மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 17, 2019

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!


45 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாலே போதுமானது...! மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை பணி நிரந்தரம் செய்யலாம்....

தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் 1.5 இலட்சம் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு கல்வி , பயிற்சிகள் மற்றும் அரசுநலத்திட்ட உதவிகள் பெற்று தரும் 1761 சிறப்பு பயிற்றுநர்கள் 1998 முதல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்...

பார்வைகுறைபாடு , செவித்திறன் குறைபாடு , கை கால் இயக்க குறைபாடு , ஆட்டிசம் , மூளை முடக்கு வாதம் , மனவளர்ச்சி குறைபாடு கற்றல் குறைபாடு , அதீத துறுதுறு செயல்பாடு கொண்டவர்கள் ஆகிய மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சேவையாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் கோரிக்கை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர், ஆளுநர், கல்வி துறை அமைச்சர், பள்ளி கல்வித் துறை செயலாளர் , மாநில திட்ட இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை செயலாளர் , நிதித்துறை அதிகாரிகள் ஆகியோரை பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்கள்..

சமீபத்தில் டி.பி.ஐ வளாகத்தில் 8 நாட்களாக நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தின்போது சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, டிசம்பர் 3 மாற்றுத்திறனாளிகள் இயக்கத்தின் தலைவர் தீபக் , அரசியல் கட்சி தலைவர்கள் அன்புமணி ராமதாஸ், தொல்.திருமாவளவன் , சீமான் , ஜி.கே.வாசன் ,ஏ.கே.மூர்த்தி, பழ.நெடுமாறன், முத்தரசன், பால கிருஷ்ணன் , மல்லை சத்யா, எல்.கே.சுதீஷ் , வெற்றிவேல் , ஆகியோர் நேரில் சந்தித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்...

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி, பேச்சு பயிற்சி, உமிழ்நீர் கட்டுப்படுத்தும் பயிற்சி, கற்றல் குறைபாடு களைய தனிக்கவனம், அதீத துறுதுறு செயல்பாடுகள்  கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி ஆகிய போற்றுதலுக்குரிய சிறப்பான பணி காரணமாக பயனடைந்து வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள்  பொதுமக்கள் சிறப்பு பயிற்றுநர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி  சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் ஆதரவு குரல் கொடுத்தனர்..

பிற மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களுக்கு மாத ஊதியம் டெல்லியில் 41750 , ஆந்திராவில் 21000 , மகாராஸ்டிராவில் 30759 , கர்நாடகாவில் 20000 , புதுச்சேரியில் 20000 , கேரளாவில் 27000 , ஹாரியானாவில் 42409 , ஆனால் தமிழ்நாட்டில் 14000 மட்டுமே வழங்கப்படுகிறது என்பது வருத்தத்திற்கும் வேதனைக்குரியது..

நாடு முழுவதும் மனித வள மேம்பாட்டு துறை மூலமாக ஒருங்கிணைந்த கல்வி என்ற பெயரில் ஒரே மாதிரியான செயல்பாடுகள் பணிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஊதியம் வழங்குவதில் வேறுபாடு உள்ளதென்பது பாரபட்சமான நடவடிக்கை சட்டவிரோத நடவடிக்கையாக உள்ளது.

ஆந்திரா கேரளா டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிறப்பு பயிற்றுநர்களை மாநில அரசு பணிநிரந்தரமாக்கி காலமுறை ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் 1761 மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்களை தமிழகஅரசு பணிநிரந்தரம் செய்ய 79 கோடி தேவையென நிதித்துறை மூலமாக கணக்கிடப்பட்டுள்ளது..

இதில் மத்திய அரசு ( MHRD ) மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஆண்டுத்தோறும் 12 மாதங்களுக்கு 34 கோடி நிதியினை வழங்குகிறது..

எனவே 1761 பட்டதாரி / இடைநிலை சிறப்பு பயிற்றுநர்களை தமிழக அரசு பணி நிரந்தரம் செய்ய 45 கோடி நிதியினை மட்டும் ஒதுக்கீடு செய்தாலே போதுமானது.

பல்வேறு திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை நிதிஒதுக்கீடு செய்யும் தமிழக அரசு கடந்த 21 ஆண்டுகளாக (1998 to 2019) லட்சக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கருணையோடு, தொண்டுள்ளத்தோடு சொற்ப ஊதியத்தில் எவ்வித அடிப்படை பணிச்சலுகையின்றி பணித்தளத்தில் உரிய அங்கீகாரம் கூட இல்லாமல் தொகுப்பூதியத்தில்  பணியாற்றி வரும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு 45கோடி நிதியினை ஒதுக்கீடு செய்து பணிநிரந்தரமாக்கி வாழ்வாதாரம் காத்திட வேண்டும என்று தமிழ் நாடு - ஒருங்கிணைந்த கல்வி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

7 comments:

  1. Unga job la conform pana mufiyadhu next election la veetuku fridge ac washing machine la free ah kudukanum so ine yelam part time temporary matudha

    ReplyDelete
  2. Yenaga teachers negalam ungalauku dha 14000 adhiga patchama tharagala aparam yena pavam mla yelam verum 1.5 lakh dha vagaraga pavam la avaga.

    ReplyDelete
  3. Uyira kudthavanukey verum 20 lakh dha tharaga ungaluku 14000 romba adhigam

    ReplyDelete
  4. தமிழக அரசு நியாயமான கோரிக்கை யை ஏற்க வேண்டும்...

    ReplyDelete
  5. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பணி செய்வது மகத்தான சேவை உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்....

    ReplyDelete
  6. தமிழக அரசு கண்டிப்பாக இவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் இவர்களின் பணி சிறப்பான பணி மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஒலி ஏற்றுங்கள்.

    ReplyDelete
  7. Matruthiranaligal valvil oli erum ivargalin valvu irutukkul irukirathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி