன் அவர்களே முதலில் உங்கள் பெயரை பதிவிட்டு பேசுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி