ஒப்புகை சீட்டு தரும் இயந்திரம்; லோக்சபா தேர்தலில் அறிமுகம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2019

ஒப்புகை சீட்டு தரும் இயந்திரம்; லோக்சபா தேர்தலில் அறிமுகம்


குறிப்பிட்ட வேட்பாளருக்கு தான் ஓட்டு பதிவானதா என்பதை சரிபார்க்க ஒப்புகை சீட்டு இயந்திரம் வரும் லோக்சபா தேர்தலில் முழுமையாக பயன்படுத்தப்படும்' என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.பாக்கியராஜ் தாக்கல் செய்த மனு: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் வந்த பிறகும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வருகின்றன. இயந்திரத்தில்கட்சிகளின் சின்னங்களை பொருத்தும் போது தில்லுமுல்லு செய்யப்படுவதாக அரசியல் கட்சிகள்கூறுகின்றன.

வாக்காளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த அவர்கள் பதிவு செய்த ஓட்டுகள் குறிப்பிட்ட வேட்பாளர் பெயரில் பதிவாகிறதா என்பதை சரிபார்க்கும் வசதி உடைய ஒப்புகை சீட்டு இயந்திரங்களை ஓட்டு சாவடிகளில் வைக்க வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில் இந்த வசதிகளை ஏற்படுத்த தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு நீதிபதிகள் மணிக்குமார் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜரானார்.

தேர்தல் கமிஷன் சார்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் வாதாடியதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படிஓட்டுப்பதிவை சரிபார்க்கும் வசதியை படிப்படியாக அமல்படுத்த துவங்கி விட்டோம்.2017ல் தேர்தல் கமிஷன் கூட்டிய அனைத்து கட்சிகள் கூட்டத்தில் 2019 தேர்தலின் போது ஓட்டுப்பதிவை சரிபார்க்கும் வசதியை முழுமையாக அமல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் வாதாடினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை தேர்தல் கமிஷன் அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளதால் மனுவை முடித்து வைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

3 comments:

  1. The slip should be teared and disposed inside the booth. otherwise others will find your choice.

    ReplyDelete
  2. You can't take any slip .only you can see your choice

    ReplyDelete
  3. You can't take any slip .only you can see your choice

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி