ஏழு ஆண்டுகளாக எந்தச் சலுகைகளும் இல்லை: கேள்விக்குறியாகும் பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்காலம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2019

ஏழு ஆண்டுகளாக எந்தச் சலுகைகளும் இல்லை: கேள்விக்குறியாகும் பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்காலம்


ஏழு ஆண்டுகளாக எந்த விதமான சலுகைகளும் வழங்கப்படாத நிலையில் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட அறிவிப்புகளை அரசு வெளியிட வேண்டும் எனபகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் கடந்த 2012-ஆம் ஆண்டு 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி போன்ற பாடங்களைக் கற்பிக்க கடந்த 2012-ஆம் ஆண்டு 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் வாரத்துக்கு மூன்று அரை நாள்கள் வீதம் மாதத்துக்கு 12 அரை நாள்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்.இதையடுத்து வந்த ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அரசின் சார்பில் ஏற்கப்படாததால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேறு பணிகளுக்குச் சென்று விட்டனர். நிகழாண்டு நிலவரப்படி சுமார் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில்பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு மாதந்தோறும் தொகுப்பூதியமாக 5 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் ரூ.2,700 மட்டும் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.7,700 வழங்கப்படுகிறது.ஆண்டுதோறும் தமிழக நிதி நிலை அறிக்கையின்போது பகுதி நேர ஆசிரியர்களுக்காக ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஒரு அறிவிப்பு கூட வெளியாகவில்லை.

பிற மாநிலங்களில்...

இது குறித்து தமிழ்நாடு அனைத்துப் பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.செந்தில்குமார் கூறியது: ஆந்திர மாநிலத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14ஆயிரத்து 203 வழங்கப்படுவதோடு பெண் ஆசிரியர்களுக்கு 6 மாத மகப்பேறு விடுப்பும் தரப்படுகிறது. மேற்குவங்க மாநிலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியின்போதுஇறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியாக ரூ.2 லட்சம் தரப்படுகிறது. ஆனால் தமிழத்தில் மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. மேலும் பி.எஃப்., இஎஸ்ஐ, போனஸ் என எந்தவிதச் சலுகைகளும் இல்லை. வாரத்துக்கு மூன்று அரை நாள்கள் என்றாலும் பெரும்பாலும் அனைத்து நாள்களிலும் பணியாற்றி வருகிறோம். வழக்கமான பணிகளைத் தவிர்த்து பள்ளி தொடர்பான பல்வேறு பணிகளிலும் எங்களை ஈடுபடுத்துகின்றனர்.மிகவும் குறைவான ஊதியம்: அரசு வழங்கும் ரூ.7,700 தொகுப்பூதியத்தைக் கொண்டு அன்றாடத் தேவைகளில் 50 சதவீத அளவுக்குக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. வாடகை, குழந்தைகளின் கல்விச் செலவு அதிகரித்து வரும் நிலையில் இவற்றை எதிர்கொள்ள முடியாமல் பகுதி நேர ஆசிரியர்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். எனவே சமவேலை சமஊதியம் வழங்கினால் மட்டுமே எங்களது வாழ்வாதாரம் மேம்படும்.அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதற்கு முன்பாக அரசு கேட்கும் உரிய கல்வித்தகுதி உள்ள எங்களுக்கு முதல் கட்டமாக அனைத்து வேலைநாள்களிலும் முழுநேரப்பணி ஊதிய உயர்வுடன் வழங்க வேண்டும். தற்போது 11 மாதங்களுக்கு சுமார்ரூ.100 கோடி சம்பளமாக செலவாகிறது. சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கினாலே போதுமானது என்றார்.

பணி நிரந்தரம் சாத்தியமில்லை:

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறியது: பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது சாத்தியமில்லை. ஏற்கெனவே அறிவித்தபடி அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றனர்.

27 comments:

  1. இவர்களுக்காக போராடியவர்கள் நிலை......நம்மில் துரோக கூட்டம் உண்டு .....நீங்களே அவதி படும் போது.......அரசு அழைத்த உடன் வந்த கூட்டத்தை என்ன சொல்வது......அவர்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால்.......என்ன செய்ய அரசியலை முதலில் கற்றுக்கொள்ளுங்கள் ஆசிரியர் பெருமக்களே.....இனி அரசை நம்பி பிரயோஜனமில்லை........குடும்ப தேவைகளுக்கு மாற்று பணியினை சிந்தியுங்கள்.....

    ReplyDelete
  2. தயவுசெய்து நீங்கள் ஒருமணதாக ஒரே சமயத்தில் வேலையை விடும் பட்சத்தில் அரசு செய்வதறியாமல் உங்களுக்கு நல்வலி தோன்றலாம்

    ReplyDelete
  3. Part time job not a permanent job .test pass panni job ku vanka friends.

    ReplyDelete
    Replies
    1. Exam pass pannitten udane posting pottangala entha joke adikkiringalo

      Delete
    2. Exam pass pannitten udane posting pottangala entha joke adikkiringalo

      Delete
  4. Yegada inum orutharum varalaye nu nenacha exam pass pana soili yarachum varuviga nu nenacha tet exam only for subject teachers idhuvara tet exam work education teachers Ku nadakala then apadiye irukatum engala permanent panitu time kuduga one exam or two exam vachitu pass panuga nu panati job vitu yeduthuruvom nu adhu yena sir regular teachersku oru neyam yegaluku oru neyam nailarukey idhu part time teachers nu vandhaley idhey velaya pochi tet pass panuga nu oru group kelambudhu.

    ReplyDelete
  5. Yen sir tet pass panita compulsory posting nu gov soilalaye it's eligible for gov teachers post it's validity only for 5 year it's also same as bank exam aparam ye 2012 2013 la pass panavaga posting kekariga once pass panita gov ungaluku job tharanu soilaye aparam ye part time teachers naga already gov job poitom ine yegala permanent panitu regular teachers Pola time kuduthu exam pass pana soiluga pass panuvom.

    ReplyDelete
  6. Subject teachers vera work education teachers vera 8 varusama kothadima Pola kastapata naga yegala permanent pana ungaluku yena problem inga yelam pg graduate b.ed staffs dha irukom

    ReplyDelete
  7. Terms and conditions
    இது முற்றிலும் தற்காலிகமானது

    ReplyDelete
    Replies
    1. Sir 2004 and 2006 temporary post terms and conditions paruga sir

      Delete
  8. எந்ந நேரத்திலும் முன்னறிவிப்பின்றி வெளியேற்றப்படலாம் இதில் நீங்கள் கையொப்பம் இடவில்லை என நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. Yela government temporary post and regular post indha word varum sir

      Delete
  9. உங்களை இந்தவேளை செய்யவேண்டும் என அரசு கட்டாயபடுத்தவும் இல்லை இதைவிட அதிக சம்பளத்தில் உங்களுக்கு பணி காத்திருக்கின்றது என நினைக்கின்றேன்

    ReplyDelete
  10. 2004 and 2006 temprarte post terms and conditions paruga.avagal yepadi regular teachers ah potaga

    ReplyDelete
  11. நீங்கள் வேலையை விட்டு வெளியே வரும் பட்சம் தீர்வு வரும் ....நீங்கலாம் neengalaam waste ...u didnot goto part time teacher...now neengalaam goverment staff

    ReplyDelete
  12. no gain for all of them....only experience there.....

    ReplyDelete
  13. 2012 பிறகு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி Exam எழுதிதான் முழுநேர பணிக்கு செல்லமுடியும் என்பதை தாங்கள் அரியாமல் இருக்கமாட்டீர்கள்

    ReplyDelete
  14. CPEd,DPEd முடித்தவர்களின் தலையெழுத்து இப்பொழுது நீதிமன்றத்தில் உள்ளது அவர்கள் Exam எழுதி BPEd,MPEd முடித்தவர்களைவிட அதிக மதிப்பெண் எடுத்தும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் CPEd,DPEd முடித்தவர்கள் உங்க பகுதிநேர ஆசிரியராக இல்லையா அவர்களின் எதிர்காலம் ?

    ReplyDelete
    Replies
    1. Exam pass pannittu 8yrs part time teacher work pannittu wait pandrom poi velaiya parungaiya

      Delete
    2. Exam pass pannittu 8yrs part time teacher work pannittu wait pandrom poi velaiya parungaiya

      Delete
    3. Exam pass pannittu 8yrs part time teacher work pannittu wait pandrom poi velaiya parungaiya

      Delete
  15. அவர்களுக்காக உங்களின் Voice எங்கும் இல்லையே திறமையானவர்கள் வேளைக்கு போககூடாதுனு நினைக்கீறிங்களா?

    ReplyDelete
  16. Sir adhukaga indha job ah nambi irukavaga velaya vitu poita 8 varusama temporary job la irudhutu vera place poitu job keta nega kudupigala illa 8 year la yevlo perku age bar agi gov exam apply Pani yeludha mudiyama ponavagala la yena panalam nu soilavariga yeva yepadi pona yena part time teacher velaya vitu pona again temporary post pota job kedaikum nu oru thought Anna yepa savan thinna yepa kaliyagum nu irukiga

    ReplyDelete
  17. IPA Iruka part time teachers Ku yena thirama illa nu nenaikariga sir computer m.sc b.ed mudichitu tet illa trb illa ye syllabus kudailla naga la yega sir poradhu part time teacher nu pesariga sir idhula computer teachers ah exam vachidha yeduthaga CEO deo level la sila place la interview nu vachi yeduthaga computer teacher nelamaya school la keluga 8 varusama inga irudhutu vera private side la kuda yegala job Ku select panamataga avagaluku freshers venum think panuga sir part time teacher apadinaley verupa parkadhiga

    ReplyDelete
  18. Sir manusana porandha asai padadha seiva sir asai padadhava manusa illa sir avaga kudukara 7700 salary podhuma sir soiluga perukudha part time Saturday kuda work pana vaikaraga IPA work agara emis kaga yevlo kasta patom adhala part time teachers Ku theriyum summa terms and conditions paruga nu soiladhiga

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி